சீதாபூர் மாவட்டம்


சீதாப்பூர் மாவட்டம், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 70 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சீதாபூர் ஆகும். இது லக்னோ கோட்டத்தில் அமைந்துள்ளது.

சீதாபூர் மாவட்டம்
सीतापुर ज़िला
ستا پور ضلع
India Uttar Pradesh districts 2012 Sitapur.svg
சீதாபூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்லக்னோ கோட்டம்
தலைமையகம்சீதாபூர்
பரப்பு5,743 km2 (2,217 sq mi)
மக்கட்தொகை4,483,992 (2011)
மக்கள்தொகை அடர்த்தி781/km2 (2,020/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை11.84%
படிப்பறிவு61.12
பாலின விகிதம்888
வட்டங்கள்6
மக்களவைத்தொகுதிகள்4
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட எல்லைகள்தொகு

இம்மாவட்டத்தின் வடக்கே லக்கிம்பூர் கேரி மாவட்டம், கிழக்கே பகராயிச் மாவட்டம், தெற்கே லக்னோ மாவட்டம், தென்மேற்கே பாராபங்கி மாவட்டம், மேற்கே ஹர்தோய் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

அரசியல் & மாவட்ட நிர்வாகம்தொகு

இம்மாவட்டம் சீதாப்பூர், பிஸ்வான், மிஷ்ரிக், லகர்பூர், மகமதாபாத், சித்தௌலி என ஆறு வருவாய் வட்டங்களையும்;

2348 கிராமங்களும், 1329 கிராமப் பஞ்சாயத்துகளும் கொண்டது . மேலும் பிஸ்வான், மஹோலி, மிஷ்ரிக், மச்ரேத்தா, கோண்லமாவ், ஐலியா, ஹர்கோன், பர்சேந்தி, கைராபாத், லகர்பூர், பேஹ்டா, ரெளஸ்சா, சக்ரன், பிசவான், பஹலா முகமதாபாத், ராம்பூர் மதுரா, கஸ்மந்தா, சித்தௌலி என 19 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.

இம்மாவட்டம் மகோலி, சீதாப்பூர், ஹர்கோன், லகர்பூர், பிஸ்வான், செவ்தா, மகதாபாத், சித்தௌலி மற்றும் மிஷ்ரிக் என ஒன்பது சட்டமன்ற தொகுதிகளையும், சீதாப்பூர், தௌரக்ரா, மோகன்லால்கஞ்ச், மிஷ்ரிக் என நான்கு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 4,483,992 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.16% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 11.84% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.88% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 2,375,264 ஆண்களும் மற்றும் 2,108,728 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 888 பெண்கள் வீதம் உள்ளனர். 5,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 781 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 61.12% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 70.31% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 50.67 ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 747,558 ஆக உள்ளது. [1]

சமயம்தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,555,450 (79.29 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 893,725 (19.93 %) ஆகவுள்ளது.

மொழிகள்தொகு

உத்தரப் பிரதேச பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

பொருளாதாரம்தொகு

வேளாண்மைதொகு

கங்கை ஆற்றின் வடிநிலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையைச் சார்ந்து உள்ளது. கோதுமை, நெல், கரும்பு முக்கியப் பணப் பயிர்களாகும். உருளைக் கிழங்கு நிலக்கடலை, ஆமணக்கு அதிகம் பயிரிடப்படுகிறது.

தொழில் துறைதொகு

வேளாண் சார்ந்த தொழில்களான கரும்பாலைகள், எண்ணெய் வித்துக்கள் பிழியும் ஆலைகள், காகித ஆலைகள், அரிசி ஆலைகள், மாவு ஆலைகள் செயல்படுகிறது.

போக்குவரத்துதொகு

தொடருந்துதொகு

சீதாப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து லக்னோ, புதுதில்லி, கோரக்பூர் செல்வதற்கு தொடருந்து வசதிகள் உள்ளது.

சாலைகள்தொகு

லக்னோ - தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 24 சீதாப்பூர் நகரத்தின் வழியாக செல்கிறது.


மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாபூர்_மாவட்டம்&oldid=3527099" இருந்து மீள்விக்கப்பட்டது