சாக் காசினி

பிரெஞ்சு வானியலாளர் (1677-1756)

சாக் காசினி (Jacques Cassini, 18 பெப்ரவரி 1677 – 16 ஏப்ரல் 1756) என்பவர் ஒரு பிரான்சிய வானியலாளரும், புகழ்பெற்ற இத்தாலிய வானியலாளர் ஜியோவன்னி டொமினிகோ காசினியின் மகனும் ஆவார்.

சாக் காசினி
Jacques Cassini
பிறப்பு(1677-02-18)18 பெப்ரவரி 1677
பாரிசு வான்காணகம்
இறப்பு16 ஏப்ரல் 1756(1756-04-16) (அகவை 79)
தூரி
துறைவானியல்

காசினி பாரிசு வான்காணகத்தில் பிறந்தார். இவர் 17-ஆவது அகவையில் பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 1696 இல் இலண்டன் அரச கழகத்தில் ஆய்வாளராக இணைந்து, 1706 இல் கணக்கியல் மேலாளரானார். 1712 இல் பாரிசு வான்காணகத்தில் தந்தையின் இடத்துக்கு நியமிக்கப்பட்டார். 1713 இல் 1713 இல் அவர் பாரிசு நெடுவரையை விரிவுபடுத்தி, டன்கிர்க்கில் இருந்து பெர்பிக்னன் வரை நெடுவரையின் வளைவை அளந்து, அதன் முடிவுகளை Traité de la grandeur et de laFigure de la Terre (1720) என்ற தலைப்பில் வெளியிட்டார்.[1] நெடுவரை வளைவின் அளவுக்கான அவரது இரண்டு தனித்தனிக் கணக்கீடுகள் புவியின் ஆரையை 6,375.937 கிமீ, 6,371.860 கிமீ ஆகத் தந்தன.[2]

இவர் 1740 இல் "வானியல் கூறுகள்" (Eléments d'astronomie) என்ற நூலையும், சனியின் செயற்கைக்கோள்கள் பற்றிய முதலாவது பட்டியலை வெளியிட்டார்.[1]

சிறுகோள் ஒன்று இவரது நினைவாக 24102 சாக்காசினி எனப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Clerke, Agnes Mary (1911). "Cassini s.v. Jacques Cassini". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 5. Cambridge University Press. 
  2. Traité de la grandeur et de la figure de la terre, Jacques Cassini, 1723. pp.182-3 & pp.302

வெளி இணைப்புகள் தொகு

  • O'Connor, John J.; Robertson, Edmund F., "சாக் காசினி", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • கணித மரபியல் திட்டத்தில் சாக் காசினி
  • Paris Observatory digital library
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்_காசினி&oldid=3427443" இலிருந்து மீள்விக்கப்பட்டது