சிக்மி டோர்சி தேசியப் பூங்கா (பூட்டான்)

சிக்மி டோர்சி தேசியப் பூங்கா (Jigme Dorji National Park) ஆனது மறைந்த முன்னாள் அரசர் சிக்மி டோர்சி வாங்சுக் என்பாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளது. இது பூட்டானின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய பூங்கா ஆகும். இது கிட்டத்தட்ட மொத்த காசா மாவட்டத்தையும், திம்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளையும், பாரோ  புனாகா, மற்றும் வாங்டி போட்ராங் மாவட்டங்களையும் சுற்றுப்பகுதிகளாகக் கொண்டுள்ளது. இது 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நான்குபுறமும் 4316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால், 1400 முதல் 7000 மீட்டர் வரையிலான உயரத்தில் பூட்டானின் உள்ளடக்கியுள்ள மூன்று காலநிலை மண்டலங்களிலும் பரவியுள்ளது. 1,000 குடும்பங்களில் சுமார் 6,500 பேர் இந்த பூங்காவிற்குள்ளேயே வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்வாதரம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

சிக்மி டோர்சி தேசிய பூங்கா
Protected Area
பெயர் மூலம்: சிக்மி டோர்சி வாங்சுக்
நாடு பூட்டான்
மாவட்டம் காசா, பாரோ, புனாகா, திம்பு, வாங்டி போடிராங்
மிகவுயர் புள்ளி
 - உயர்வு 7,000 மீ (22,966 அடி)
மிகத்தாழ் புள்ளி
 - உயர்வு 1,400 மீ (4,593 அடி)
பரப்பு 4,316 கிமீ² (1,666 ச.மைல்)
விலங்கு blue sheep, takin, பனிச்சிறுத்தை,
musk deer, Himalayan black bear,
வங்காளப் புலி, and சிவப்பு பாண்டா
தேதி 1974
Website: Bhutan Trust Fund for Environmental Conservation

யுனெஸ்கோவினுடைய பூட்டானின் தற்காலிகப் பட்டியலில் இந்தப் பூங்காவானது தற்காலிகத் தலமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1][2]

பூங்காவில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் தொகு

இந்தப் பூங்கா, 37 வகையான பாலூட்டிகளுக்கு சரணாலயமாக விளங்குகிறது. இவற்றில் பல ஆபத்தான, அச்சுறுத்தப்பட்ட அல்லது பாதிக்கப்படும் இனங்களாகும். அவற்றில் டக்கின் என்னும் திபெத்திய விலங்கு, பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை, வங்காளப் புலி, பாரல் அல்லது இமாலய நீல ஆடு, கருமத மான், இமாலய கருப்புக் கரடி, சிவப்பு பாண்டா, செந்நாய், புள்ளி லிசாங் புனுகுப் பூனை  முதலியன முக்கியமானவையாகும். மேலும் இப்பூங்காவானது இந்தியச் சிறுத்தை, இமாலயன் செரோ, கடமான், குரைக்கும் மான், மர்மோட், அணில் போன்ற உயிரனங்களுக்கும், 300 வகையானப் பறவைகளுக்கும் புகலிடமாக உள்ளது. மேலும் பூட்டானின் தேசிய விலங்கு (டக்கின்), தேசியப் பூ (நீல பாப்பி), தேசியப் பறவை (காகம்) மற்றும் தேசிய மரம் (சைப்ரஸ்) ஆகியவை அனைத்தும் இங்குள்ளது.[1][2]

கலாச்சார தளங்கள் தொகு

சிக்மி டோர்சி தேசியப் பூங்காவில் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள பல இடங்கள் காணப்படுகின்றன. இப்பூங்காவிலுள்ள சமோல்கரி மலை மற்றும்  சிட்சு டிரேக் மலை  ஆகியவை உள்ளூர் தெய்வங்களின் வீடுகளாக வணங்கப்படுகின்றன. லாங்சி சோங் மற்றும் காசா சோங் கோட்டைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். இந்தப் பூங்காவில் உள்ள உறைபனி ஏரிகள் மோ ஆறு, வாங்டி ஆறு  மற்றும் பா ஆறு போன்ற ஆறுகளுக்கு ஆதாரங்களாக உள்ளன.[2][3]

பனிப்பாறைகள் தொகு

சிக்மி டோர்சி தேசியப் பூங்கா வடக்கு கசா மாவட்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது, இதில் லுனானா மற்றும் லயோ தாலுகாக்களும்  அடங்கும். இந்த தாலுகாக்களில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவிலான அழிவுகரமான பனிமழை காரணமாக ஆபத்தான பனிப்பாறைகள் காணப்படுகின்றன. வரலாற்றில்  பதிவுசெய்யப்பட்டுள்ள இந்தப் பனிப்பாறைகள், காலப்  போக்கில் கணிசமாகக் கரைந்துவிட்டன. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளால் உயிரிழப்பு ஏற்பட்டன. பூங்காவில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டி ஏரிகளில் தார்தோமி, லுக்கே [4][5] Luggye,[6] மற்றும் டெரிகாங் [7] போன்றவை முதன்மையானவையாகும். பருவகாலங்களில் வெள்ள அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் தற்காலிக முகாம்கள் அமைத்துப் பூங்கா ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். [6]

 
இமயமலை சிகரத்தில் உள்ள சிக்மி டோர்சி தேசிய பூங்கா, பூட்டான்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Parks of Bhutan". Bhutan Trust Fund for Environmental Conservation online. Bhutan Trust Fund. Archived from the original on 2 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-03-26.
  2. 2.0 2.1 2.2 "Jigme Dorji National Park". Himalaya 2000 online. Bhutan Travel Guide. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.
  3. (PDF) Parks. Protected Areas Programme. 9. IUCN – The World Conservation Union. October 1999. http://cmsdata.iucn.org/downloads/parks_oct99.pdf. பார்த்த நாள்: 2011-03-26. 
  4. Pelden, Sonam (3 September 2010). "Thorthormi water level brought down 43 cm". Bhutan Observer online. Archived from the original on 19 January 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-03-27.
  5. Choden, Kuenzang C (21 August 2009). "A major GLOF in 2010?". Bhutan Observer online. Archived from the original on 2011-10-03. பார்க்கப்பட்ட நாள் 2011-03-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. 6.0 6.1 Pelden, Sonam (9 October 2009). "Thorthormi water level brought down". Bhutan Observer online. Archived from the original on 2011-01-19. பார்க்கப்பட்ட நாள் 2011-03-27.
  7. "Snowman Trek I (to Sephu)". Tourism Council of Bhutan online. Government of Bhutan. 26 August 2008. Archived from the original on 2011-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-04-24. {{cite web}}: Unknown parameter |= ignored (help)