சால்வதேசம்

சால்வதேசம் ஆபீரதேசத்தின் வடக்கிலும், விராடதேசம், சூரசேனதேசங்களுக்கு மேற்கிலும், சதத்ருநதியின் தென்பாக பூமியில் அகன்று பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

இந்த தேசம் மிகவும் சின்ன தேசமாகும். விவசாயத்திற்கு ஏற்ற பூமியாய் இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேசத்திற்கு மலைத்தொடர், காடுகளும், அவைகளில் கொடிய விலங்குகள் என்பதே கிடையாது.

நதிகள்

தொகு

விபாசாநதியும், சதத்ருநதியும், மத்சுயதேசத்தைக் கடந்து ஒரு பெரிய நதியாக மாறி இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்கு எல்லையில் ஓடும் சிந்துநதியுடன் இணைகிறது.

விளைபொருள்

தொகு

இந்த தேசத்தில் பட்டு, கரும்பு, பருத்தி, திராட்சை, முதலியன அதிகமாய் விளைந்தும், இந்த தேசத்தவர்கள் மகாராட்டிரம், ஆந்திரம், யவனதேசம், வங்கம், கோசலம், குருதேசம், சூரசேனம் அகிய தேசங்களில் ரத்தினம், பட்டு முதலியனவையும் வியாபாரம் செய்கின்றனர்.

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் -168 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=சால்வதேசம்&oldid=2076839" இலிருந்து மீள்விக்கப்பட்டது