புடவை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
புடைவை, புடவை, அல்லது சேலை (அ) "'சீலை'" (saree)என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது. சேலை கட்டும்போது இடை ஆடைகளாக பாவாடையும், ரவிக்கையும் அணியப்படுகிறது.
பொதுவாக இதன் நீளம் 4 - 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுத்தப்படுகிறது.[1]பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுகிறது.
வரலாறு
தொகுஉடலைச் சுற்றிக் கட்டுகின்ற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் இத்தகைய ஆடைகள் இருந்திருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்த புடவையின் தோற்றம் பற்றியும் இதே நிலைதான். இது பண்டைக் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் இது இந்தியாவிலேயே உருவானதென்பது வேறு சிலரின் கருத்து. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலேயே புடவைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரதத்தில் வரும் திரௌபதியின் புடவை களையும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படும், உடலைச் சுற்றி இறுக்கமாக கற்சட்டைபோல் புடவை உடுத்திய களிமண் உருவ பொம்மையொன்று வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிற்காலங்களைச் சேர்ந்த பலவிதமாகப் புடவை கட்டிய பெண்களின் உருவச் சிலைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
கிட்டத்தட்ட கி.பி 3000ம் ஆண்டளவில் சிந்துசமவெளி நாகரிக காலப்பகுதியில் முதன் முதலில் சேலை ஒரு ஆடையாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவிலே பட்டின் இராசதானிகளாக கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களுரும் மைசூரும் விளங்குகின்றன. பருத்தி கலக்கப்படாத துய்மையான சாறி என்ற பட்டுநூல் சூரத்தில் மட்டுமே கிடைக்கின்றது. இந்தப் பெயரே ஆங்கிலத்தில் சேலைக்கு சாறி என்ற பெயர் வரக் காரணமாயிற்று.[2] சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை பற்றிய முதல் குறிப்புகளை கிமு 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கிமு 200-50) ஒரு வட இந்திய சுடு மண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது. இந்திய காந்தார நாகரிகத்தில் (கிமு50-கிபி300) பல்வேறுபட்ட வகைகளில் சேலை சுற்றி அணியப்படும் முறை காணப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மேற்கு மகாராஷ்ரத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்களும் அசுரப் பெண்களும் உடல் முழுவதையும் சுற்றி சேலை அணிந்துள்ளதைக் காணலாம்.[3]
ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக்கால இந்துக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் புனிதமான ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும். முஸ்லிம்களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும், தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் ரவிக்கை போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இலங்கை
தொகுசேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறுபட்ட போதும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் பெண்களும் இலங்கைத் தமிழ், சிங்களப் பெண்களும் பொதுவாகச் சேலையே அணிந்து வருகின்றனர். பணக்காரராயினும், ஏழையாயினும், கட்டையானவராயினும், நீண்டவராயினும், மெலிந்தவராயினும், மொத்தமானவராயினும் சேலை என்பது அணிபவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தை அளிக்கிறது. இந்திய இலங்கைப் பெண்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்வதால் இன்று உலகம் முழுவதும் சேலை அணியும் பெண்களைக் காண முடிகிறது.யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பெண்கள் தினமும் சேலையையே வீட்டிலும் வெளiயிலும் அணிந்து வந்தனர்.[3]
புடவை கட்டும் முறைகள்
தொகுஇது பழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும்,இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பொதுவான முறை
தொகுபொதுவாக சேலை 5 1/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி (nivi) என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய முறைகள்
தொகுஎனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பண்பாட்டு மானிடவியலாளரும், புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் (Chantal Boulanger) என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார்.
