சாதா உள்ளான்

பறவை வகை
சாதா உள்ளான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
Scolopaci
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. hypoleucos
இருசொற் பெயரீடு
Actitis hypoleucos
(L., 1758)
வேறு பெயர்கள்

Tringa hypoleucos L. 1758

Actitis hypoleucos

சாதா உள்ளான் என்பது (common sandpiper, Actitis hypoleucos) உள்ளான் வகையைச் சேர்ந்த பரவலாகக் காணப்படும் நீர்க்கரை பறவையாகும். இது ஒன்றிரண்டு பறவைகளுடன் சேர்ந்து திரியக்கூடியது.

விளக்கம் தொகு

இப்பறவை சிறு காடையின் பருமன் இருக்கும். வயது வந்த பறவை 18–20 செமீ (7.1–7.9 அங்குலம்) நீளமும், 32–35 செமீ (13–14 அங்குலம்) இறக்கை அகலம் கொண்டது. இதன் அலகு பழுப்பு நிறத்திலும், கால்கள் தெளிவற்ற பழுப்பு நிறத்திலும் இருக்கும். குளிர்காலத்தில் இதன் தோற்றம் பின்வருமாறு மாறுபட்டு காணப்படும்; குளிர்காலத்தில் இதன் தலை சாம்பல் பழுப்பாக ஆழ்ந்த பழுப்பு நிறக்கோடுகளோடு காணப்படும். கண்ணுக்குமேல் அகன்ற வெண் புருவத்தைக் காண இயலும். உடலின் மேற்பகுதி ஆலிவு கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். பிட்டமும் வாலும் பழுப்பாக வெளி ஓர இறகுகள் வெண்மை கலந்து தோன்றக் காட்சி தரும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாக இருக்கும். மார்பில் மட்டும் கருஞ்சாம்பல் நிறக் கோடுகள் சில அழகு செய்யும். பறக்கும்போது குறுகலான வெள்ளைப் பட்டை இறக்கைகளில் காணப்படுவது கொண்டும், 'ட்டீஇ;ட்டீஇ' எனக் கீறிச் குரலில் கத்திக் கொண்டே பறப்பதைக் கொண்டு இதனை அணையாளம் காணலாம். கோடையில் நிறங்கள் ஆழ்ந்து காணப்படும்.

பரவலும் வாழிடமும் தொகு

சாதா உள்ளானானது மிதவெப்பமண்டல அயன அயல் மண்டல ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் குளிர்காலத்தில் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, ஆத்திரேலியாவிற்கு வலசை போகிறன்றன. அவை ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே முதல் வாரம் வரை தங்கள் இனப்பெருக்க காலாத்திற்காக புறப்படுகின்றன.[2]

இனப்பெருக்கம் தொகு

இவை ஆற்றிடை வெளிகளில் தரையில் கூடு கட்டுகின்றன. அதில் சுமார் நான்கு முட்டைகள் வரை இடும். இவற்றின் முட்டைகள் சிவப்பும் பழுப்புமான புள்ளிகளோடு கூடிய வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அச்சுறுத்தலுள்ளு உள்ளாகும்போது, இளம் பறவைகள்​​ தங்கள் பெற்றோரின் உடலைப் பற்றிக் கொண்டு பாதுகாப்பாக பறந்து செல்லலும்.[3]

உணவு தொகு

சாதா உள்ளான்கள் தரையில் அல்லது ஆழமற்ற நீரை பார்வையால் உணவு தேடுகின்றன. பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள் மற்றும் பிற முதுகெலும்பிலி உணவாக கொள்கின்றன. பறக்கும்போது பூச்சிகளைக் கூட பிடிக்கலாம்.

மேற்கோள் தொகு

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Actitis hypoleucos". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. VanderWerf, E.A.; Wiles, G.J.; Marshall, A.P.; Knecht, M. (2006). "Observations of migrants and other birds in Palau, April–May 2005, including the first Micronesian record of a Richard's Pipit". Micronesica 39 (1): 11–29. http://micronesica.org/sites/default/files/2_vanderwerf-palau.pdf. 
  3. Mann, C.F. (1991). "Sunda Frogmouth Batrachostomus cornutus carrying its young". Forktail 6: 77–78. http://orientalbirdclub.org/wp-content/uploads/2012/06/Mann-Frogmouth.pdf. பார்த்த நாள்: 2016-02-20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதா_உள்ளான்&oldid=3767267" இலிருந்து மீள்விக்கப்பட்டது