சிக்கந்தர் ஷா மிரி
சிக்கந்தர் ஷா ( Sikandar Shah ) ( சிகந்தர் புத்சிகன் - "சிகந்தர், சமூகப் புரட்சியாளர்")[1]1389 முதல் 1413 வரை காஷ்மீரை ஆண்ட ஷா மிரி வம்சத்தின் ஏழாவது சுல்தான் ஆவார்.[2][3]
சிக்கந்தர் ஷா | |||||
---|---|---|---|---|---|
காஷ்மீரின் சுல்தான் | |||||
ஷா மிரி சுல்தனகத்தின் 7வது சுல்தான் | |||||
ஆட்சிக்காலம் | 1389–1413 பொ.ச | ||||
முடிசூட்டுதல் | 1389 | ||||
முன்னையவர் | குதுபுதின் | ||||
பின்னையவர் | அலி ஷா | ||||
பிறப்பு | 1353 | ||||
இறப்பு | 1413 | ||||
| |||||
மரபு | ஷா மிரி வம்சம் | ||||
மதம் | சுன்னி இசுலாம் |
ஷா மிரி பற்றிய தற்போதுள்ள ஒரே சமகால ஆதாரமாக காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் இராஜதரங்கிணி மட்டுமே.[4][5] ஜோனராஜா என்பவர் சிக்கந்தரின் வாரிசான ஜைன்-உல்- ஆபிதினின் பிராமண அரசவை-கவிஞராக இருந்தார். மேலும், கல்கணரின் இராஜதரங்கிணியைத் தொடர நியமிக்கப்பட்டார்.[5] அவரது படைப்பின் கையெழுத்துப் பிரதி ஒன்று - 1561 மற்றும் 1588 க்கு இடையில் ஒரு அநாமதேய நபரால் பிற ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பயன்படுத்தி திருத்தப்பட்டது. [5]
பின்னணி
தொகுஇந்த வம்சம் பஞ்ச்கப்பர் பள்ளத்தாக்கின் காசா தலைவர்களிடமிருந்து வந்திருக்கலாம்; இவர்களில் ஷா மிர், காஷ்மீரில் முதலில் குடியேறியவர்.[6][7][a] அவர் வளர்ந்து வரும் தேவா வம்சத்தின் அரச சபையில் பணியாற்றத் தொடங்கினார். அங்கே சுகதேவரின் பிரதம மந்திரி ஆனார்.[6] [8] விரைவில், இரிஞ்சன் அரியணையை அபகரிக்க மங்கோலியர்களுக்கு உதவிய பிறகு ஏற்பட்ட ஒரு அதிகார-வெற்றிடத்தைப் இவர் பயன்படுத்திக் கொண்டார்.[7]
ஷா மிர்கள் இசுலாமியத்தை தீவிரமாக ஆதரித்ததால் (முக்கியமாக சூபித்துவம்), ஒரு புதிய சமூக ஒழுங்கு எழுந்தது. அது பிராமண இந்து மதத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது. [8] சமகால சைவ மறைஞானி லால் டெட், முக்கிய மதங்கள் மற்றும் உள்ளூர் வழிபாட்டு முறைகளில் இருந்து தாக்கம் பெற்று தனது கவிதைகளை படைத்தார். அது பிராமினிசத்தின் அடிப்படைக் கொள்கைகளைத் தாக்கி, சமூகத்தின் கீழ்மட்டத்தில் இசுலாமுக்கு மாறுவதற்கு சேவை செய்தார். [8] சிக்கந்தரின் காலத்தில், மக்களில் கணிசமான பகுதியினர் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொணிருந்த்டனர். [8] இருப்பினும், மன்னர்கள் இந்து மதத்தை தீவிரமாக ஆதரித்தனர். அலாவுதீன் ஒரு இந்து மதத்தை நிறுவினார். குதுபுத்-தின் அரச யாகங்களை நடத்தினார்.[8]
பிறப்பும் எழுச்சியும்
தொகுசிக்கந்தர், ஷா மிரின் கொள்ளுப் பேரன். மேலும் குதுபுத்-தின் மற்றும் ராணி சூராவின் (சுபதா) மூத்த குழந்தையாக 1380 ஆம் ஆண்டில் பிறந்தார். 9 ஆகஸ்ட் 1389-ல் இவரது தந்தையின் மரணத்தின் போது இவர் சிறுவயதாக இருந்ததால், இவரது தாயார் சில காலம் ஆட்சியாளராகச் செயல்பட வேண்டியிருந்தது. [2] [5] சுரா பிரதம மந்திரி ராய் மாக்ரே, சிக்கந்தருக்கு எதிராக சதி செய்ததாகக் கூறி, தனது சொந்த மகளையும் மருமகன் முகம்மது ஆகியோரைக் கொன்றார்.[5] [9] .
