சிகான் உசேனி
சிகான் உசேனி (Shihan Hussaini) என்பவர் ஒரு இந்திய கராத்தே நிபுணர், இவர் தமிழ் படங்களில் திரைப்பட நடிகராக பணியாற்றியுள்ளார். இவரது சகோதரர் இசாக் உசைனியும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.[1] ஜெ. ஜெயலலிதா மீதான பற்றுச் செயல்களுக்காகவும், உலக சாதனை முயற்சிகளுக்காகவும் இவர் இந்திய ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டார்.[2]
சிகான் உசேனி | |
---|---|
பிறப்பு | 28 திசம்பர் 1964 மதுரை |
பணி | நடிகர், கராத்தே நிபுணர், சிற்பி |
செயற்பாட்டுக் காலம் | 1986 – தற்போது வரை |
வலைத்தளம் | |
www |
தொழில்
தொகுநடிப்பு வாழ்க்கை
தொகுகராத்தே பயிற்றுவிப்பாளராக தனது சாதனைகளால் சிகான் உசைனி புகழ் பெற்றார். மேலும் இளம் தற்காப்பு கலை சண்டைப் பயிற்சியைப் பெற விரும்புபவர்களுக்ககு உதவ ஒரு பள்ளியை அமைத்தார்.[3] கே. பாலசந்தரின் காதல் நாடகப் படமான புன்னகை மன்னன் படத்தின் மூலம் உசைனி நடிகராக அறிமுகமானார், அதில் இவர் ஒரு நடனக் கலைஞராக நடித்தார். படத்தில் சிங்களக் கதாபாத்திரமான ரேவதியின் கதாபாத்திரத்திடம் இவரது இலங்கைத் தமிழர் கதாபாதிரமானது கடுமையாக நடத்துகொள்வதாக சித்தரிக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியால், திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரை ரஜினிகாந்தின் வேலைகரன் (1987) மற்றும் ஆர். கே. செல்வமணியின் மூங்கில் கோட்டை ஆகியவற்றில் எதிர்மறை பாத்திரத்தில் நடிக்கவைக்க தூண்டுகோளாக ஆனது. மூங்கில் கோட்டையில் இவர் விசயகாந்துடன் நடித்தார். 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும், ஹாலிவுட் படமான பிளட்ஸ்டோன் (1988), கார்த்திக் நடித்த உன்னைச் சொல்லி குற்றமில்லை (1990), சரத்குமார் நடித்த வேடன் (1993) ஆகியவற்றிலும் நடித்தார். மேலும் குஷ்பூவுடன் நடித்த நாடோடிகள், ரவிச்சந்திரனுடன் நடித்த சந்திப்புகள் ஆகிய படங்கள் வெளியாகவில்லை.
மேலும், இவர் மை இந்தியா என்ற படத்தில் தோன்றினார். அதில் நடிகைகள் சுவாதி, வாணி விசுவநாத் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது மிகச் சமீபத்திய திரைத் தோற்றமானது பத்ரி ஆகும். அதில் இவர் விஜயின் உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்தார் மற்றும் "டிராவலிங் சோல்ஜர்" பாடலை உருவாக்குவதிலும் பணியாற்றினார்.[4] கௌதம் மேன்னின் என்னை அறிந்தால் (2015) படத்தில் நடிக்க தான் அணுகப்பபதாக உலவிய வதந்திகளை மறுத்த அதே வேளையில், 2014 ஆம் ஆண்டு முடிவு என்ற திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணியில் தான் பணியாற்றி வருவதாக அறிவித்தார்.[5]
மற்றவை
தொகு1998 ஆம் ஆண்டில், மருதநாயகம் படத்தயாரிப்பின் போது நடிகர் கமல்ஹாசனுக்கும், ஷங்கரின் ஜீன்ஸ் (1998) இன் சிறப்புக்காட்சிகளின்போதும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பணியில் இவர் உதவினார்.[6][7] ஜெயலலிதாவின் தீவிர அனுதாபியான சிகான் உசைனி 2005 ஆம் ஆண்டில் அவரது 56 வது பிறந்த நாளை ஒட்டி தனது உதிரத்தைப் பயன்படுத்தி 56 ஓவியங்களை வரைந்தார்.[8] 2003 பெப்ரவரியில், உறைந்த உதிரத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை உருவாக்கினார். இதற்காக தன்னுடையது உட்பட 11 லிட்டர் உதிரத்தை சேகரித்ததாகவும், அது பெண்கள் உட்பட அவரது ஆதரவாளர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று உசைனி கூறினார். இவரை முகத்துதி செய்பவர் என்று குற்றம் சாட்டிய விமர்சகர்களுக்கு ஜெயலலிதா மேலான தனது அபிமானம் உறுதியானது என்று இவர் கூறினார்.