சித்தி அஸ்மா முகமட் அலி

(சித்தி அசுமா முகமட் அலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

துன் சித்தி அஸ்மா முகமட் அலி (ஆங்கிலம்: Tun Dr. Siti Hasmah binti Haji Mohamad Ali; சாவி: سيتي حسمه بنت محمد علي ) பிறப்பு: 12 ஜூலை 1926) என்பவர் மலேசியாவின் 4-ஆவது; 7-ஆவது பிரதமர் மகாதீர் முகமது அவர்களின் மனைவி; மற்றும் மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தின் (Multimedia University) வேந்தரும் ஆவார்.[1][2]

சித்தி அஸ்மா முகமட் அலி
Siti Hasmah Mohamad Ali
சித்தி அஸ்மா முகமட் அலி (2019)
4-ஆவது; 7-ஆவது
மலேசிய பிரதமரின் மனைவி
'
10 மே 2018 – 1 மார்ச் 2020
ஆட்சியாளர்கள்சுல்தான் ஐந்தாம் முகமது
சுல்தான் அப்துல்லா
பிரதமர்மகாதீர் முகமது
முன்னையவர்ரோஸ்மா மன்சூர்
பின்னவர்நூராயினி அப்துல் ரகுமான்
'
16 ஜூலை 1981 – 31 அக்டோபர் 2003
ஆட்சியாளர்கள்சுல்தான் அப்துல்லா
சுல்தான் இசுகந்தர்
சுல்தான் அசுலான் சா
துவாங்கு ஜபார்
சுல்தான் சலாவுதீன்
சிராஜுதீன்
பிரதமர்மகாதீர் முகமது
முன்னையவர்சுகைலா நோவா
பின்னவர்எண்டோன் மாமூட்
மலேசிய துணைப் பிரதமரின் மனைவி
'
5 மார்ச் 1976 – 16 சூலை 1981
ஆட்சியாளர்கள்யகாயா பெட்ரா
சுல்தான் அகமட் சா
முன்னையவர்சுகைலா நோவா
பின்னவர்ஐனஸ் மரியா ரெய்னா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Siti Hasmah binti Mohamad Ali

12 சூலை 1926 (1926-07-12) (அகவை 98)
கிள்ளான், சிலாங்கூர், மலாயா கூட்டமைப்பு, பிரித்தானிய மலாயா
குடியுரிமைமலேசியர்
துணைவர்
பிள்ளைகள்7 (மரினா மகாதீர்; மொக்சானி மகாதீர்; முக்ரிஸ் மகாதீர்)
உறவினர்இசுமாயில் முகமட் அலி (சகோதரர்)
முன்னாள் கல்லூரிகிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி (எம்பிபிஎஸ்)
வேலைமருத்துவர்

இவர் சூலை 1981 முதல் அக்டோபர் 2003 வரையிலும்; மே 2018 முதல் மார்ச் 2020 வரையிலும்; ஏறக்குறைய 24 ஆண்டுகள் மலேசியப் பிரதமரின் மனைவியாக உள்ளார். இவர் மலேசியப் பிரதமரின் மனைவியாக வாழ்பவர்களில் மிகவும் வயதானவராகவும் அறியப்படுகிறார். தற்போது இவரின் வயது 98.

தொடக்க கால வாழ்க்கை

தொகு

சித்தி அஸ்மா முகமட் அலி 1926-ஆம் ஆண்டு சூலை 12-ஆம் தேதி சிலாங்கூர், கிள்ளான் நகர்ப்பகுதியில் பிறந்தார். அவர் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மினாங்கபாவ் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

அவர் கோலாலம்பூர் செயின்ட் மேரி பள்ளியில் (SMK St. Mary) தம் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் தம் எம்பிபிஎஸ் பட்டத்தைப் பெற்றார்.[3]

சிங்கப்பூர் கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி

தொகு

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள கிங் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரியில் (King Edward VII College of Medicine) (தற்போது யோங் லூ லின் மருத்துவப் பள்ளி) (Yong Loo Lin School of Medicine) மருத்துவப் படிப்பிற்குச் சேர்ந்த முதல் மலாய்ப் பெண்களில் துன் சித்தி அஸ்மா முகமட் அலியும் ஒருவர் ஆவார்.

 
சித்தி அசுமா மற்றும் மகாதீரின் இளம்வயது புகைப்படம்

1955-இல் அவர் அப்போது சிங்கப்பூரில் இருந்த மலாயா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் அரசு சுகாதாரப் பணியில் சேர்ந்தார். அப்போதைய மலாயாவின் முதல் மலாய்ப் பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர் ஆகும்.

