சிவெத்லானா அலெக்சியேவிச்

சிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச் (Svetlana Alexandrovna Alexievich, உருசியம்: Светлана Александровна Алексиевич; பெலருசிய மொழி: Святлана Аляксандраўна Алексіевіч பிறப்பு: மே 31, 1948) பெலருசிய புலனறியும் ஊடகவியலாளரும், கவிஞரும், உருசிய மொழி எழுத்தாளரும் ஆவார். இவருக்கு "நமது காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும் அவரது எழுத்திற்காக" 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4][5] இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெறும் 14ஆவது பெண் இவராவார்.

சிவெத்லானா அலெக்சியேவிச்
Svetlana Alexievich
இயற்பெயர்
Святлана Аляксандраўна Алексіевіч
பிறப்புசிவெத்லானா அலெக்சாந்திரோவ்னா அலெக்சியேவிச்
மே 31, 1948 (1948-05-31) (அகவை 76)
ஸ்டானிசுலாவ், உக்ரைன்
தொழில்பத்திரிக்கையாளர்
எழுத்தாளர்
தேசியம்பெலருசியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2015)
செருமனிய புத்தக வணிக அமைதிப் பரிசு (2013)
இணையதளம்
http://alexievich.info/indexEN.html

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மேற்கு உக்ரைனிய நகரமான ஸ்தானிசுலாவில் பெலருசியத் தந்தைக்கும், உக்ரைனியத் தாயுக்கும் சிவெத்லானா பிறந்தார். சிவெத்லானா பெலருசில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் பல உள்ளூர் பத்திரிகைகளின் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் பெலருடிய அரசப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1972 இல் பட்டம் பெற்றார். பின்னர் மின்ஸ்க் நகரில் வெளியாகும் நேமன் என்ற இலக்கியப் பத்திரிகையின் செய்தியாளராகப் பணியாற்றினார்.[6]

இரண்டாம் உலகப் போர், ஆப்கான் சோவியத் போர், செர்னோபில் அணு உலை விபத்து, சோவியத் வீழ்ச்சி போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டோருடனான தனது நேரடி உரையாடல்களை பத்திரிகைகளில் வெளியிட்டார். பெலருசின் லூக்கசென்கோ அரசின் ஆட்சியில் பெரிதும் பாதிப்புக்குள்ளான இவர்,[7] 2000 ஆம் ஆண்டில் பெலருசில் இருந்து வெளியேறி,[8] பாரிசு, பெர்லின் நகரங்களில் அரசியல் தஞ்சம் பெற்று வாழ்ந்து வந்தார். 2011 ஆம் ஆண்டில் மீண்டும் மின்ஸ்க் திரும்பினார்.[9]

வெளியான ஆக்கங்கள்

தொகு
புதினங்கள் (உருசிய மொழியில்)[10]
  • У войны не женское лицо (போரின் பெண்மையில்லாத முகம், 1985)
  • Последние свидетели (கடைசி சாட்சிகள், 1985)
  • Цинковые мальчики (துத்தநாகத்தால் மூடப்பட்ட சிறுவர்கள், 1989)
  • Чернобыльская молитва (செர்னோபில்லில் இருந்து குரல்கள், 1997)
  • Время секонд хэнд (இரண்டாம் தடவை பயன்படுத்திய நேரம், 2013)
  • Зачарованные смертью (இறப்புடன் கூடிய மயக்கம், பெலருசியம். 1993, உருசியம் 1994)

மேற்கோள்கள்

தொகு
  1. Blissett, Chelly. "Author Svetlana Aleksievich nominated for 2014 Nobel Prize பரணிடப்பட்டது 2015-01-07 at the வந்தவழி இயந்திரம்". Yekaterinburg News. 28 சனவரி 2014.
  2. "Svetlana Alexievich wins Nobel Literature prize". பிபிசி. 8 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2015.
  3. Dickson, Daniel; Makhovsky, Andrei (8 அக்டோபர் 2015). "Belarussian writer wins Nobel prize, denounces Russia over Ukraine". Stockholm/Minsk: ராய்ட்டர்ஸ். Archived from the original on 2015-10-08. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2015.
  4. "Svetlana Alexievich, investigative journalist from Belarus, wins Nobel Prize in Literature". Pbs.org. 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2015-10-08.
  5. Colin Dwyer (2015-06-28). "Belarusian Journalist Svetlana Alexievich Wins Literature Nobel : The Two-Way". NPR. பார்க்கப்பட்ட நாள் 2015-10-08.
  6. Brief biography of Svetlana Alexievich (Russian) பரணிடப்பட்டது 2014-09-18 at the வந்தவழி இயந்திரம், from Who is who in Belarus
  7. Biography of Aleksievich at Lannan Foundation website
  8. "Svetlana Alexievich: The Empire Will Not Pass Away Without Bloodshed". www.belarusians.co.uk. 18 செப்டம்பர் 2014. Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. "Svetlana Alexievich". www.pen-deutschland.de. PEN-Zentrum Deutschland. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 8 அக்டோபர் 2015.
  10. The Nobel Prize in Literature 2015 — Bio-bibliography in Russian. Nobelprize.org. Nobel Media AB 2014. Web. 8 Oct 2015.