சில் பட்டா
சில் பட்டா (Shil Phata) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டம், தானே மாநகராட்சியில் உள்ள பகுதியாகும். இது பார்சிக் மலைக்கு கிழக்கே, பழைய மும்பை-புனே சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 4) அமைந்துள்ளது. இது தானே நகரத்திற்கும், நவி மும்பைக்கும் மற்றும் கல்யாண் - டோம்பிவிலிக்கும் சந்திப்பாக உள்ளது. சில் பட்டாவிற்கும், கல்யாண் இடையே மோனோ இரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது.
சில்பட்டா
शिळफाटा | |
---|---|
சில் பட்டா சர்க்கிள் | |
ஆள்கூறுகள்: 19°08′50″N 73°02′26″E / 19.14735°N 73.04053°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | தானே |
பெருநகரப் பகுதி | மும்பை பெருநகரப் பகுதி |
அரசு | |
• வகை | தானே மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400612, 421204 |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-04 |
4 ஏப்ரல் 2013 அன்று சில் பட்டாவில் விதிமுறைகள் மீறி கட்டிய கட்டிட இடிபாட்டில் 72 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். [1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thane building collapse: 2 developers arrested; toll touches 72". The Hindu. 6 April 2013. Retrieved 6 April 2013.
- ↑ "Death toll in Thane building collapse mounts to 72." The Hindu Business Line. 6 April 2013. Retrieved 6 April 2013.