சுகைலா நோவா

மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவி

துன் சுகைலா நோவா (ஆங்கிலம்: Tun Suhailah binti Mohamed Noah; சாவி: سهيلة محمد نوح‎ ) பிறப்பு: 26 அக்டோபர் 1931 – இறப்பு: 4 அக்டோபர் 2014) என்பவர் மலேசியாவின் 3-ஆவது பிரதமர் உசேன் ஓன் (Hussein Onn) (1922–1990) அவர்களின் மனைவியும்; முன்னாள் மலேசிய தற்காப்பு அமைச்சர் இசாமுடின் உசேன் (Hishammuddin Hussein) அவர்களின் தாயாரும் ஆவார்.

சுகைலா நோவா
Suhailah Noah
3-ஆவது மலேசிய பிரதமரின் மனைவி
'
15 சனவரி 1976 – 16 சூலை 1981
ஆட்சியாளர்கள்யகாயா பெத்ரா
அகமட் சா
பிரதமர்உசேன் ஓன்
முன்னையவர் ரகா நோவா
பின்னவர்சித்தி அசுமா முகமட் அலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-10-26)26 அக்டோபர் 1931
மூவார், ஜொகூர், மலாயா கூட்டமைப்பு, பிரித்தானிய மலாயா (தற்போது மலேசியா)
இறப்பு18 திசம்பர் 2020(2020-12-18) (அகவை 87)
கோலாலம்பூர், மலேசியா
இளைப்பாறுமிடம்மாவீரர் கல்லறை, தேசியப் பள்ளிவாசல், கோலாலம்பூர்
துணைவர்அப்துல் ரசாக் உசேன் 1948
பிள்ளைகள்6 (இசாமுடின் உசேன்)
பெற்றோர்
  • முகமட் நோவா ஒமார் (தந்தை)
  • மைமுன் அப்துல் மனாப் (தாய்)

இவர் மலேசிய மக்களவையின் முதல் தலைவராகவும், மலேசிய மேலவையின் மூன்றாவது தலைவராகவும் பதவி வகித்த முகமது நோவா ஒமார் என்பவரின் (1898-1991) மகள் ஆவார்.

இவர் 15 சனவரி 1976 தொடங்கி, 16 சூலை1981 வரையிலும்; ஏறக்குறைய 5 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்ந்துள்ளார்.

வாழ்க்கை

தொகு

துன் சுகைலா நோவா 1931-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி ஜொகூர், மூவாரில் பிறந்தார். இவர் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். இவரின் இளைய சகோதரி ரகா நோவா. மலேசியாவின் 2-ஆவது பிரதமர் துன் ரசாக் அவர்களைத் திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

இவர் மலேசிய மக்களவையின் முதல் தலைவராகவும், மலேசிய மேலவையின் மூன்றாவது தலைவராகவும் பதவி வகித்த முகமது நோவா ஒமார் என்பவரின் (1898-1991) மகள் ஆவார்.

மலாக்காவில் துன் சுகைலா

தொகு

1939-இல், துன் சுகைலா, ரகா நோவா மற்றும் அவரின் பெற்றோருடன் மெர்சிங்கிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவரின் தந்தை துணை மாவட்ட அதிகாரியாகவும்; முதல் வகுப்பு நீதியாளராகவும் பணியாற்றினார்.

துன் ரகா நோவாவைப் போலவே, துன் சுகைலாவும் தன் முதல் ஆங்கிலக் கல்வியை மூவார் சுல்தான் அபு பக்கார் பெண்கள் பள்ளியிலும்; பத்து பகாட் நகரம் தெமெங்காங் இப்ராகிம் பெண்கள் பள்ளியிலும் பெற்றார். தன் தந்தையார் டான்ஸ்ரீ முகமது நோவா 1947-இல் சிகாமட்டில் மாவட்ட அதிகாரியாக இருந்தபோது, ​​துன் சுகைலா மலாக்கா கான்வென்ட் பள்ளிக்குச் சென்றார்.[1]

இறப்பு

தொகு

சுகைலா நோவா 4 அக்டோபர் 2014 அன்று மதியம் 12:30 மணியளவில் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா டாமன்சாரா உத்தாமாவில் உள்ள டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் தனது 82 வயதில் காலமானார். அவர் தம் கணவர் இறந்த பிறகு மேலும் 24 ஆண்டுகள் வாழ்ந்தார்.

அவரின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கம் கோலாலம்பூரின் தேசியப் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள மாவீரர்களின் கல்லறையில் நடைபெற்றது. அவர் தன் கணவர் உசேன் ஓன் கல்லறை; மற்றும் அவரின் தந்தை முகமது நோவா ஓமார் கல்லறை; ஆகியவற்றுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவர் இறப்பதற்கு முன், கோலாலம்பூர், சிகாம்புட், புக்கிட் துங்குவில் தம் முதுமை காலத்தைக் கழித்தார். இந்த இடம் பெரும் கோலாலம்பூர் பகுதியில் அவரின் குடும்பத்தார் வசிப்பிடமாக இருந்தது.[2]

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tun Suhailah received her first English education at the Sultan Abu Bakar Girls School (SABGS) in Muar, and at the Temenggong Ibrahim Girls School in Batu Pahat. Tun Suhailah then went to Melaka Convent, when Tan Sri Mohd Noah was the District Officer in Segamat in 1947". பார்க்கப்பட்ட நாள் 22 December 2024.
  2. "Suhailah died at 12.30 am today at the KPJ Damansara Specialist Hospital. She was 82. She was buried at the Heroes' Mausoleum at the National Mosque here. Her husband, Hussein, was also laid to rest there". NST Online (in ஆங்கிலம்). 4 October 2014. பார்க்கப்பட்ட நாள் 22 December 2024.

வெளி இணைப்புகள்

தொகு
  • Asiaweek.com, 24 March 2000.
  • Putera Negara; 1987, Firma Publishing, Aziz Zarina Ahmad.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகைலா_நோவா&oldid=4172544" இலிருந்து மீள்விக்கப்பட்டது