சிந்த் கௌர்

சீக்கிய பேரரசின் மகாராணி

மகாராணி சிந்த் கௌர் (Maharani Jind Kaur 1817கள்- 1 ஆகத்து 1863) 1843 முதல் 1846 வரை சீக்கிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். சீக்கிய பேரரசின் முதல் மனனரான ரஞ்சித் சிங்கின் இளைய மனைவியும், கடைசி அரசனான துலீப் சிங்கின் தாயும் ஆவார். இவர் அழகு, ஆற்றல் மற்றும் நோக்கத்தின் வலிமைக்கு புகழ்பெற்றவர். மேலும், "இராணி சிந்தன்" என்று பிரபலமாக அறியப்பட்டார். ஆனால் இவரது புகழ் முக்கியமாக பிரித்தானியப் பேரரசின் மீது ஏற்பட்ட பயத்திலிருந்து பெறப்பட்டது. அவர்கள் இவரை "பஞ்சாபின் மெசலினா" என்று விவரித்தனர்.[1]

மகாராணி சிந்த் கௌர்
சீக்கியப் பேரரசின் மகாராணி
மகாராணி சாகிபா
இராணி சிந்தன்
பஞ்சாபின் கடைசி மகாராணி
45களில் மகாராணி சிந்த் கௌர்.
(ஓவியம் சியோர்சு ரிச்மாண்டு)
சீக்கியப் பேரரசின் மகாராணி
பதவிக்காலம்1835கள் – 1839
சீக்கியப் பேரரசீக்கியப் பேரரசின் அரசப் பிரதிநிதி
அரசப் பிரதிநிதி1843கள் – 1846
ஏகாதிபத்தியம்துலீப் சிங்
பிறப்பு1817 (1817)
சச்சார், குஜ்ரன்வாலா, சீக்கியப் பேரரசு
(தற்போதைய பஞ்சாப், பாக்கித்தான்)
இறப்பு1 ஆகத்து 1863(1863-08-01) (அகவை 45)
கென்சிங்டன், மிடில்செக்ஸ், ஐக்கிய இராச்சியம்
துணைவர்ரஞ்சித் சிங்
குழந்தைகளின்
பெயர்கள்
துலீப் சிங்
மரபுஅவுலாக்
தந்தைமன்ன சிங் அவுலாக்
மதம்சீக்கியம்

ரஞ்சித் சிங்கின் முதல் மூன்று வாரிசுகளின் படுகொலைகளுக்குப் பிறகு, துலீப் சிங் செப்டம்பர் 1843இல் தனது 5 வயதில் ஆட்சிக்கு வந்தார். தனது மகன் சார்பாக சிந்த் கௌர் அரசப் பிரதிநிதி ஆனார். முதலாம் ஆங்கிலேய-சீக்கியர்கள் போரில் தோல்வியடைந்த பிறகு, இவர் திசம்பர் 1846இல் ஒரு பிரித்தானிய ஆட்சிப் பிரதிநிதியின் கட்டுப்பாட்டின் கீழ், ஆட்சி செய்பவராக மாற்றப்பட்டார். இருப்பினும், இவருடைய சக்தியும் செல்வாக்கும் தொடர்ந்தது. இதை எதிர்த்து, பிரிட்டிசார் இவரை சிறையில் அடைத்து நாடு கடத்தினர். இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தன் மகனைப் பார்க்க இவர் மீண்டும் அனுமதிக்கப்படுவதற்கு முன் பதின்மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. [2]

சனவரி 1861இல் துலீப் சிங் தனது தாயை கொல்கத்தாவில் சந்திக்க அனுமதிக்கப்பட்டு அவருடன் மீண்டும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவர் 46 வயதில் ஆகத்து 1, 1863 அன்று இலண்டன் கென்சிங்டனில் இறக்கும் வரை தனது மகனுடன் இருந்தார். இவரது உடல் தற்காலிகமாக கென்சல் பசுமை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள நாசிக்கில் தகனம் செய்யப்பட்டார். இவரது எச்சங்கள் இறுதியாக இவரது கணவர் ரஞ்சித் சிங்கின் லாகூரில் உள்ள சமாதிக்கு (நினைவிடம்) இவரது பேத்தி இளவரசி பம்பா சோபியா ஜிந்தன் துலீப் சிங்கால் கொண்டு செல்லப்பட்டது.[3]

குடும்பம் தொகு

சிந்த் கௌர், குஜ்ரன்வாலாவின் சச்சார் என்ற இடத்தில் கொட்டகைகளின் மேற்பார்வையாளரான மன்னா சிங் அவுலாக் என்பவரின் மகளாக, ஜாட் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவருக்கு, சவகர் சிங் அவுலாக் என்ற ஒரு மூத்த சகோதரும், மினா சிங் என்ற ஒரு மூத்த சகோதரியும் இருந்தனர். இவரது மூத்த சகோதரி மினா சிங் இலாகூர் மாவட்டத்தின் பதானாவின் தலைவரான சர்தார் சவாலா சிங் பதானியாவை மணந்தார். இவர் சிந்த் கௌரின் அழகையும் நற்பண்புகளையும் ரஞ்சித் சிங்கிடம் கூரினார். ரஞ்சித் சிங் தனது 'அம்பையும் வாளையும்' கிராமத்திற்கு அனுப்பி 1835இல் இவரை மணந்தார்.[5] 6 செப்டம்பர் 1838 அன்று இவர் தனது ஒரே குழந்தையான துலீப் சிங்கைப் பெற்றெடுத்தார்.

புத்தகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் தொகு

2010ஆம் ஆண்டில், தி ரெபெல் குயின், என்ற ஒரு ஆவணப்படம் மைக்கேல் சிங் என்பவரால் வெளியிடப்பட்டது மற்றும் இந்திய நடிகை டயானா பிண்டோ மகாராணி சிந்த் கௌராக நடித்தார்.[6] வாழ்க்கையால் ஈர்க்கப்பட்ட சித்ரா பானர்ஜி திவாகருனி என்ற எழுத்தாளர் சனவரி 2020 இல்தி லாஸ்ட் குயின் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[7]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

நூல் விளக்கம் தொகு

  • The Encyclopedia of Sikhism, Harbans Singh, Editor-in-Chief, Punjabi University, 2002
  • The Oxford Dictionary of National Biography, Oxford University Press, January 2012 edition
  • B S Nijjar, Maharani Jind Kaur, Punjab Govt. Records
  • Christy Campbell, The Maharajah's Box, Harper Collins, 2010, ISBN 9780730446415
  • E Dalhousie Login, Lady Login's Recollections, Smith Elder, 1916
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்த்_கௌர்&oldid=3564551" இருந்து மீள்விக்கப்பட்டது