சார்லசு பிரீடல்

சார்லசு ஃபிரீடல் (Charles Friedel) ( பிரெஞ்சு மொழி: [fʁidɛl] ; 12 மார்ச் 1832 - 20 ஏப்ரல் 1899) ஒரு பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர் ஆவார்.

சார்லசு பிரீடல்
Charles Friedel 1890s2.jpg
1890களில் பிரீடல்
பிறப்பு12 மார்ச்சு 1832
ஸ்திராஸ்பூர்க், பிரான்சு
இறப்பு20 ஏப்ரல் 1899(1899-04-20) (அகவை 67)
மோன்டாவ்ப்ன், பிரான்சு
வாழிடம்பிரான்சு
தேசியம்பிரெஞ்சு நாட்டவர்
துறைகனிமவியல்
வேதியியல்
பணியிடங்கள்சார்போன்
கல்வி கற்ற இடங்கள்இசுதிராஸ்பூர்க் பல்கலைக்கழகம்
சார்போன்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஆண்ட்ரே லூயி டெபியெர்ன்[1]
அறியப்படுவதுபிரீடல்-கிராப்ட்சு வினை
விருதுகள்டேவி பதக்கம் (1880)
கையொப்பம்

வாழ்க்கைதொகு

பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கைப் பூர்வீகமாகக் கொண்ட அவர், சோர்போனில் இலூயி பாசுச்சரின் மாணவராக இருந்தார். 1876 ஆம் ஆண்டில், இவர் சோர்போனில் வேதியியல் மற்றும் கனிமவியல் பேராசிரியரானார்.

பிரீடல் 1877 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் கிராப்ட்சுடன் பிரீடல்-கிராப்ட்சு அல்கைலேற்றம் மற்றும் அசைலேற்றம் வினைகளை உருவாக்கினார். [2] [3] மேலும் செயற்கை வைரங்களை உருவாக்க முயன்றார்.

அவரது மகன் ஜார்ஜஸ் பிரீடலும் (1865-1933) ஒரு புகழ்பெற்ற கனிமவியலாளர் ஆனார்.

பரம்பரைதொகு

 • ப்ரீடலின் மனைவியின் தந்தை சார்லஸ் கோம்ப்ஸ் பொறியியலாளர் ஆவார். [4] ப்ரீடல் குடும்பம் பிரெஞ்சு விஞ்ஞானிகளின் பணக்காரப் பரம்பரையாகும்:
  • ஜார்ஜஸ் பிரீடல் (1865-1933), பிரெஞ்சு படிகவியல் மற்றும் கனிமவியலாளர்; சார்லஸின் மகன் ஆவார்.
  • எட்மண்ட் பிரீடல் (1895-1972), பிரெஞ்சு பல்தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் சுரங்கப் பொறியாளர், பிரெஞ்சு புவியியல் ஆய்வு நிறுவனமான பிஆர்ஜிஎம்மின் நிறுவனர்; ஜார்ஜஸின் மகன் ஆவார்.
  • ஜேக்கசு பிரீடல் (1921–2014), பிரெஞ்சு இயற்பியலாளர்; எட்மண்டின் மகன் ஆவார்.

மேற்கோள்கள்தொகு

 1. Asimov, Asimov's Biographical Encyclopedia of Science and Technology 2nd Revised edition
 2. Friedel, C.; Crafts, J.-M. (1877). "Sur une nouvelle méthode générale de synthèse d'hydrocarbures, d'acétones, etc.". Compt. Rend. 84: 1392–1395. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k30410/f1386.table. 
 3. Friedel, C.; Crafts, J.-M. (1877). "Sur une nouvelle méthode générale de synthèse d'hydrocarbures, d'acétones, etc.". Compt. Rend. 84: 1450–1454. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k30410/f1444.table. 
 4. Charles Combes பரணிடப்பட்டது மே 16, 2009 at the வந்தவழி இயந்திரம், quercy.net, accessed April 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_பிரீடல்&oldid=3401235" இருந்து மீள்விக்கப்பட்டது