இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Double-barreled shotgun" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:04, 16 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி (சுருக்கமாக இரட்டைகள்) (ஆங்கிலம்: double-barreled shotgun) என்பது, இரண்டு குண்டுபொதிகளை ஒரேசமயத்தில் சுட வித்திடும், இரண்டு இணையான குழல்களைக் கொண்ட சிதறுதுமுக்கி ஆகும்.

ஒரு வழக்கமான பக்கம்-பக்கமான இரட்டைக்குழல் சிதறுதுமுக்கியின் உடைவு-இயக்கத்தை காட்டும் படம். இதில் ஆன்சன் & டீலீ பெட்டிப்பூட்டு இயக்கம் திறந்த நிலையில் உள்ளது. 

கட்டமைப்பு 

ஆங்கிலத்தில் 'டபுள்ஸ்' (doubles) என குறிப்பிடப்படும், (கிட்டத்தட்ட) அனைத்து நவீன இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகளும், உடைவு-இயக்கத்தை கொண்டிருப்பவையே ஆகும். உறையை நீக்குவதற்காகவும், மீண்டும் குண்டேற்றுவதற்காகவும் குழலாசனத்தை வெளிக்காட்டச் செய்யும், சாயக்கூடிய குழல்களை, இந்த இயங்குமுறை கொண்டிருக்கும்.

குழல் வடிவமைவு 

இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகள் இரண்டு அடிப்படையான வடிவ அமைவுகளில் வருகின்றன: பக்கம்-பக்கமான சிதறுதுமுக்கி (பxப) (side-by-side shotgun, SxS) மற்றும் மேல்/கீழான சிதறுதுமுக்கி (மே/கீ) (over/under shotgun, O/U); குழல்களின் அமைவினை சுட்டிக்காட்டும் வகையில் பெயரிட்டுள்ளனர். அசல் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் அனைத்துமே கிட்டத்தட்ட பxப வடிவங்களே ஆகும். முற்கால வெடிபொதிச் சிதறுதுமுக்கிகளும் பxப இயக்கத்தையே பிரயோகித்தன, ஏனெனில் இவற்றின் ஆரம்ப வடிவங்களில் திறந்தநிலை சுத்தியல்களைக் கொண்டிருந்தன. சுத்தியலற்ற வடிவங்கள் தோன்றியபோது, மே/கீ வடிவங்கள் அறிமுகமாயின; மேலும் பெரும்பாலான நவீனகால விளையாட்டுத் துப்பாக்கிகள், மே/கீ வடிவங்களே ஆகும்.

ஒற்றைக் குழல் மீளச்சுடும் சிதறுதுமுக்கிகளுடன் ஒப்பிடுகையில், இரட்டைகள் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட சாதக அம்சம் என்னவென்றால், ஒரே சமயத்தில் ஒன்றுக்குமேலான நெரிவுக்கு அணுக்கம் அளிக்கக்கூடிய வல்லமையே ஆகும். பக்கவாட்டு எறிதட்டு சுடுதல் போன்ற, சில சிதறுதுமுக்கி விளையாட்டுகள், குறுகிய துரத்தில் பக்கவாட்டில் இருந்து எறியப்படும் இலக்கை சுடுவதற்கு, ஒரேயொரு கட்டமான நெறிவே போதுமானது. விளையாடும் தட்டுகள் போன்ற மற்றவைகளில், சுடுநருக்கு மாறுபட்ட தூரங்களில் உள்ள இலக்குகளை அளிப்பதாலும்; இலக்குகள் சுடுநரை நோக்கியபடியோ, அல்லது சுடுநரை விட்டு விலகிப் போகும்படியோ அமைவதாலும்; இலக்குகளைத் தாக்க ஒரு நெரிவு போதாது. இரண்டு குழல்கள் கொண்டிருப்பின், அருகாமை இலக்குகளுக்கு (ஒரு குழலில்) திறந்தநிலை நெரிவையும், தொலை இலக்குகளுக்கு (மறு குழலில்) சற்றே குறுக்கமான நெரிவையும் சுடுநர் பிரயோகிக்கலாம்.

