சிலம்பு விரைவுத் தொடருந்து
சிலம்பு விரைவுத் தொடர்வண்டி (Silambu Express) (16181 / 16182) என்பது சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை வரைச் செல்லும் ஓர் விரைவுத் தொடர்வண்டி ஆகும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகாசி, திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், தென்காசி ஆகியவை இதன் முக்கிய வழித்தடமாகும். இத்தொடர்வண்டியானது 683 கி.மீ தூரத்தை, 14 மணி நேரங்களில் கடக்கிறது.
சிலம்பு விரைவுத் தொடர்வண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவுத் தொடர்வண்டி |
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு |
முதல் சேவை | 22 சூன் 2013 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | சென்னை எழும்பூர் |
இடைநிறுத்தங்கள் | 26 |
முடிவு | செங்கோட்டை |
ஓடும் தூரம் | 683 km (424 mi) |
சராசரி பயண நேரம் | 14 மணிநேரங்கள் |
சேவைகளின் காலஅளவு | வாரம் மூன்று முறை |
தொடருந்தின் இலக்கம் | 16181 / 16182 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | 1 AC, 2 AC, 3 AC, SL, UR |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
காணும் வசதிகள் | பெரிய சாளரம் |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | 1,676மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | சராசரி - 50 கிமீ/ம |
காலஅட்டவணை எண்கள் | 8 / 8A[1] |
வரலாறு
தொகு- 2013 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் தேதி சென்னை மற்றும் காரைக்குடி இடையே வாரமிருமுறை இவ்விரைவுவண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை வழியாக மானாமதுரை வரை நீட்டிக்கப்பட்டது. பின்பு மார்ச் 04, 2017 அன்று அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.[2][3]
பெயர் காரணம்
தொகு- இத்தொடர்வண்டியின் பெயருக்கான காரணம், தென்னிந்திய இதிகாசமான சிலப்பதிகாரத்தின் நாயகி வீரதமிழ் பெண்மணி கண்ணகியின் புகழைபோற்றும் விதமாக அவளது கணவனான கோவலனை சங்ககாலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் தவறான தீர்ப்பால் கோவலன் தலை வெட்டப்பட்டு விட்டதால். அந்த அநீதியை எதிர்த்து பாண்டிய மன்னனின் சொந்த நாடான மதுரையை கண்ணகி தனது மாணிக்க ரத்னங்களாலான சிலம்பால் மதுரையையும், பாண்டியரின் கோட்டையையும் எறித்து மதுரையை மயான பூமியாக மாற்றிய சிலம்பை ஆதராமாக கொண்டு இந்த இரயிலுக்கு "சிலம்பு விரைவு வண்டி" என்று பெயரிடப்பட்டது.[சான்று தேவை]
பயண நேரங்கள்
தொகுஇவ்வண்டியானது வாரம் மூன்று முறை செயல்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை செல்லும் நேரமானது சென்னையிலிருந்து இரவு 08 மணி 20 நிமிடங்களுக்கு புறப்படும் இரயிலானது இரவு 02 மணி 10 நிமிடங்களுக்கு திருச்சியைச் சென்றடைந்து, பின்னர் மறுநாள் காலை 09 மணி 25 நிமிடங்களுக்கு செங்கோட்டையைச் சென்றடைகிறது. இதன் பயண நேரம் ஏறக்குறைய 13 மணி 30 நிமிட நேரம் ஆகும். இந்த இரயில் செல்லும் நாட்கள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்கள் ஆகும். பின்னர் செங்கோட்டை முதல் சென்னைக்கு திரும்பி வரும் நேரமானது செங்கோட்டையில் மாலை 04 மணிக்கு புறப்படும் இரயிலானது இரவு 11 மணி 40 நிமிடங்களுக்கு திருச்சியை வந்தடைந்து, பின்னர் மறுநாள் காலை 5 மணி 35 நிமிடங்களுக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது. இதன் பயண நேரம் ஏறக்குறைய 14 மணி நேரம் ஆகும். இந்த இரயில் திரும்பும் நாட்கள் செவ்வாய்,வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் ஆகும்.
பெட்டிகளின் விவரம்
தொகுஇவ்வண்டியில் மொத்தம் 17 பெட்டிகள் உள்ளன.
- சென்னையிலிருந்து - திருச்சி வரை மின்சார இயந்திரம் செயல்படுத்தப்படுகிறது. திருச்சியிலிருந்து - செங்கோட்டை வரை மின்சார இணைப்பு இல்லாததால், டீசல் இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
SLR | UR | UR | S8 | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B2 | B1 | A1 | H1 | UR | UR | UR | SLR |
நிறுத்தங்கள்
தொகுஇவ்வண்டியானது மொத்தம் 26 இடங்களில் நின்று செல்கின்றது (புறப்படும் இடம் மற்றும் போய்ச் சேரும் இடத்தையும் சேர்த்து)
சென்னை எழும்பூர் முதல் செங்கோட்டை வரை உள்ள நிறுத்தங்கள்.
- சென்னை எழும்பூர்
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- மேல்மருவத்தூர்
- விழுப்புரம்
- விருத்தாசலம்
- திருச்சி
- புதுக்கோட்டை
- செட்டிநாடு
- காரைக்குடி
- தேவக்கோட்டை சாலை
- சிவகங்கை
- மானாமதுரை
- நரிக்குடி
- திருச்சுழி
- அருப்புக்கோட்டை
- விருதுநகர்
- திருத்தங்கல்
- சிவகாசி
- திருவில்லிப்புத்தூர்
- இராஜபாளையம்
- சங்கரன்கோவில்
- பாம்பகோவில்சந்தை
- கடையநல்லூர்
- தென்காசி
- செங்கோட்டை
செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை உள்ள நிறுத்தங்கள்.
- செங்கோட்டை
- தென்காசி
- கடையநல்லூர்
- பாம்பகோவில்சந்தை
- சங்கரன்கோவில்
- இராஜபாளையம்
- திருவில்லிப்புத்தூர்
- சிவகாசி
- திருத்தங்கல்
- விருதுநகர்
- அருப்புக்கோட்டை
- திருச்சுழி
- நரிக்குடி
- மானாமதுரை
- சிவகங்கை
- தேவக்கோட்டை சாலை
- காரைக்குடி
- செட்டிநாடு
- புதுக்கோட்டை
- திருச்சி
- விருத்தாசலம்
- விழுப்புரம்
- மேல்மருவத்தூர்
- செங்கல்பட்டு
- தாம்பரம்
- சென்னை எழும்பூர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Time Table of Chennai Egmore - Rameswaram (Main Line)" (PDF). Indian Railways. Southern Railway zone. pp. 43 – 44 (93 – 94). பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
- ↑ "செங்கோட்டை வரை நீட்டிப்பு: சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் கால அட்டவணை". தினமணி (12 மார்ச், 2017)
- ↑ "சிலம்பு எக்ஸ்பிரஸ் இன்று முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு: பொது மக்கள் மகிழ்ச்சி".ஒன் இந்தியா தமிழ்