போர்களும் கிளர்ச்சிகளும்
தொகுராய் மாக்ரேயின் தலைமையில் லடாக் மீதான வெற்றிகரமான படையெடுப்பைத் தவிர, சிக்கந்தர் எந்தப் புதிய பகுதியையும் இணைக்கவில்லை. இந்த வெற்றிக்குப் பிறகு, மாக்ரே ஒரு கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு, சுராவின் சகோதரரை (குஞ்யராஜா) கொன்று, சிக்கந்தருக்கு எதிராகத் திரும்பினார். [9] கிளர்ச்சியானது இலட்டராஜாவின் ஆட்களின் உதவியுடன் குறைந்த பட்ச போரைக் கூட. மேலும், மாக்ரே சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டார். [5] [9] [b] [5]
சிக்கந்தரின் மேலாதிக்கத்தை அங்கீகரிக்க மறுத்த இந்து ஷாகி ஆட்சியாளரான பிரூஸுக்கு எதிராக 1400இல் ஒரு வெற்றிகரமான போர் நடத்தப்பட்டது. [2] பின்னர், சிக்கந்தர் பிரூஸின் மகள் மேராவை மணந்தார் (கட்டாயத் திருமணம்) . மேலும் தனது தாயாரின் தத்தெடுக்கப்பட்ட மகள்களில் ஒருவரை பிரூஸுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது . [2] [5] வரி கொடுக்க மறுத்த ஜம்முவின் அரசன் பாலதேவனுக்கு ( பில்லதேவன்) எதிராக மற்றொரு வெற்றிகரமானப் போர் ( பில்லதேவன்) நடைப்பெற்றது. ஜஸ்ரத் கோகர் ஒரு அடிமையாக நியமிக்கப்பட்டார். சிக்கந்தர் மீண்டும் அவரது மகளுடன் திருமண கூட்டணியில் நுழைந்தார். அதே நேரத்தில் சுபதாவின் மற்றொரு மகளை பாலதேவனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார். [2] [5]
சமூக அரசியல்
தொகுஇவரது ஆட்சியில் ஒட்டுமொத்த பொருளாதார நிலை சீராக இருந்தது. ஒரு பொதுநல அரசு நிறுவப்பட்டது. இலவச பள்ளிகள், மருத்துவமனைகள் (தாருல்-ஷிஃபா) பொது பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட அதே வேளையில் அடக்குமுறை வரிகள் ஒழிக்கப்பட்டன. புனிதத் தலங்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன. மத்திய ஆசியாவில் இருந்து ஏராளமான சூபி போதகர்களுக்கு சாகிர்கள் வழங்கப்பட்டு அதிகாரப் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். [2] அறிஞர்கள், ஏழைகள், மதப் பிரமுகர்கள் போன்ற சமூகத்தின் பரந்த பிரிவுகளுக்கு நில உடைமைகள் ஒதுக்கப்பட்டன [2] [10]ஷைகுல்-இஸ்லாமின் அலுவலகம் ஏழைகள், யாத்ரீகர்கள், பயணிகள், மருத்துவர்கள், அறிஞர்கள் மற்றும் பிற தகுதியான மக்களுக்கு பண உதவி மற்றும் பிச்சை வழங்க நிறுவப்பட்டது.[11]
1398 டிசம்பரில், சிந்து ஆற்றங்கரையில் தைமூர் முகாமிட்டிருந்தபோது, அவருக்கு மரியாதை செலுத்துமாறு தைமூரின் அமைச்சர்களால் சிக்கந்தர் வற்புறுத்தப்பட்டார்.[12] இராணுவ மோதலுக்கு பயந்து சிக்கந்தர் இதனை ஏற்றுக்கொண்டாலும், சிக்கந்தரின் திறன்களை கேட்டறிந்த தைமூர் அந்த கோரிக்கையை நிராகரித்தார். [2] [12] இருவரும் சந்திக்கவில்லை என்றாலும், அவர்கள் பரஸ்பர பாராட்டைப் பகிர்ந்து கொண்டனர்; தைமூர் சிக்கந்தருக்கு ஒரு ஜோடி ஆண் மற்றும் பெண் யானைகளை பரிசாக அளித்தார். [2] [c] யானைகளைப் பெற்றவுடன், சிக்கந்தர் பரவசமடைந்தார். மேலும் அரச நீதிமன்றத்தில் அனைத்து மனுதாரர்களுக்கும் தங்கம் மற்றும் நில மானியங்களை வழங்கினார். [5]
ஷரியா ( இசுலாமியச் சட்ட முறைமை) உள்ளூர் சட்டமாக இயற்றப்பட்டது - இசை, நடனம், சூதாட்டம் மற்றும் போதைப்பொருட்கள் தடைசெய்யப்பட்டன.