[9] 2015 பிப்ரவரி யில், உசைனி 'அம்மா' என்று எழுதப்பட்ட ஒரு டி-சட்டையை அணிந்து சிலுவையில் அறைந்துகொண்டார். வரவிருக்கும் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறவேண்டி பிரார்த்தனை செய்து இவ்வாறு செய்ததாக குறிப்பிட்டார். இவரது கூட்டாளிகள் ஆறு அங்குல ஆணிகளை இவரது கைகளிலும் கால்களிலும் குத்தியபின் இவர் ஆறு நிமிடங்களுக்கும் மேலாக அதில் தொங்கினார். நான்கு ஆணிகளையும் மெதுவாக வெளியே எடுத்த பிறகு, உசைனிக்காக காத்திருந்த அவசர ஊர்தியில் அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.[10] இவரது நடவடிக்கைகளை விமர்ச்சகர்களால் "முட்டாள்தனமானது" என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது.[11][12]
2016 ஆம் ஆண்டில், சிகான் உசைனி ஒரு வில்வித்தை பயிற்சியாளராக, தமிழக வில்வித்தை சங்கத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய வில்வித்தை சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணைந்த ஒரே மாநில வில்வித்தை அமைப்பு இதுவாகும்.[13][14]
உசைனி தற்போது மெகா தொலைக்காட்சியில் அதிரடி சமையல் என்ற ஒரு சமையல் நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1986 | புன்னகை மன்னன் | ||
1987 | வேலைக்காரன் | ||
1988 | பிளட்ஸ்டோன் | ஆங்கில படம் | |
1988 | பறவைகள் பலவிதம் | ||
1990 | உன்னைச் சொல்லி குற்றமில்லை | தர்மராஜ் | |
1993 | வேடன் | ||
1997 | மை இந்தியா | ||
2001 | பத்ரி | வெற்றியின் பயிற்சியாளர் | |
2022 | காத்துவாக்குல ரெண்டு காதல் | கராத்தே பயிற்சியாளர் |
குறிப்புகள்
தொகு
- ↑ "Rediff On The NeT: Fifty Years of Freedom". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "Newslaundry". newslaundry.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "He fought all odds on his way to karate black belt — Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "Shihan Hussaini quits drinking — Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "Is Shihan Hussaini doing a role in Thala 55?". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ https://web.archive.org/web/20041023130446/http://www.dinakaran.com/cinema/english/gossip/25-5-98/hussainy.htm
- ↑ https://www.rediff.com/movies/1998/nov/10ss.htm
- ↑ "Jayalalithaa helps woman who sliced off tongue to celebrate her poll victory — Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "The man who made Jayalalithaa's sculpture in BLOOD". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2019-06-01.
- ↑ "Painful Devotion: Man Hangs on Hooks From Crane for Amma's Health — The Quint". thequint.com. Archived from the original on 2017-08-21. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "Man nails himself to cross to pray for Jayalalithaa's return as CM | india | Hindustan Times". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "What Happens When a State Is Run by Movie Stars?". nytimes.com. https://www.nytimes.com/2015/07/05/magazine/what-happens-when-a-state-is-run-by-movie-stars.html. பார்த்த நாள்: 2016-11-20.
- ↑ Vinita Govindarajan. "Shooting for an Olympic win, these Tamil Nadu archers are taking on one target at a time". thefield.scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.
- ↑ "TAAT's the way to go! - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-20.