சாவகம் வெள்ளைக்கண்ணி

சாவகம் வெள்ளைக்கண்ணி
கிழக்கு சாவகம் சூரபயா அருகே அலையாத்திக் காடுகளில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சோசுடெரோபிடே
பேரினம்:
சோசுடெரோப்சு
இனம்:
சோ. பிளாவசு
இருசொற் பெயரீடு
சோசுடெரோப்சு பிளாவசு
தாமசு கோர்சுபீல்டு, 1821

சாவகம் வெள்ளைக்கண்ணி (Javan white-eye)(சோசுடெரோப்சு பிளாவசு) என்பது சாவகம் மற்றும் போர்னியோவில் காணப்படும் ஜோசுடெரோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.[1]

வாழிடம்

தொகு

மேற்கு சாவகம் தீவில், இது 1984 மற்றும் 1985க்கும் இடையில் புலாவ் துவா, முரா ஜெம்பாங் மற்றும் தஞ்சங் செடாரி ஆகிய பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் இயற்கையான வாழ்விடம் வெப்பமண்டல ஈரமான தாழ் நிலம் மற்றும் சதுப்புநிலக் காடுகள்[2] மற்றும் புதர் நிலம் ஆகியவை அடங்கும்.[1]

நிலை

தொகு

ஆகத்து 2015-ல், கிழக்கு சாவகத்தில் உள்ள மலாங்கின் நான்கு நகர்ப்புற பூங்காக்களில் இது காணப்பட்டது.[3] சூலை 2015 மற்றும் ஆகத்து 2016க்கு இடையில், கலிமந்தானில் உள்ள வனவிலங்கு சந்தைகளில் கணக்கெடுப்பின் போது அதிக அளவு மற்றும் அதிக விலையுடன் வர்த்தகம் செய்யப்பட்ட 15 பறவை சிற்றினங்களில் ஒன்றாகவும் இது பதிவு செய்யப்பட்டது. சாவகம் வெள்ளைக்கண்ணியின் தேவை மற்றும் மதிப்பு அதிகரித்துள்ளதாகக் கடை உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 BirdLife International (2019). "Zosterops flavus". IUCN Red List of Threatened Species 2019: e.T22714082A156951522. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22714082A156951522.en. https://www.iucnredlist.org/species/22714082/156951522. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Allport, G.; Milton, R. (1988). "A note on the recent sighting of Zosterops flava Javan White-eye". Kukila 3: 142–149. https://www.researchgate.net/publication/299394917. 
  3. Ahmad, M.; Al Muzakki, F. & Abrori, R. (2016). "Study on Bird Diversity in Four City Parks of Malang City, East Java, Indonesia" (PDF). In Sari, S. G.; Lestia, A. S. & Sasmita, R. (eds.). Proceedings of International Conference on Natural Mathematical and Environmental Sciences for Sustainable Development. Banjarbaru: Faculty of Mathematics and Natural Sciences. pp. 22–29.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rentschlar, K. A.; Miller, A. E.; Lauck, K. S.; Rodiansyah, M.; Bobby, Muflihati; Kartikawati (2018). "A Silent Morning: The Songbird Trade in Kalimantan, Indonesia". Tropical Conservation Science 11: 1940082917753909. doi:10.1177/1940082917753909. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகம்_வெள்ளைக்கண்ணி&oldid=3604691" இலிருந்து மீள்விக்கப்பட்டது