சி. ப. முதலகிரியப்பா
சி. ப. முதலகிரியப்பா (C. P. Mudalagiriyappa, 24 சூன் 1940 – 23 மார்ச் 2024)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும் , இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கர்நாடகத் தலைவரும் ஆவார். இவர் 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் . மேலும், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் சித்ரதுர்கா மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] [3] 1998 இல் ஈராக்கிற்கு சபாநாயகர் ஜி. எம். சி. பாலயோகி தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார் [2]
சி. ப. முதலகிரியப்பா | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1985–1989 | |
தொகுதி | சிரா சட்டமன்றத் தொகுதி |
ஒன்பதாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1989–1991 | |
தொகுதி | சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி |
ஒன்பதாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1991–1996 | |
பத்தாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1991–1996 | |
தொகுதி | சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி |
பன்னிரண்டாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1998–1999 | |
தொகுதி | சித்ரதுர்கா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 சூன் 1940 சிரதா ஹள்ளி, தும்கூர் மாவட்டம், கருநாடகம். |
இறப்பு | 23 மார்ச்சு 2024 பெங்களூர், கருநாடகம் | (அகவை 83)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இலட்சுமி தேவி (7 மே 1970) |
பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 1 மகள் |
பெற்றோர் | பப்பே கௌடா |
கல்வி | இளங்கலை மற்றும் இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | அரசுக் சட்டக்கல்லூரி மற்றும் பெங்களூர்ப் பல்கலைக்கழகம், பெங்களூரு, கர்நாடகம் |
தொழில் | வேளாண்மை, வழக்கறிஞர், அரசியல் மற்றும் சமூகப்பணி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுமுதலகிரியப்பா 1940 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிரத்தா ஹள்ளியில் பப்பே கௌடா என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.[4]
கர்நாடகா, அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டமும் படித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசிபி முதலகிரியப்பா , 1970 மே 7 இல் லட்சுமி தேவி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Former MP C P Mudalagiriyappa passes away at 84
- ↑ 2.0 2.1 "Members Bioprofile -". பார்க்கப்பட்ட நாள் 26 December 2017.
- ↑ Sabha, India Parliament Lok (1993). Lok Sabha Debates (in ஆங்கிலம்).
- ↑ Sabha, India Parliament Lok (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat.