கன்னிப்பருவத்திலே

virgo sign in 2014

கன்னிப் பருவத்திலே என்பது 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] படத்திற்கான கதையை வைரவன் எழுத, திரைக்கதையை பாக்யராஜ் எழுதினார்.[2] இது கிராமத்து சல்லிக்கட்டு நிகழ்வில் காளையை அடக்கச் சென்று காயப்பட்டதால் ஆண்மையை இழந்த கணவன் (ராஜேஷ்) மற்றும் அவனது மனைவி (வடிவுக்கரசி) பற்றிய படம். சமூகத்தின் அன்றாட அழுத்தங்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் பெண்ணுடன் (வடிவுகரசி) திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை விரும்பும் மற்றொரு ஆணைச் (பாக்யராஜ்) சுற்றி கதை சுழல்கிறது.

கன்னிப் பருவத்திலே
ஒலிப்பேழை அட்டை
இயக்கம்பி. ஏ. பாலகுரு
தயாரிப்புஎஸ். ஏ. ராஜ்கண்ணு
ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
திரைக்கதைபாக்கியராஜ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜேஷ்
பாக்கியராஜ்
வடிவுக்கரசி
வெளியீடுசெப்டம்பர் 21, 1979
நீளம்3891 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை புலமைப்பித்தன், நேதாஜி, பூங்குயிலன் முத்துபாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆவாரம் பூமேனி"   எஸ். ஜானகி  
2. "பட்டுவண்ண ரோசாவாம்" (ஆண்குரல்)புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன்  
3. "நடைய மாத்து"   மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி  
4. "பட்டுவண்ண ரோசாவாம்" (பெண்குரல்)புலமைப்பித்தன்எஸ். ஜானகி  
5. "அடி அம்மாடி"   எஸ். ஜானகி  

வரவேற்ப்பு தொகு

கல்கியின் கௌசிகன், தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் முந்தைய படங்களான 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகியவை நிகழ்த்திய மாயாஜலத்தை மீண்டும் உருவாக்கத் தவறியதாகக் விமர்சித்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Ashok Kumar, S. R. (18 March 2005). "Veteran on a rewind". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 May 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050504130630/http://www.hindu.com/fr/2005/03/18/stories/2005031800540400.htm. 
  2. "'நடையை மாத்து உன் நடையை மாத்து'; 'பட்டுவண்ண ரோசாவாம்..'; பாக்யராஜ், ராஜேஷ், வடிவுக்கரசியின் 'கன்னிப்பருவத்திலே' – 41 ஆண்டுகளாகியும் மறக்கமுடியாத ஹிட் லிஸ்ட் படம்!". Hindu Tamil Thisai. 21 September 2020. Archived from the original on 3 October 2020. பார்க்கப்பட்ட நாள் 21 September 2020.
  3. "Kanni Paruvathile". Raaga.com. Archived from the original on 3 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-10-01.
  4. "Kanni Paruvathile". IsaiShop. Archived from the original on 13 September 2021. பார்க்கப்பட்ட நாள் 13 September 2021.
  5. கெளசிகன் (21 October 1979). "கன்னிப்பருவத்திலே." Kalki. p. 64. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 15 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னிப்பருவத்திலே&oldid=3866794" இலிருந்து மீள்விக்கப்பட்டது