சீன பச்சைப் பாம்பு
சீன பச்சைப் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | தையாசு
|
இனம்: | தை. தோரியே
|
இருசொற் பெயரீடு | |
தையாசு தோரியே (குந்தர், 1858) | |
வேறு பெயர்கள் [2] | |
பட்டியல்
|
சீன பச்சைப் பாம்பு (தையாசு மேஜர்) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு ஆகும்.[1][2]
விளக்கம்
தொகுசீன பச்சைப் பாம்பு மெலிந்த, நடுத்தர அளவிலான பாம்பு ஆகும். இதன் மொத்த நீளம் சராசரியாக 75 முதல் 90 செமீ (2 1⁄2-3 அடி) வரை இருக்கும். ஆனால் எப்போதாவது 120 செமீ (4 அடி) வரை வளரலாம். இப்பாம்பின் மேல் புறம் பச்சை நிறத்திலும் வயிற்றுப்புறச் செதில்கள் பச்சை-மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆண் பாம்பின் நடுத்தர-வயிற்றுப்புறச் செதில்கள் இணைப்புடன் காணப்படும். சில மாதிரிகள் சிதறிய கருப்பு புள்ளிகளை முதுகுப்புறத்தில் கொண்டுள்ளன.
பரவல்
தொகுசீன பச்சைப் பாம்பு மத்திய மற்றும் தெற்கு சீனாவில் (ஹைனான், ஹெனன், கான்சு, அன்ஹுயி, சிச்சுவான், புஜியான், குவாங்டொங், குவாங்சி, குயிசூ, ஹுனான், ஹூபே, ஜியாங்சி, சியாங்சு, சென்சி, செஜியாங், ஆங்காங்[3], தைவான், வடக்கு வியட்நாம், லாவோஸ் மற்றும் வங்கதேசம் (சில்ஹெட், ரடார்குல் சதுப்பு காடு) ஆகிய இடங்களில் காணப்படுகிறது.[4]
இது ஈரப்பதமான காடுகளிலும் விவசாய நிலங்களிலும் காணப்படுகிறது.
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுசீன பச்சைப் பாம்பு பகலாடி வகையினைச் சார்ந்த பகுதி மரங்களில் வாழும் பாம்பு ஆகும். இவை அரிதாகவே மக்களைக் கடிக்கும்.[4]
உணவு
தொகுசீன பச்சைப் பாம்பு, மண்புழு, பூச்சி குடம்பிகள் மற்றும் பிற மென்மையான முதுகெலும்பற்ற விலங்குகளை உணவாக உட்கொள்ளும்.[4]
இனப்பெருக்கம்
தொகுசீன பச்சைப் பாம்பு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு முறை 2 முதல் 16 முட்டைகளை இடுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 China Snakes Working Group (2014). "Ptyas major". IUCN Red List of Threatened Species 2014: e.T192054A2033832. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T192054A2033832.en. https://www.iucnredlist.org/species/192054/2033832. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 Ptyas major at the Reptarium.cz Reptile Database. Accessed 4 May 2020.
- ↑ Reptiles of Hong Kong
- ↑ 4.0 4.1 4.2 Hans Breuer & William Christopher Murphy Snakes of Taiwan பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம்
மேலும் வாசிக்க
தொகு- Günther, A. 1858. Catalogue of Colubrine Snakes in the Collection of the British Museum. Trustees of the British Museum. (Taylor and Francis, Printers.) London. xvi + 281 pp. (Cyclophis major, p. 120.)
- Karsen, S. J., Lau, M.W.N, & Bogadek, A. (1998). Hong Kong Amphibians and Reptiles (2nd Edition). Provisional Urban Council Hong Kong. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-7849-05-7ISBN 962-7849-05-7