மிச்சிகன் பல்கலைக்கழகம்

தொகு

அடுத்த 1956-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவர் மகாதீர் முகமதுவை மணந்தார்.[4] இவர்களுக்கு மரினா மகாதீர், மிர்சான், மெலிண்டா, மொக்சானி மகாதீர், முக்ரிஸ் மகாதீர், மைசுரா மற்றும் மசார் என ஏழு பிள்ளைகள் உள்ளனர்.

1966-ஆம் ஆண்டில், மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியில் (School of Public Health, University of Michigan) பொது சுகாதார உயர்க்லவியைப் பெற்றார்.[5]

கெடா மாநிலத்தின் தாய் மகவு சுகாதார அதிகாரி

தொகு

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாய் மற்றும் குழந்தைகள் நலத் துறையில் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார். மேலும் 1974-ஆம் ஆண்டில், மலேசியாவின் கெடா மாநிலத்தின் தாய் மற்றும் மகவு சுகாதார அதிகாரியாக (State Maternal and Child Health Officer) நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.

இவர் குடும்ப மருத்துவம் மற்றும் மலேசியாவில் கர்ப்பம் மற்றும் குழந்தை பிறப்புடன் தொடர்புடைய சமூக பொருளாதார காரணிகள் பற்றிய பல கட்டுரைகளின் ஆசிரியரும் ஆவார்.

சித்தி அஸ்மா ஒரு பூனைப் பிரியர் மற்றும் இசை ஆர்வலர்.[5]

சமூக பங்களிப்புகள்

தொகு
 
1950-களில் மகாதீர்; சித்தி அஸ்மா
 
1960-களில் சித்தி அசுமாவின் குடும்பப்படம்

பெண்களின் உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, போதைப்பொருள் முறைகேடுகள்; மற்றும் முதியவர்களுக்கான கல்வியறிவு ஆகியவற்றிற்காக அயராது பரப்புரைகள் செய்ய பிரதமரின் மனைவி என்ற பதவியைப் பயன்படுத்தினார். பல்வேறு பதவிகளிலும் பணியாற்றி உள்ளார்.

பக்தி (BAKTI) எனும் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் மனைவிகளின் நலன்புரி சங்கத்தின் (Welfare Club of the Wives of Ministers and Deputy Ministers) தலைவராக சித்தி அசுமா முகமட் அலி சேவை செய்துள்ளார். போதைப்பொருள் துர்ப்பயன்பாட்டின் ஆபத்துகள் குறித்து இளைஞர்களுக்கு கருத்துரை வழங்கும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தார்.

வியன்னா மாநாட்டில் மலேசியப் பிரதிநிதி

தொகு
 
1950-களில் மகாதீர்; சித்தி அஸ்மா

1985-ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்மணி நான்சி ரேகனின் அழைப்பின் பேரில், வாஷிங்டன் மாநகரில் நடந்த போதைப்பொருள் முறைகேடுகள் குறித்த முதல் பெண்மணிகள் மாநாட்டில் கலந்து கொண்டார்.

1987-ஆம் ஆண்டு வியன்னாவில் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சட்டவிரோத கடத்தல் தொடர்பான பன்னாட்டு மாநாட்டிலும் மலேசியாவைப் பிரதிநிதித்தார்.

சித்தி அஸ்மா முகமட் அலி, பன்னாட்டு அளவில் கிராமப்புற பெண்களுக்கான பொதுநலன்களை ஊக்குவிப்பதிலும் தீவிரமாக இருந்தார். பல பன்னாட்டு மாநாடுகளில் மலேசியப் பெண்களைப் பிரதிநிதித்துள்ளார்.

