ஆணித் தள்ளுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Bolt thrust" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:37, 4 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

ஆணித் தள்ளுகை அல்லது குழலாசன அழுத்தம் (ஆங்கிலம்: Bolt thrust, breech pressure) என்பது, எறியம் சுடப்படுகையில், உந்து வாயுக்களால், இயங்குமுறையின் ஆணி அல்லது குழலாசனத்தின் மீது செலுத்தப்படும் பின்னோக்கிய விசையின் அளவை விவரிக்கும் ஒரு சொல் ஆகும். இச்சொல் அக எறியியல் மற்றும் (சிறிய ரக அல்லது பீரங்கி ரக) சுடுகலன்களில் பிரயோக்கிக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் விசை ஆனது, அளவும் (Magnitude), திசையும் கொண்டிருப்பதால்; இது ஒரு திசையன் பொருள் ஆகிறது.

ஆயுத வடிவமைப்பில் ஆணித் தள்ளுகை ஒரு முக்கிய காரணி ஆகும். எந்த அளவிற்கு ஆணித் தள்ளுகை அதிகம் ஆகிறதோ, அந்த அளவை தாக்குப்பிடிக்கும் வலிமையை பூட்டும் இயங்குநுட்பம் கொண்டிருக்க வேண்டும். 

பின்னுதைப்பின் அளவை கண்டறிய, ஆணித் தள்ளுகை பயன்படாது.

ஆணித் தள்ளுகை கணிப்பு 

அடிப்படையான கணிதத்தால், ஒரு குறிப்பிட்ட வெடிபொதியின் ஆணித் தள்ளுகையை துல்லியமாக கணக்கிடலாம்.

சூத்திரம் 

இங்கே:

பொதியுறைத் தலைகளும், அறைகளும் பொதுவாக வட்டமாக இருக்கும். ஒரு வட்டத்தின் பரப்பளவு: 

இங்கே:

  • π ≈ 3.1416
  • r = வட்டத்தின் ஆரையம்

இதையே, வட்டத்தின் விட்டம் d-ஐ கொண்டு எழுதினால் 

 
பச்சைக் கோடு ஆனது, பொதியுறைத் தலையின் உள் விட்டத்தை குறிக்கும். செந்நிறக் கோடு ஆனது, பொதியுறைத் தலையின் வெளி விட்டத்தை குறிக்கும்.  

இதில் ஒரு நடைமுறை சிக்கல் உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொதியுறையை சேதமாக்காமல், அதன் தலையின் உள் விட்டத்தை அளப்பது அவ்வளவு எளிதல்ல. 

ஆணித் தள்ளுகையை உத்தேசிப்பதர்கான செயல்முறை 

பொதியுறைத் தலையின் உள் விட்டத்திற்கு பதிலாக, அதன் வெளி விட்டத்தை இடுக்குமானி அல்லது திருகு அளவி போன்றவற்றைக் கொண்டு அளந்து, ஆணித் தள்ளுகையை கணிக்க பிரயோகிக்கலாம்.

அடிப்படையான கணக்கிடும் முறை கிட்டத்தட்ட ஒன்று தான், ஆனால் இப்போது சிறிய உள் பரப்பளவுக்கு பதிலாக, அதைவிட பெரிய வெளிப் பரப்பளவை கணக்கில் வைத்தால், 

இங்கே:

  • Fஆணி = ஆணித் தள்ளுகை அளவு
  • Pஉச்சம் = வெடிபொதியால் அறையில் ஏற்படும் உச்சபட்ச அழுத்தம் 
  • Aபுறம் = பொதியுறைத் தலையின் வெளிப் பரப்பளவு

பல்வேறு கைத்துப்பாக்கி/சுழல்-கைத்துப்பாக்கி வெடிபொதிகளின் உத்தேச ஆணித் தள்ளுகைகள் 

P1 (பொதியுறையின் அடித்தட்டு) விட்டம்  

பல்வேறு புரிதுமுக்கி வெடிபொதிகளின் உத்தேச ஆணித் தள்ளுகைகள் 

P1 (பொதியுறையின் அடித்தட்டு) விட்டம்

மேற்கோள்கள் 

புற இணைப்புகள் 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணித்_தள்ளுகை&oldid=2439104" இலிருந்து மீள்விக்கப்பட்டது