இதன் பாதகமான அம்சம் என்னவெனில், (மே/கீ அல்லது பxப) சிதறுதுமுக்கியின் இரு குழல்களும் இணையாக இல்லாமல், அவை குவியும்படியான கோணத்தில் அமைத்திருக்கும். இதனால் குழலில் இருந்து வெளியேறும் குண்டுகளும், ஒரு குறிப்பிட்ட தூரத்தில் (வழக்கமாக 40 யார்டுகள்) ஒன்றாகக் குவியும். பxப வடிவமைவில், இடது குழலில் இருந்து வெளியேறுபவை, 40 யார்டு தொலைவில் உள்ள குவியும்-புள்ளி வரை இடப்பக்கத்திலேயே செல்லும்; குவியும்-புள்ளியை கடந்தபின் வலப்பக்கம் நோக்கி செல்ல ஆரம்பிக்கும் (வலக்குழலில் இருந்து வெளியேறுபவைக்கும் இது பொருந்தும்). இதேபோல் மே/கீ வடிவமைவிலும், "கீழ்" குழலில் இருந்து வெளியேறுபவை, 40 யார்டுக்கு அப்பால், "மேல்" குழலில் இருந்து வெளியேறுபவையை விட உயரமாக நோக்கிச் செல்லும். ஆக, நிதர்சனமான சிதறுதுமுக்கிகளின் வீச்செல்லை வரை மட்டுமே, இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகள் துல்லியமானவை. இருந்தாலும், அதன் குண்டுகளின் பாய்ச்சல், இந்த துல்லியமளிக்கும் வீச்செல்லையை விட, நான்கு முதல் ஆறு மடங்கு வரையிலான வீச்செல்லையை கொண்டிருக்கும்.

பxப சிதறுதுமுக்கிகள் எப்போதும் விலை உடையதாக விளங்கும்; மேலும் இதைக்கொண்டு சரியாகக் குறி வைக்க மே/கீ-யைவிட அதிக பயிற்சி தேவை. 

இரட்டை சிதறுதுமுக்கிகள் உண்மையிலேயே மிக பாதுகாப்பானவை- ஏனெனில், துப்பாக்கியில் பொதி ஏற்றப்பட்டுள்ளதா அல்லது சுடத் தயாராக உள்ளதா, என்பதை துப்பாக்கியை உடைத்து திறந்து பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால், இழைவு அல்லது அரை-தானியக்க சிதறுதுமுக்கிகளில், ஆணியை கழற்றி அதன்பிறகு, அறையை உற்றுப் பார்த்தோ, அல்லது தொட்டு உணர்ந்தோ தான், பொதி இருக்கிறதா இல்லையா என அறிய முடியும்.

விசை இயங்குநுட்பம் 

முற்கால இரட்டைகள், இரு குழல்களுக்கும் தனித்தனியாக, இரண்டு விசைகளை கொண்டிருக்கும். அவை விசைக் காப்புக்குள், முன்னும் பின்னுமாக அமைந்து இருக்கும். இரண்டு விசைகளையும், இயக்குவதற்கு ஆள்காட்டிவிரல் மட்டுமே பிரயோகிக்கப்படும்; விசைக் காப்புக்குள் இரு விரல்களை வைத்து சுடுகையில், பின்னுதைப்பின் தூண்டுதலால், எதிர்பாரா இரட்டை-வெடிப்பு ஏற்படலாம். இரட்டை விசை வடிவமைப்புகள் பொதுவாகவே வலதுகை சுடுநருக்கு ஏற்றவாறு தான் இருக்கும். இரட்டை விசை வடிவமைப்புகளில், ஒரே நேரத்தில் இரு விசைகளையும் கூட அழுத்தி, இரு குழல்களையும் ஒரேசமயத்தில் சுட இயலும். ஆனால் இச்செயல் பொதுவாக தவிர்க்கப்படும், ஏனெனில் இது பின்னுதைப்பை இரட்டிப்பாக்கி, துப்பாக்கியையும் சுடுநரையும் பாதிக்கும். 

பின்னர் வந்த ரகங்கள், இரு குழல்களையும் மாறிமாறி வெடிக்கக் செய்த, ஒரே விசையை கொண்டிருந்தன; இதை ஒற்றைத் தெரிவு விசை (single selective trigger) அல்லது ஒ.தெ.வி. எனலாம். ஒ.தெ.வி இரு குழல்களையும் ஒரேசமயத்தில் சுட அனுமதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டது. 

இந்தியப் பகுதிகளில் பயன்பாடு 

இந்தியாவின் கிராமப்புறங்களில், அதிகாரமும் அந்தஸ்தும் உடைய ஆயுதமாக இரட்டைக்குழல் துப்பாக்கி பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீகார்பூர்வாஞ்சல், உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப்பில், இது பொதுவாக காணப்படும்.

மேலும் பார்க்க 

மேற்கோள்கள்