விருதுகள் அங்கீகாரங்கள்

தொகு

அவரது வாழ்நாள் முழுவதும் பொது சேவைகளில் தீவிரம் காட்டியுள்ளார். அவரின் தன்னார்வப் பணிகள் மற்றும் பொது நலப் பண்புகள், பெண்களுக்கான கல்வியறிவு விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் முறைகேடு போன்ற செயல்பாடுகளில் அவரின் அயராத சேவைகளுக்காக, சித்தி அஸ்மா முகமட் அலி பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • 1988 - பொது சுகாதாரத்திற்கான ஆசியா பசிபிக் கூட்டமைப்பு; கசுவே மெக்லாரன் விருது (Kazue McLaren Award; Asia Pacific Consortium for Public Health)
  • 1991 - மலேசிய தேசிய பல்கலைக்கழகம்; மருத்துவ அறிவியல் துறை; கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate in Medical Science)[6]
  • 1992 - அயர்லாந்து அரச மருத்துவக் கல்லூரி; பொது சுகாதாரத் துறை; கெளரவ டாக்டர் பட்டம் (Royal College of Physicians, Ireland Honorary Doctorate in Public Health)
  • 199 4 - இந்தியானா பல்கலைக்கழகம், புளூமிங்டன்; மனிதநேய கௌரவ டாக்டர் பட்டம் (Indiana University, Bloomington; Honorary Doctorate of Humane Letters)
  • 199 4 - கனடா கொலம்பியா விக்டோரியா பல்கலைக்கழகம்; கௌரவ டாக்டர் பட்டம் (Honorary Doctorate of Law from the University of Victoria, British Columbia, Canada)
  • 2018 - பெர்டானா பல்கலைக்கழகம்; பெண்கள் சமூக மேம்பாட்டிற்கான கெளரவ டாக்டர் பட்டம் (Perdana University; Honorary Doctor of Philosophy Degree for Women and Community Development)[7]
  • 20 சூன் 1997 - மலேசிய பல்லூடக பல்கலைக்கழகம்; வேந்தர் பதவி; புரவலர் பதவி (Chancellor of the Multimedia University)
  • 18 டிசம்பர் 2020 - நோனா பெண்கள் பத்திரிகை; 2020 நோனா சிறந்த மகளிர் விருது (Nona Superwoman Award 2020)[5][8]

விருதுகள்

தொகு

மலேசிய விருதுகள்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Don't forget Dr Siti Hasmah". New Straits Times. 2003-10-30.
  2. "Thanks also to Dr Siti Hasmah". New Straits Times. 2003-10-31.
  3. Biografi Wanita Malaysia (in மலாய்). Kuala Lumpur: Pertubuhan Tindakan Wanita Islam (Malaysia). p. 138. இணையக் கணினி நூலக மைய எண் 559286367.
  4. Information Malaysia. Berita Publ. Sdn. Bhd. 1975. p. 44.
  5. 5.0 5.1 Norzalina (21 December 2020). "Pencinta Kucing Muzik Tun Dr Siti Hasmah Dedah Rahsia Penyayang!" (in ms). https://www.nona.my/pencinta-kucing-muzik-tun-dr-siti-hasmah-dedah-rahsia-penyayang. 
  6. "Education is a lifetime job, says Dr Mahathir". New Straits Times. 7 October 2018. Archived from the original on 22 August 2019. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  7. "Education is a lifetime job, says Dr Mahathir". New Straits Times. 7 October 2018. Archived from the original on 22 August 2019. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  8. Rosmah Idayu (21 December 2020). "NONA SUPERWOMAN 2020 Raikan Kejayaan Wanita Pencetus Inspirasi" (in ms). https://www.nona.my/malam-gala-nona-superwoman-2020-raikan-kejayaan-wanita-pencetus-inspirasi/. 
  9. 9.0 9.1 "SEMAKAN PENERIMA DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT". Prime Minister's Department (Malaysia). Archived from the original on 29 September 2018. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.
  10. "Dr. Hasmah terima kurnia Sultan Kedah" (PDF). Utusan Malaysia (in மலாய்). Perdana Leadership Foundation. 18 July 1983. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.
  11. "114ra'ayat di-beri gelaran dan pingat". 20 January 1971. p. 3. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19710120-1.2.25. 
  12. "Siti Hasmah heads Penang list". The Star (Malaysia). 12 July 2003. Archived from the original on 19 January 2021. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.
  13. "SPMS 1994". awards.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
  14. 14.0 14.1 "Istana Selangor sahkan Tun M pulangkan darjah kebesaran". Berita Harian. 12 December 2017. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.
  15. 15.0 15.1 "Selangor Royal Council confirms Mahathir has returned royal awards". The Sun (Malaysia). 12 December 2017. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் 15 April 2021.
  16. "DPMS 1983". awards.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.

வெளியீடுகள்

தொகு
  • My Name is Hasmah. Karangkraf Group, 2016.[1]

வெளி இணைப்புகள்

தொகு
  1. "Siti Hasmah celebrates 90 years with biography". 8 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_அஸ்மா_முகமட்_அலி&oldid=4172545" இலிருந்து மீள்விக்கப்பட்டது