திருவனந்தபுரம்

இது கேரள மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி மற்றும் முதன்மை மாநகரம் ஆகும்.
(சாஸ்தமங்களம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருவனந்தபுரம் என்பது இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரானது, திருவனந்தபுரம் என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நகரம் மகாத்மா காந்தியால் இந்தியாவின் பசுமை நகரம் என அழைக்கப்பெற்றது. கேரளாவின் பெரிய நகரமும், அதிக நகரம் கொண்ட நகரமும் இதுவே. இந்திய நடுவணரசின் ஆய்வுக்கழகங்களும் கேரள மாநில அரசின் அலுவலங்களும் இங்கே உள்ளன. இந்நகரம் கேரளாவின் சிறந்த நகரமாக அறியப்படுகிறது. மேலும் கேரள மாநில உள்ளாட்சி அமைப்பின்படி சுமார் நூறு (100) வார்டுகளைக் கொண்ட கேரள மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.

திருவனந்தபுரம்
തിരുവനന്തപുരം (மலையாளம்)
திருவனந்தபுரத்தில் கேரள சட்டமன்றம்
திருவனந்தபுரத்தில் கேரள சட்டமன்றம்
அடைபெயர்(கள்): கடவுளின் சொந்த தலைநகரம்[1]
திருவனந்தபுரம் is located in கேரளம்
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் (கேரளம்)
திருவனந்தபுரம் is located in இந்தியா
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 08°31′26.8″N 76°56′11.8″E / 8.524111°N 76.936611°E / 8.524111; 76.936611[1]
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் கேரளம்
பகுதிதெற்கு கேரளா
மாவட்டம்திருவனந்தபுரம்
அரசு
 • நிர்வாகம்திருவனந்தபுரம் மாநகராட்சி
 • மாநகராட்சி மேயர்[2]திருமதி. ஆர்யா ராஜேந்திரன் எஸ்
 • செயலாளர்[3]திரு. பினு பிரான்சிஸ்
பரப்பளவு
 • மொத்தம்214.86 km2 (82.96 sq mi)
ஏற்றம்
38.93 m (127.72 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்9,57,730
 • அடர்த்தி4,457/km2 (11,540/sq mi)
மொழி
 • அலுவல்மொழிமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+05:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
695xxx
தொலைபேசி குறியீடு+91471xxxxxxx
வாகனப் பதிவு
இணையதளம்tmc.lsgkerala.gov.in/en/home

பெயர்க் காரணம்

தொகு

தமிழ்ச் சொற்களான திரு, அனந்த, புரம் ஆகிய பதங்களின் இணைப்பே திருவனந்தபுரமாகும். அனந்தன் என்ற பாம்பின் மீதே திருமால் (அரங்கநாதர்) படுத்திருப்பார். இவ்வூரிலுள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் திருக்கோயிலால் இப்பெயர் வந்தது.

 
திரு பத்மநாபசாமி கோயில் கோபுரம்

வரலாறு

தொகு

பொ.ஊ. 1745 முதல் 1949 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக திருவனந்தபுரம் இருந்து வந்தது. 1949-க்குப் பிறகு இது திரு-கொச்சியின் தலைநகராக இருந்தது. நவம்பர் 1, 1956-ல் கேரள மாநிலம் உருவான போது அதன் தலைநகராகத் தேர்வு செய்யப்பட்டது. இங்குள்ள திரு பத்மநாப சுவாமி கோயிலைக் கட்டியவர் தமிழர் ஆவார்.

விளையாட்டுக்கள்

தொகு

மட்டைப் பந்தாட்டம் மற்றும் கால் பந்தாட்டங்கள் இந்நகரில் பிரபலமானவை. முக்கியமான மட்டைப் பந்தாட்ட மைதானங்கள் இங்கு உள்ளன. கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன. கோல்ப் விளையாட்டும் சிலரால் விளையாடப்படுகிறது.

ஊடகம்

தொகு

பெரும்பாலான நாளிதழ்கள் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்படுகின்றன. பெரும்பாலான மலையாள தொலைக்காட்சிகள் இந்நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. திரையரங்குகளில் மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிப் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியாவின் முன்னணி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் இங்கும் தங்கள் சேவையை வழங்குகின்றன. இங்கு திரையிடப்படும் தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் தமிழிலேயே திரையிடப்படுகின்றன. இந்த நகரத்தின் மேற்கில் தமிழர்கள் அதிக அளவிலும், கிழக்கில் கணிசமான அளவிலும் வாழ்கின்றனர்.

போக்குவரத்து

தொகு
  • பன்னாட்டு விமான நிலையம்
  • இரயில் நிலையம்
  • பேருந்து நிலையம்

சாஸ்தமங்கலம்

தொகு

திருவனந்தபுர நகரத்தில் ஒரு பிரபலமான குடியிருப்புப் பகுதி சாஸ்தமங்கலம். ஸதமங்கலம் என்ற பெயரில் இருந்து சாஸ்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். இது நேப்பியர் அருங்காட்சியகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சந்திப்புப் பகுதியாகும். இங்கிருந்து வட்டியூர்க்காவு, வெள்ளையம்பலம், எடப்பழிஞ்சி மற்றும் பெரூர்கட (வழி:பிப்பின்மூடு) போன்ற ஊர்களுக்குச் செல்லலாம்.

சான்றுகள்

தொகு
  1. "History – Official Website of District Court of India". District Courts. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 18 May 2017.
  2. https://tmc.lsgkerala.gov.in/en/city-mayor
  3. https://tmc.lsgkerala.gov.in/en/secretary
  4. 4.0 4.1 https://tmc.lsgkerala.gov.in/en/general-information

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவனந்தபுரம்&oldid=3992984" இலிருந்து மீள்விக்கப்பட்டது