ஆர். கே. செல்வமணி
ரா. கா. செல்வமணி என்பவர் அறியப்பட்ட தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாகும்.
ஆர். கே. செல்வமணி | |
---|---|
பிறப்பு | 21 அக்டோபர் 1965 (அகவை 59) செங்கல்பட்டு |
பணி | திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
வாழ்க்கைத் துணை/கள் | ரோஜா செல்வமணி |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் 21 அக்டோபர் 1965, ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பமான கல்யாணசுந்தரம் மற்றும் செண்பகம் தம்பதிகளின் மகனாக செங்கம்பட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் தனது திரைப்படத்துறையை இயக்குனர் மற்றும் நடிகரான மணிவண்ணனின் உதவியாளரான ஆரம்பித்தார்,[1] பின்னர் 1980 ஆம் ஆண்டில் நடிகர் விஜயகாந்த்தை கதாநாயகனாக வைத்து புலன் விசாரணை என்ற திரைப்படத்தை இயக்கினார்.[2] இந்த படம் சில அரசியல் பெரியவர்களின் தூண்டுதலின் பேரில் பல பெண்களை கடத்தி கொன்ற ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதை தொடர்ந்து 1991 ஆம் ஆண்டில் கேப்டன் பிரபாகரன் என்ற படம் வெளியானது. இப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு மரியாதை செய்யும் விதமாக இருந்தது, அதே சமயம் கதைக்களம் வனக் கொள்ளைக்காரன் வீரப்பனை அடிப்படையாகக் கொண்டது.[3][4] அதை தொடர்ந்து செம்பருத்தி (1992), பொன் விலங்கு (1993), கண்மணி (1994), ராஜ முத்திரை (1995) போன்ற பல படங்களை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.
இவர் 1994 ஆம் ஆண்டில், அதிரடிப்படை என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கினார். இந்த படத்தில் ரகுமான், ரோஜா, மன்சூர் அலிகான், விஜயகுமார் மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்துள்ளார்கள். ¨
இவர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டில் வெளியான அரசியல் என்ற திரைப்படத்திற்காக 'சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது' வென்றது. இந்த திரைப்படத்தில் மம்மூட்டி, சில்பா சிரோத்கர், ரோஜா, மன்சூர் அலி கான், ஆனந்த்ராஜ், சரண் ராஜ், ஜெய்கணேஷ் போன்றோர் நடித்திருந்தனர்.
இவர் அக்டோபர் 2008 இல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்திய பேச்சு சர்ச்சைக்குரியதாக தமிழ்நாட்டில் அமைந்தது. ஆர்.கே. செல்வமணி தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தற்போதைய செயலாளராக உள்ளார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் 10 ஆகஸ்ட் 2002, அன்று நடிகை ரோஜாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "டைரக்டர் ஆகும் கனவு பலித்தது - ஜெயித்துக் காட்டினார் செல்வமணி!" [The dream of becoming a director came true - Selvamani won!]. Maalai Malar. September 4, 2013. Archived from the original on September 7, 2013. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.
- ↑ "சினிமாவுக்கு கதை சொல்வதில் செல்வமணி கண்டுபிடித்த புதிய யுக்தி" (in ta). Maalai Malar. September 3, 2013 இம் மூலத்தில் இருந்து September 5, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130905090840/http://cinema.maalaimalar.com/2013/09/03231730/selvamani-cinema-history.html.
- ↑ "R. K. Selvamani in Toronto 16 Mar 2013 – Part 1". YouTube. Archived from the original on 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.
- ↑ "R. K. Selvamani in Toronto, Part 2". YouTube. Archived from the original on 2021-12-22. பார்க்கப்பட்ட நாள் 15 September 2014.
- ↑ "RK Selvamani elected President of Tamil Film Directors' Union". The News Minute. 22 July 2019.