சிவகோரி (Shivkhori) எனும் மலை குகைக்கோயில் சம்மு காசுமீர் மாநிலத்தின், ரியாசி மாவட்டத்தில் இமயமலையில் அமைந்துள்ள சிவ லிங்க கோயில் ஆகும்.

சிவகோரி குகை சிவலிங்கம்

அமைவிடம்

தொகு

சிவகோரி சிவலிங்கக்கோயில் இமயமலையில் மலைகள் சூழ்ந்த அடர்ந்த காட்டுப் பகுதியில், சம்மு காசுமீர் மாநிலத்தில் ரியாசி மாவட்டத்தில், பெளனி பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள ரன்சூ எனும் மலை கிராமத்தில் அமைந்துள்ளது. ஜம்மு நகரத்திலிருந்து 140 கீ. மீ., தொலைவிலும், உதம்பூர் நகரத்திலிருந்து 120 கி. மீ., தொலைவிலும், வைஷ்ணவ தேவி அம்மன் கோயில் அமைந்துள்ள கட்ரா நகரத்திலிருந்து 80 கீ. மீ., தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. பேருந்துகள் சிவகோரி மலைக்கோயிலின் அடிவார கிராமமான ரன்சூ வரை செல்கிறது. அதன்பின் ரன்சூ கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை மலை மீது நடந்து சென்று பின் சிவகோரி குகையில் அமைந்துள்ள சிவலிங்கத்தை வழிபட வேண்டும்.

சிவகோரி கோயிலின் விவரம்

தொகு

`கோரி` எனும் காஷ்மீர மொழிச் சொல்லுக்கு `குகை` என்று பொருள். எனவே சிவகோரி எனில் சிவன் குகை எனப் பொருளாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த சிவகோரிக் குகைக்கோயில் 200 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும், இரண்டு அல்லது மூன்று மீட்டர் உயரம் கொண்டது. சிவகோரி சிவலிங்கம் சுயம்பு வடிவானது. (தான்தோன்றி) சிவகோரி சிவன் குகைக்கோயிலின் வெளிப்புறம் அகலமாகவும் உட்புறம் குறுகலாகவும் அமைந்துள்ளது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு வரும் பக்தர்களும், அமர்நாத் புனித யாத்திரை காலத்தில் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களும் சிவகோரி குகைக்கோயிலுக்கும் சென்று சிவலிங்கத்தை வழிபடுகின்றனர். மேலும் இக்குகைக் கோயிலில் பார்வதி, ஐந்து தலை பிள்ளையார், முருகன், இராமர், சீதை ஆகிய கடவுளர்களின் திருவுருவச்சிலைகளும் திரிசூலமும் அமைந்துள்ளன.

கோயில் நிர்வாகம்

தொகு

இக்கோயில் நிர்வாகத்தை சிவகோரி தேவஸ்தான வளர்ச்சிக் குழு கவனித்துக் கொள்கிறது.

சிவகோரிக்கு அருகில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் கோயில்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகோரி&oldid=3367487" இலிருந்து மீள்விக்கப்பட்டது