இந்துக்களை ஒடுக்குதல்
தொகுசிக்கந்தரின் ஆட்சிகாலத்தில் காஷ்மீரின் நீண்டகால சகிப்புத்தன்மை கலாச்சாரம் முடிவுக்கு வந்ததாக ஜோனராஜா வாதிடுகிறார்.[13] பஹாரிஸ்தான் -இ-ஷாஹி, தோஹ்ஃபத்துல்-அஹ்பாப் போன்ற நூல்களும், காஷ்மீரை அனைத்து மதவெறியர்கள் மற்றும் காஃபிர்களிடமிருந்தும் சுத்தப்படுத்தியதாக சிக்கந்தரை குறிப்பிடுகிறது. சிக்கந்தர் "சிலை உடைப்பவர்" என்று பெயரிடப்பட்டார்.
சிக்கந்தர் இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களை அழிக்கத் தொடங்கினார்-ஜோனராஜாவின் வார்த்தைகளில்-வீடுகளின் தனியுரிமையில் இருந்த சிலைகள் கூட எஞ்சியிருக்கவில்லை. [5] மார்தாண்ட சூரியன் கோயில் உட்பட பல இந்துக் கோயில்கள் சிக்கந்தரால் அழிக்கப்பட்டன. [5] பரிஹாஸ்பூரில் மூன்று கோயில்கள், இஸ்கந்தர் போராவில் உள்ள தாராபிதா கோயில்கள், அருகிலுள்ள மகா ஸ்ரீ கோயில் ஆகியவையும் அவரது அழிப்பிலிருந்து தப்பவில்லை. [14] புத்தரின் பிரம்மாண்ட சிலைகளை அழித்து அதனைக் கொண்டு நாணயங்கள் உருவாக்கப்பட்டது. [5]
பின்னர், சாதி முறையை ஒழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், தங்களின் பரம்பரை சலுகைகளை விட்டுக்கொடுக்க விரும்பாத அனைத்து பிராமணர்களுக்கு ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது. [5] சிக்கந்தரின் வாரிசு (அலி ஷா) முதல் முறையாக கட்டாய மதமாற்றத்தைத் தொடங்கிாகரா ஜோனஜாலி குறிப்பிடுகிறார்; மதம் மாற மறுத்த அனைவரையும் கொன்று குவித்ததவும்க் கூறப்படுகிறது! [5] [14]
கலையும் கட்டிடக்கலையும்
தொகுநவகட்டாவின் பகுதி சிக்கந்தரால் கட்டப்பட்டது - இவருடைய அரச மாளிகை அங்கே விரைவில் நிறுவப்பட்டது. [14] அவர் ஸ்ரீநகரில் ஜாமியா பள்ளிவாசலைக் கட்டினார். இது காஷ்மீரில் உள்ள இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணம் என்று கருதப்படுகிறது, [d] பிஜ்பெஹாரா மற்றும் பவானில் இரண்டு பள்ளிவாசல்களும் கட்டப்பட்டது. [2] பிந்தையது இரண்டு மாடி மற்றும் ஒரு தோட்டத்தால் சூழப்பட்டது; இது சிக்கந்தரின் வசந்த அரண்மனையானது. [2] சிக்கந்தர், அரச குடும்பத்தார் மற்றும் உயரடுக்கினருக்காக, ஸ்ரீநகரின் ஜைனா பகுதிக்கு அருகில் ஜீலம் நதிக்கரையில் ஒரு புதிய புதைகுழியை (கல்லறை) அமைத்தார்.