- வட இந்திய / குஜராத்தி பாணி
- மகாரஷ்டிரா / கச் பாணி
- திராவிடப் பாணி
- குடகு பாணி
- கோண்டு பாணி
- இரு துண்டுப் புடவை
- இனக்குழுப் பாணிகள் (Tribal Styles)
நவீன முறை
தொகுஇந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர்.தற்போதைய உலகமயமாக்குதல் காரணமாக புடவை அடக்கத்தை பிரதிபலிக்கும் உடையிலிருந்து பாலுணர்வை தூண்டும் கவர்ச்சி உடையாக மாறியுள்ளது.[4][5][6] இவ்வகை புடவை முறை பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா நடிகைகளால் பிரபலப்படுத்தப்பட்டது.[7][8] இவ்வகை புடவை முறைகளை வசதிபடைத்த செல்வந்தர் குடும்பம் மற்றும் உயர்நிலை வகுப்பை சேர்ந்த பெண்கள் உடுத்துகின்றனர்.[9][10][11]
லோ ஹிப் புடவை
தொகுலோ ஹிப் (low-hip) எனப்படும் தொப்புளுக்கு கீழ் உடுத்தும் முறை மிக பிரபலமாகியுள்ளது. இம்முறையில் உடுத்தும்போது தொப்புளும் இடையும் வெளிக்காட்டி இருக்கும்.[12][13][14] தொப்புளுக்கு கீழ் கட்டும்போது எப்பொழுதும் தொப்புள் வெளிகாட்டபடுவதில்லை. தொப்புளுக்கு கீழ் கட்டியபின் முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் தொப்புளை வெளிகாட்டாமல் புடவை கட்டவேண்டும் என்று சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.[15]
ஒளிபுகு புடவை
தொகுபுடவையை நவீனப்படுத்தும் நோக்கில் உருவானது தான் ஒளிபுகு புடவை (Transparent Sari). ஒளிபுகு பொருட்களான மென்பட்டு(chiffon), வலை (net) போன்றவற்றை பயன்படுத்தி நெய்யப்படும் புடவையே ஒளிபுகு புடவை எனப்படும். பெண்கள் தங்களது உடல் அழகையும் உருவத்தையும் வெளிக்காட்டும் நோக்கில் இவ்வகை புடவைகளை உடுத்துகின்றனர். ஒளிபுகு புடவைகளில் தொப்புள் மட்டுமின்றி முழு இடையும் முந்தானை வழியாக வெளிக்காட்டப்படும். புடவைகளுக்கு ஏற்றாற்போல் நகைகள் அணிந்து ஒரு கவர்ச்சி தோற்றத்தை அடையவே ஒளிபுகு புடவை பயன்படுகிறது.[8]
குறையும் செல்வாக்கு
தொகுகிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது. இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய சல்வார்-கமீஸ், சுரிதார் குர்த்தா (churidar-kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், வங்காளதேசம்) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.[3]
இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது.நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர்.சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சயுக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.[16] இளம் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சல்வார்-கமீஸ், சுரிதார்-குர்த்தா போன்றவற்றையும் ராஜஸ்தான் குஜராத் மாநிலப் பெண்களின் மரபார்ந்த ஆடையான காக்ரா-சோளியையும் (ghagra-choli) அணிந்தும் சாதாரண நேரங்களில் மேற்கத்தைய ஆடைகளையும் அணிந்து வருகின்றனர்.[3] விலை மலிவானது; ஏறத்தாழ்வு காட்டாதது; விரவாக நடக்கக் கூடியது; இளமையாகக் காட்டுவது; இடையக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டு சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது.[16]
மேற்கோள்கள்
தொகு- ↑ Oh Saree - What a Wrap !
- ↑ "சேலையே பெண்களின் சோலை". Archived from the original on 2012-01-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-12.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு ?". Archived from the original on 2011-04-08. பார்க்கப்பட்ட நாள் 2011-12-13.
- ↑ Clothing matters: dress and identity in India - Emma Tarlo.
- ↑ A Sexy Saree - Get Daring and Trendy!!!
- ↑ What makes a saree hot?
- ↑ Hot Navel Saree
- ↑ 8.0 8.1 Transparent Saree - Add Spice to Your Style!!
- ↑ Dress and gender: making and meaning in cultural contexts - Ruth Barnes.
- ↑ The cultures of economic migration: international perspectives - Suman Gupta, Tope Omoniyi.
- ↑ Navel-Show By Family Ladies Too
- ↑ Aging and menopause among Indian South African women - Brian M. Du Toit
- ↑ "Meanwhile: Unraveling the sari". International Herald Tribune. Archived from the original on 2005-04-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-15.
- ↑ Sari Below Navel - Enhance Your Beauty and Grace
- ↑ Indian Corporate Etiquette - Dr Saurabh Bhatia
- ↑ 16.0 16.1 செ. கணேசலிங்கன். (2001). நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 43-44.