த டார்க் நைட் ரைசஸ்
ஆங்கிலத் திரைப்படம்
இந்த கட்டுரை எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பற்றியது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாள் அண்மிக்கும் போது இதன் விவரங்கள் மாற்றமடையலாம். |
த டார்க் நைட் ரைசஸ் (The Dark Knight Rises) 2012 இல் வெளிவரவிற்கும் அமெரிக்கத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்படுகிறது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், கேரி ஓல்ட்மேன், தாம் ஹார்டி, அன் ஹாத்வே, மரியன் கோடில்லர்ட், ஜோசப் கார்டன்-லெவிட், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்ட பேட்மேன் பிகின்ஸ் மற்றும் த டார்க் நைட் ஆகியத் திரைப்படங்களின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவருகிறது. இத்திரைப்படம் நோலன் இயக்கும் பேட்மேன் திரைப்படங்களின் இறுதித் திரைப்படம் என்று கூறப்பட்டுள்ளது. சூலை 20 2012 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகின்றது.
த டார்க் நைட் ரைசஸ் The Dark Knight Rises | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிறிஸ்டோபர் நோலன் |
தயாரிப்பு | கிறிஸ்டோபர் நோலன் சார்லஸ் ரோவன் எம்மா தாமஸ் |
மூலக்கதை | பாப் கேன் இன் புதினம். (கதாப்பாத்திரங்கள் மட்டும் |
திரைக்கதை | கிறிஸ்டோபர் நோலன் ஜோனதன் நோலன் |
இசை | ஹன்ஸ் சிம்மர் |
நடிப்பு | கிரிஸ்டியன் பேல் மைக்கேல் கேயின் கேரி ஓல்ட்மேன் தாம் ஹார்டி அன் ஹாத்வே மரியன் கோடில்லர்ட் ஜோசப் கார்டன்-லெவிட் மார்கன் ஃபிரீமன் |
ஒளிப்பதிவு | வால்லி பிஸ்தர் |
படத்தொகுப்பு | லீ சிமித் |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் |
வெளியீடு | சூலை 20, 2012 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $250 மில்லியன் |
கதாப்பாத்திரங்கள்
- கிரிஸ்டியன் பேல் - புரூஸ் வேய்ன்
- மைக்கேல் கேயின் - ஆல்பிரெட் பென்னிவரத்
- கேரி ஓல்ட்மேன் - ஜேம்ஸ் கார்டன்
- தாம் ஹார்டி - பேன்
- அன் ஹாத்வே - செலினா கைல்
- மரியன் கோடில்லர்ட் - மிராண்டா டேயிட்
- ஜோசப் கார்டன்-லெவிட் - ஜான் பிளேக்
- மார்கன் ஃபிரீமன் - லூசியஸ் பாக்ஸ்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த டார்க் நைட் ரைசஸ்
- ஆல்ரோவியில் த டார்க் நைட் ரைசஸ்