காஷ்மீரின் முதல் கல் சிற்பமும் அதன் வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்றுமான நான்கு கை பிரம்மனின் சிலை, 1409 இல் ஒரு புத்த சங்கபதியின் மகனால் செதுக்கப்பட்டு சிக்கந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. [16] மத்திய ஆசியாவிலிருந்து இவரது அரசவையில் ஏராளமான அறிஞர்கள் வந்தனர்: இசுபகானின் சயீத் அஹ்மத் ஒரு பிராசி உரைக்கு விளக்கவுரையை வரைந்தார். மேலும் நிருபங்களையும் எழுதினார், சையத் முகம்மது கவாரி லுமத் உல்-இதிகாத் மற்றும் மற்றொரு படைப்பு (குவார் நாமா) பற்றிய விளக்கத்தை எழுதினார். முகமது பைஹாகி சிக்கந்தரைப் புகழ்ந்து கவிதைகளை இயற்றினார். [17]
சொந்த வாழ்க்கை
தொகுசிக்கந்தர் ஒரு தூய்மையான குணம் கொண்டவராக நம்பப்படுகிறார். மேலும் மது, விழாக்கள் மற்றும் இசை ஆகியவற்றிலிருந்து விலகியிருந்தார் - தனது குடிமக்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்களுக்கு இணங்க தானும் அவ்வாறே நடந்து கொண்டார்.
யானைக்கால் நோயால் நீண்ட காலம் அவதிபட்டு வந்த சிக்கந்தர் 1413 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு வலிமிகுந்த மரணத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. [5] அவரது மரணத்திற்குப் பிறகு, சிக்கந்தரின் மூத்த மகன் மீர் சுல்தானாக அபிஷேகம் செய்யப்பட்டார். அலி ஷா என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். [5] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மிருக்குப் பிறகு ஷாதி கான், ஜைன்-உல்-ஆபிதின் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். [7]
குறிப்புகள்
தொகு- ↑ Jonaraja notes Shah Mir to be the grandson of one Kuru Shah. He had (apparently) received a divine premonition from Mahadevi about Kashmir being the rightful territory of his lineage.
- ↑ Magre's soldiers had gathered at Vallamatha (unknown - doubtful whether any of the recensions preserved the name) for a scheduled faceoff at Pampore but dispersed after mistaking herds of cattle on the other bank of Jhelum as Sikandar's cavalry. Magre was chased by Sikandar himself and caught at Vitastapura.
- ↑ This episode presents one of the few episodes where Jonaraja's account can be corroborated by Persian sources. Jonaraja had held Timur to have gifted the elephants out of fearing Sikandar, despite being powerful enough to have had Delhi razed to ashes!
- ↑ The architect was one Khwaja Sadru'd-Din from Khorasan.
சான்றுகள்
தொகு- ↑ Obrock, Luther James (2015). Translation and History: The Development of a Kashmiri Textual Tradition from ca. 1000-1500 (Thesis). UC Berkeley.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 Hasan, Mohibbul (2005). Kashmīr Under the Sultāns (in ஆங்கிலம்). Aakar Books. pp. 59–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-49-7.
- ↑ Zutshi, Chitralekha (2014-07-07). "A Literary Paradise : The Tarikh Tradition in Seventeenth- and Eighteenth-Century Kashmir". Kashmir's Contested Pasts: Narratives, Sacred Geographies, and the Historical Imagination. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acprof:oso/9780199450671.003.0003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-945067-1.
- ↑ Slaje, Walter (2004). Medieval Kashmir and the Science of History (in ஆங்கிலம்). South Asia Institute, University of Texas at Austin.
- ↑ 5.00 5.01 5.02 5.03 5.04 5.05 5.06 5.07 5.08 5.09 5.10 5.11 5.12 5.13 5.14 5.15 5.16 Slaje, Walter (2014). Kingship in Kaśmīr (AD 1148‒1459) From the Pen of Jonarāja, Court Paṇḍit to Sulṭān Zayn al-‛Ābidīn. Studia Indologica Universitatis Halensis - 7. Germany. pp. 28–29, 36, 155–173, 185–189, 201–203, 213–215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3869770880.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 6.0 6.1 Slaje, Walter (2019). "What Does it Mean to Smash an Idol? Iconoclasm in Medieval Kashmir as Reflected by Contemporaneous Sanskrit Sources". Brahma's Curse : Facets of Political and Social Violence in Premodern Kashmir. Studia Indologica Universitatis Halensis - 13. pp. 30–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-86977-199-1.
