சிலம்பு விரைவுத் தொடருந்து

சிலம்பு விரைவுத் தொடர்வண்டி (Silambu Express) (16181 / 16182) என்பது சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை வரைச் செல்லும் ஓர் விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், தென்காசி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 683 கி.மீ தூரத்தை, 14 மணி நேரங்களில் கடக்கிறது.

சிலம்பு விரைவுத் தொடர்வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவுத் தொடர்வண்டி
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை22 சூன் 2013 (2013-06-22)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர்
இடைநிறுத்தங்கள்26
முடிவுசெங்கோட்டை
ஓடும் தூரம்683 km (424 mi)
சராசரி பயண நேரம்14 மணிநேரங்கள்
சேவைகளின் காலஅளவுவாரம் மூன்று முறை
தொடருந்தின் இலக்கம்16181 / 16182
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1 AC, 2 AC, 3 AC, SL, UR
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஉண்டு
காணும் வசதிகள்பெரிய சாளரம்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676மிமீ (5 அடி 6 அங்)
வேகம்சராசரி - 50 கிமீ/ம
காலஅட்டவணை எண்கள்8 / 8A[1]

வரலாறு தொகு

பெயர் காரணம் தொகு

பயண நேரங்கள் தொகு

இவ்வண்டியானது வாரம் மூன்று முறை செயல்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை செல்லும் நேரமானது சென்னையிலிருந்து இரவு 08 மணி 20 நிமிடங்களுக்கு புறப்படும் இரயிலானது இரவு 02 மணி 10 நிமிடங்களுக்கு திருச்சியைச் சென்றடைந்து, பின்னர் மறுநாள் காலை 09 மணி 25 நிமிடங்களுக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. இதன் பயண நேரம் ஏறக்குறைய 13 மணி 30 நிமிட நேரம் ஆகும். இந்த இரயில் செல்லும் நாட்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்கள் ஆகும். பின்னர் செங்கோட்டை முதல் சென்னைக்கு திரும்பி வரும் நேரமானது செங்கோட்டையில் மாலை 04 மணிக்கு புறப்படும் இரயிலானது இரவு 11 மணி 40 நிமிடங்களுக்கு திருச்சியை வந்தடைந்து, பின்னர் மறுநாள் காலை 5 மணி 35 நிமிடங்களுக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இதன் பயண நேரம் ஏறக்குறைய 14 மணி நேரம் ஆகும். இந்த இரயில் திரும்பும் நாட்கள் செவ்வாய்,வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் ஆகும்.

பெட்டிகளின் விவரம் தொகு

இவ்வண்டியில் மொத்தம் 17 பெட்டிகள் உள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
  SLR UR UR S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B2 B1 A1 H1 UR UR UR SLR

நிறுத்தங்கள் தொகு

இவ்வண்டியானது மொத்தம் 26 இடங்களில் நின்று செல்கின்றது (புறப்படும் இடம் மற்றும் போய்ச் சேரும் இடத்தையும் சேர்த்து)

சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை உள்ள நிறுத்தங்கள்.

 • சென்னை எழும்பூர்
 • தாம்பரம்
 • செங்கல்பட்டு
 • மேல்மருவத்தூர்
 • விழுப்புரம்
 • விருத்தாசலம்
 • திருச்சி
 • புதுக்கோட்டை
 • செட்டிநாடு
 • காரைக்குடி
 • தேவக்கோட்டை சாலை
 • சிவகங்கை
 • மானாமதுரை
 • நரிக்குடி
 • திருச்சுழி
 • அருப்புக்கோட்டை
 • விருதுநகர்
 • திருத்தங்கல்
 • சிவகாசி
 • திருவில்லிப்புத்தூர்
 • இராஜபாளையம்
 • சங்கரன்கோவில்
 • பாம்பகோவில்சந்தை
 • கடையநல்லூர்
 • தென்காசி
 • செங்கோட்டை

செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை உள்ள நிறுத்தங்கள்.

 • செங்கோட்டை
 • தென்காசி
 • கடையநல்லூர்
 • பாம்பகோவில்சந்தை
 • சங்கரன்கோவில்
 • இராஜபாளையம்
 • திருவில்லிப்புத்தூர்
 • சிவகாசி
 • திருத்தங்கல்
 • விருதுநகர்
 • அருப்புக்கோட்டை
 • திருச்சுழி
 • நரிக்குடி
 • மானாமதுரை
 • சிவகங்கை
 • தேவக்கோட்டை சாலை
 • காரைக்குடி
 • செட்டிநாடு
 • புதுக்கோட்டை
 • திருச்சி
 • விருத்தாசலம்
 • விழுப்புரம்
 • மேல்மருவத்தூர்
 • செங்கல்பட்டு
 • தாம்பரம்
 • சென்னை எழும்பூர்

மேற்கோள்கள் தொகு