சிவசூரியன்
சிவசூரியன் (பிறப்பு 1923 இறப்பு 1997) இந்திய திரைப்பட நடிகர்கள் ஒருவர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
குடும்பம்
தொகுசிவசூரியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவராம மங்கலம் என்ற சிற்றூரில் சிதம்பரத் தேவர் வடிவு ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[1] இவருக்கு வடிவு என்கின்ற சகோதரி உள்ளார்.
1950-இல் அண்ணாதுரை, கருணாநிதி முன்னிலையில் சிவசூரியனுக்கு எஸ். துரைப்பாண்டிச்சி அவர்களுடன் திருமணம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. இத் தம்பதிகளுக்கு 14 குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களில் பேபி வடிவு, சாந்தி,ராஜாமணி என்ற பெண்களும் சிதம்பரம்,கந்தகுமார், பூச்சி முருகன் என்ற மகன்களும் உள்ளனர்.
தொழில்
தொகுஏழாம் வகுப்பு வரை படித்த சிவசூரியன் நாடகத்தின் நடிகராக நவாப் ராஜமாணிக்கம் சபாவில் நடித்தார். எம்ஜிஆர், எம். என். நம்பியார் ஆகியோர் நாடகங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் உடன் நாடகம் நடித்த காலங்களில் அவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
திரைப்படங்கள்
தொகு- சின்னஞ்சிறு உலகம்,
- சரஸ்வதி சபதம்,
- தேன் மழை,
- திருவருட்செல்வர்
- பூமாலை
- தில்லானா மோகனாம்பாள்
- தாய் மேல் ஆணை
- சக்கரம் (திரைப்படம்)
- டெல்லி மாப்பிள்ளை
- அஞ்சல் பெட்டி 520
- மனசாட்சி
- உலகம் இவ்வளவு தான்
- கண்மலர்
- அன்புக்கோர் அண்ணன்
- ஜஸ்ரிஸ் விஸ்வநாத்
- நேற்று இன்று நாளை,
- இதயக்கனி,
- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்,
- துள்ளி ஓடும் புள்ளிமான்
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 "அன்றும் வந்ததும் அதே நிலா: நட்பில் மலர்ந்த நடிகர்!". Hindu Tamil Thisai. 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2024-03-07.