சுகுவாக்கோ கொக்கு

சுகுவாக்கோ கொக்கு
அரிஜீ, பிரான்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. ராலாய்ட்சு
இருசொற் பெயரீடு
ஆர்டியோலா ராலாய்ட்சு
(இசுகோபோலி, 1769)
ஆர்டியோலா ராலாய்ட்சு பரம்பல்      இனப்பெருக்கம்     ஆண்டு முழுவதும்     குளிர்காலம்

சுகுவாக்கோ கொக்கு (Squacco heron)(ஆர்டியோலா ராலாய்ட்சு) என்பது சிறிய ஹெரான் சிற்றினமாகும். இதனுடைய நீளமானது 44–47 cm (17+1218+12 அங்) ஆகும். இதில் 20–23 cm (8–9 அங்) உடல் நீளமும் 80–92 cm (31+12–36 அங்) இறக்கை நீட்டமும் ஆகும்.[2] இவை பழைய உலக தோற்றம் கொண்டது. தெற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பெரும் நாடுகளில் இனப்பெருக்கம் செய்கிறது.

நடத்தை

தொகு

சுகுவாக்கோ ஹெரான் ஆப்பிரிக்காவிற்குக் குளிர்காலத்தில் வலசைப்போகும் சிற்றினமாகும். இந்த சிற்றினம் பெர்னான்டோ டி நோரன்கா தீவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென் அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பில் மிகவும் அரிதாகக் காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்டையான கழுத்து, குட்டையான தடிமனான அலகு மற்றும் பழுப்பு கலந்த மஞ்சள் நிற முதுகுடன் கூடியது. கோடையில், முதிர்ச்சியடைந்த பறவைகள் நீண்ட கழுத்து இறகுகள் கொண்டிருக்கும். இறக்கைகளின் நிறம் காரணமாக இதன் தோற்றம் மிகவும் வெண்மையாக இருக்கும்; ஆனால் பறவை பறக்கும் போது நன்றாகத் தெரியும்.

சுகுவாக்கோ ஹெரானின் இனப்பெருக்க வாழ்விடம் வெப்ப நாடுகளில் உள்ள சதுப்புநிலங்கள் ஆகும். பறவைகள் சிறிய குழுக்களாகக் கூடு கட்டுகின்றன. பெரும்பாலும் மற்ற பறவைகளுடன் காணப்படும். பொதுவாக மரங்கள் அல்லது புதர்களில் உள்ள குச்சிகளின் தளங்களில் கூடுகட்டுகின்றன. மூன்று முதல் நான்கு முட்டைகள் வரை இடும். இவை மீன், தவளைகள் மற்றும் பூச்சிகளை உண்கின்றன.

சொற்பிறப்பியல்

தொகு

ஆங்கிலப் பொதுப் பெயர் சுகுவாக்கோ (squacco) என்பது உள்ளூர் இத்தாலியப் பெயரான சுகுவாக்கோவை மேற்கோள் காட்டி பிரான்சிசு வில்பி (c. 1672) என்பவர் வழியாக வந்தது. தற்போதைய பெயரானது ஜான் ஹில்லிலிருந்து 1752-ல் வந்தது.[3]

விலங்கியல் பெயர் லத்தீன் ஆர்டியோலா விலிருந்து வந்தது. இதன் பொருள் சிறிய ஹெரான் (ஆர்டியா) மற்றும் ராலாய்ட்சு, லத்தீன் ராலசு, ஒரு காணான்கோழி மற்றும் கிரேக்கம் -ஓய்ட்ஸ், "ஒத்த" ஆகியவற்றிலிருந்து வந்தது.[4] அதாவது காணான்கோழி போன்றது என்பது பொருளாகும்.

இனப்பெருக்கம்

தொகு

சுகுவாக்கோ ஹெரான் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் உள்ள நன்னீர் பகுதிகளை இனப்பெருக்கம் செய்யும் இடமாகப் பயன்படுத்துகிறது. இனப்பெருக்கம் செய்யாத சுகுவாக்கோ ஹெரான்கள் இந்தியக் குளத்துக் கொக்கு மற்றும் மலகாசி குளக் கொக்கு போன்ற மற்ற ஹெரான் சிற்றினங்களுடன் இது போன்ற பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இவை பழுப்பு நிற இறகுகள், இலகுவான கோடுகள், சிறிய அலகு மற்றும் குறுகிய இறக்கை முனைகளைக் கொண்டுள்ளன.[5]

 
ஆர்டியோலா ராலாய்டு முட்டைகள்

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Ardeola ralloides". IUCN Red List of Threatened Species 2018: e.T22697123A131940696. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22697123A131940696.en. https://www.iucnredlist.org/species/22697123/131940696. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Snow, David William; Perrins, Christopher, eds. (1997). The Birds of the Western Palearctic [Abridged]. OUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-854099-X.
  3. Lockwood, W.B. (1993). The Oxford Dictionary of British Bird Names. OUP. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-866196-2.
  4. Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 54, 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  5. "HeronConservation » Squacco Heron" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ardeola ralloides
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுவாக்கோ_கொக்கு&oldid=3584242" இலிருந்து மீள்விக்கப்பட்டது