- ↑ 7.0 7.1 7.2 Aziz Ahmad (writer) (1979). "CONVERSIONS TO ISLAM IN THE VALLEY OF KASHMIR". Central Asiatic Journal 23 (1/2): 3–18. பன்னாட்டுத் தர தொடர் எண்:0008-9192. https://www.jstor.org/stable/41927246.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 Khan, Mohammad Ishaq (1986-06-01). "The impact of Islam on Kashmir in the Sultanate period (1320-1586)" (in en). The Indian Economic & Social History Review 23 (2): 187–205. doi:10.1177/001946468602300203. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-4646. https://doi.org/10.1177/001946468602300203.
- ↑ 9.0 9.1 9.2 Salomon, Richard; Slaje, Walter (2016). "Review of Kingship in Kaśmīr (AD1148–1459). From the Pen of Jonarāja, Court Paṇḍit to Sulṭān Zayn al-ʿĀbidīn. Critically Edited by Walter Slaje with an Annotated Translation, Indexes and Maps. [Studia Indologica Universitatis Halensis 7, SlajeWalter"]. Indo-Iranian Journal 59 (4): 393–401. doi:10.2307/26546259. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-7246. https://www.jstor.org/stable/26546259.
- ↑ Ahmad, Khalid Bashir (2017). "Malice". Kashmir: Exposing the Myth Behind the Narrative. London: SAGE. p. 32. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4135/9789353280253.
- ↑ Ahmad, Khalid Bashir (2017). "Malice". Kashmir: Exposing the Myth Behind the Narrative. London: SAGE. p. 32. எண்ணிம ஆவணச் சுட்டி:10.4135/9789353280253.
- ↑ 12.0 12.1 Ogura, Satoshi (2015). "INCOMPATIBLE OUTSIDERS OR BELIEVERS OF A DARŚANA?: REPRESENTATIONS OF MUSLIMS BY THREE BRAHMANS OF ŠĀHMĪRID KAŠMĪR". Rivista degli studi orientali 88 (1/4): 179–211. doi:10.2307/24754113. பன்னாட்டுத் தர தொடர் எண்:0392-4866. https://www.jstor.org/stable/24754113.
- ↑ Accardi, Dean (2017), Zutshi, Chitralekha (ed.), "Embedded Mystics: Writing Lal Ded and Nund Rishi into the Kashmiri Landscape", Kashmir: History, Politics, Representation, Cambridge: Cambridge University Press, pp. 247–264, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-18197-7, பார்க்கப்பட்ட நாள் 2021-02-03
- ↑ 14.0 14.1 14.2 Pandit, Kashinath (1991). Baharistan-i-shahi: A chronicle of mediaeval Kashmir. Kolkata: Firma KLM Pvt. Ltd.Pandit, Kashinath (1991). Baharistan-i-shahi: A chronicle of mediaeval Kashmir. Kolkata: Firma KLM Pvt. Ltd.
- ↑ Bilham, Roger; Bali, Bikram Singh; Bhat, M. Ismail; Hough, Susan (2010-10-01) (in en). Historical earthquakes in Srinagar, Kashmir: Clues from the Shiva Temple at Pandrethan. doi:10.1130/2010.2471(10). https://pubs.geoscienceworld.orghttps//pubs.geoscienceworld.org/books/book/626/chapter/3805836/Historical-earthquakes-in-Srinagar-Kashmir-Clues.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bhan, Jawahar Lal (2010). Kashmir Sculptures: An Iconographical Study of Brāhmanical Sculptures. Vol. 1. Delhi, India: Readworthy Publications. pp. 68–69.
- ↑ Pandit, Kashinath (1991). Baharistan-i-shahi: A chronicle of mediaeval Kashmir. Kolkata: Firma KLM Pvt. Ltd.Pandit, Kashinath (1991). Baharistan-i-shahi: A chronicle of mediaeval Kashmir. Kolkata: Firma KLM Pvt. Ltd.