சினேகா தீப்தி

ஊடல சினேகா தீப்தி (Vootala Sneha Deepthi பிறப்பு 10 செப்டம்பர் 1996) ஓர் இந்தியத் துடுப்பாட்ட , வீராங்கனையான இவர் இந்தியப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார் . இவர் ஏப்ரல் 2013 இல் வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இரண்டு பெண்கள் பன்னாட்டு இருபது -20 மற்றும் ஒரு மகளிர் ஒபது போட்டியிலும் விளையாடியுள்ளார். உள்ளூர்ப் போட்டிகளில் தென் மண்டலம் மற்றும் ஆந்திராவுக்காக விளையாடியுள்ளார். [1]

சினேகா தீப்தி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஊடல சினேகா தீப்தி
பிறப்பு10 செப்டம்பர் 1996 (1996-09-10) (அகவை 28)
விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், India
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைஎதிர்ச்சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 108)12 ஏப்ரல் 2013 எ. Bangladesh
ஒநாப சட்டை எண்7
இ20ப அறிமுகம் (தொப்பி 38)2 ஏப்ரல் 2013 எ. Bangladesh
கடைசி இ20ப5 ஏப்ரல் 2013 எ. Bangladesh
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெப இ20
ஆட்டங்கள் 1 2
ஓட்டங்கள் 4 1
மட்டையாட்ட சராசரி 4.00 1.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 4 1
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: Cricinfo, 2 மே 2020

வாழ்க்கை

தொகு

சினேகா தீப்தி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் 1996 இல் பிறந்தார். குழந்தைப் பருவத்தில் எந்த விளையாட்டிலும் தீவிரமாக ஆர்வம் காட்டவில்லை என்றாலும், சகோதரர் மற்றும் தந்தையுடன் இணைந்து தெருவோரமாக துடுப்பாட்டம் விளையாடியுள்ளார். [2] தந்தையின் அறிவுறுத்தல் காரணமாக இவர் துடுப்பாட்டம் விளையாடத் துவங்கினார். நான்காம் தரநிலையின் போது இவர் பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரது தந்தை சினேகா தீப்தி மற்றும் அவரது இளைய சகோதரி ரம்யா தீபிகா ஆகியோரை கோடைகால பயிற்சி முகாமில் சேர்த்தார். இவரது குடும்பம் உக்குநகரத்திலிருந்து (விசாகப்பட்டினம் இரும்பு ஆலை) விசாகப்பட்டினத்தின் மற்றொரு புறநகரான போதிநமல்லய்யா பாலத்திற்கு குடிபெயர்ந்தது. பயிற்சியாளர் கிருஷ்ணாராவின் கீழ் முறையான பயிற்சி பெற்றார் மற்றும் மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கத்தின் வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டார். [3]

2013 இல், தீப்தி ஆந்திரப் பெண்கள் துடுப்பாட்ட அணியில் இருந்து இரு நூறுகள் அடித்த முதல் துடுப்பாட்ட வீராங்கனை ஆனார். மாவட்டங்களுக்கு இடையேயான மூத்த பெண்கள் துடுப்பாட்டப் போட்டியில் கிழக்கு கோதாவரிக்கு எதிராக 203 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2012-13 வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடருக்கான தேசிய அணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] அதன்மூலம் மிக இளம் வயதில் பெண்கள் பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடிய இந்திய வீராங்கனை எனும் பெருமை பெற்றார். அப்போது அவருக்கு வயது 16 வருடங்கள் மற்றும் 204 நாட்கள் ஆகும் [5] ஆகஸ்ட் 2015 இல், ஏசிஏ வட மண்டல மாவட்டங்களுக்கு இடையேயான பெண்கள் போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்ரீகாகுளத்திற்கு எதிராக 350 ஓட்டங்கள் எடுத்தார். இந்த போட்டியில் அவர் நான்கு ஓட்டங்களுக்கு இரண்டு இலக்குகளையும் கைப்பற்றினார்.

வெளி இணைப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Sneha Deepthi". CricketArchive. Archived from the original on 3 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. Pillay, Dipika. "I've Dhoni's posters on my walls!". http://timesofindia.indiatimes.com/news/Ive-Dhonis-posters-on-my-walls/articleshow/19363283.cms. 
  3. G., Narasimha Rao. "Confident Sneha Deepthi aims high". http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/confident-sneha-deepthi-aims-high/article7511035.ece. 
  4. "Sneha Deepthi". ESPNcricinfo. Archived from the original on 2 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
  5. "Records / Women's Twenty20 Internationals / Individual Records (Captains, Players, Umpires) / Youngest Players". ESPNcricinfo. Archived from the original on 2 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா_தீப்தி&oldid=3337508" இலிருந்து மீள்விக்கப்பட்டது