சுங்கச்சீட்டு
சுங்கச்சீட்டு (அ) வேகச்சீட்டு [1](ஆங்:Fastag) என்பது வாகனங்களுக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும், இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) இயக்கப்படுகிறது.[2] இது இந்திய தேசிய சாலைகளிலுள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணங்களை, வாகனஒட்டுனரிடமிருந்து முன்கட்டண அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து நேரடியாக கட்டணங்களை செலுத்துவதற்கு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இந்த சீட்டு வாகனத்தின் முன்புறமுள்ள வளித்திரையின் மீது ஒட்டப்படுகின்றது, வாகனங்களை பரிவர்த்தனைகளுக்காக சுங்கச்சாவடிகளில் நிறுத்தாமல் ஓட்ட உதவுகிறது. இந்த வேகச்சீட்டுகளை அதிகாரப்பூர்வ வழங்குநர்களிடமிருந்தோ அல்லது வங்கிகளிடமிருந்தோ மற்றும் ஆயில் நிறுவனங்களின் விற்பனைமையங்களிலிருந்தும் வாங்கலாம்.[3] மேலும் இது ஒரு முன்பண கணக்கில் இணைக்கப்பட்டிருந்தால், மீண்டும் பணம் நிரப்புவது தேவைக்கேற்ப இருக்கலாம்.[4] NHAI இன் படி, வேகச்சீட்டு காலவரையின்றி செல்லுபடியாகும். FASTag இன் பயன்பாட்டை ஊக்குவிக்க 7.5% கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட்டன. சில சுங்கச்சாவடிகளில் அர்ப்பணிக்கப்பட்ட பாதைகள் FASTag க்காக கட்டப்பட்டுள்ளன.
Easy to Cruise | |
வகை | மின்னனு சுங்கவசூல் |
---|---|
சேவை வழங்கும் பகுதி | இந்தியா முழுவதும் |
உற்பத்திகள் | RFID Tags |
உரிமையாளர்கள் | இந்தியத் தேசிய கொடுக்கல்கள் நிறுவனம் |
தாய் நிறுவனம் | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா) |
ஜனவரி 2019 இல், அரசு நடத்தும் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் ஆகியவை தனது விற்பனை மையங்களிலிருந்து இந்த வேகச்சீட்டினை கொள்முதல் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.[5]
செப்டம்பர் 2019 நிலவரப்படி, 500 க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் வேகச்சீட்டு பாதைகள் உள்ளன, மேலும் 54.6 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் வேகச்சீட்டுகள் மூலம் இயக்கப்பட்டன.[6]
காலவரிசை
தொகு- இந்த கட்டமைப்பு ஒரு முன்னோடி திட்டமாக 2014இல் அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையிலான தங்க நாற்கர சாலையின் மீது அமைக்கப்பட்டது.
- 4 நவம்பர் 2014 அன்று தில்லி - மும்பை நாற்கரசாலையில் செயல்படுத்தப்பட்டது.[7]
- ஜூலை 2015 இல், சென்னை - பெங்களூரு இடையேயுள்ள தங்க நாற்கர சாலையின் சுங்கசாவடிகள் ஃபாஸ்டாக் கட்டணங்களை ஏற்கத் தொடங்கின.[8]
- ஏப்ரல் 2016களில், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 247 சுங்கச்சாவடிகளில் வேகச்சீட்டு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது, அந்த நேரத்தில் நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளில் 70% உள்ளடக்கப்பட்டது.[9]
- 23 நவம்பர் 2016 க்குள், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 366 இல் 347 சுங்கச்சாவடி கட்டணங்கள் ஃபாஸ்டாக் கட்டணங்களை ஏற்றுக்கொள்கின்றன.[10]
- 1 அக்டோபர் 2017 அன்று, NHAI அதன் எல்லைக்குட்பட்ட அனைத்து 370 டோல் பிளாசாக்களிலும் ஒரு ஃபாஸ்டாக் பாதையை அறிமுகப்படுத்தியது.[11]
- 8 நவம்பர் 2017 அன்று, டிசம்பர் 2017 க்குப் பிறகு இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் வேகச்சீட்டு ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டது.[12]
- அக்டோபர் 19, 2019 அன்று, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் FASTag பாதை கட்டாயமாக இருக்கும் என்றும், FASTag அல்லாத பயனர்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.[13]
- 2019 நவம்பர் மாதத்தில், ஹைதராபாத் விமானநிலையம் வேகச்சீட்டு மூலம் வாகன நிறுத்து கட்டணங்களை பெற்றுக்கொள்ளூம் வசதிகளை அமல்படுத்தியது.[14][15]
- 15 திசம்பர் 2019 அன்று, இந்தியா முழுவதும் வேகச்சீட்டு(சுங்கச்சீட்டு) கட்டாயமாக்கப்பட்டது.[16]
புள்ளிவிவரம்
தொகு- சுங்கச்சீட்டு அறிமுகத்திற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்க்கு சராசரியாக 112 வாகனங்களே சுங்கச்சாவடியைக் கடக்கும். சுங்கச்சீட்டு அறிமுகத்திற்கு பின்பு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 260 வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கின்றது, ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்ல 47விநாடிகளை சராசரியாக எடுத்துக்கொள்கிறது.[17]
சுங்கச்சாவடி கட்டண வசூல் நிலவரம் [2017-2022] [18][19] | |||
---|---|---|---|
காலம் | சுங்கசாவடி கட்டண வசூல் மொத்தம் (கோடி) | சுங்கச்சீட்டு முறை வசூல் (கோடி) | |
2016-17 | 17942.14 | 871 | |
2017-18 | 21948.13 | 3532 | |
2018-19 | 24396.20 | 5956 | |
2019-20 | 26850.71 | 10957 | |
2020-21 | 27744.15 | 25291 | |
2021-22 | 34535 | 33274 |
வெளி இணைப்புகள்
தொகு- Webpage for FASTag on NHAI website பரணிடப்பட்டது 2019-10-14 at the வந்தவழி இயந்திரம்
குறிப்புகள்
தொகு- ↑ "Another Official FAQ" பரணிடப்பட்டது 2019-08-01 at the வந்தவழி இயந்திரம் (PDF). NHAI. Retrieved 10 November 2017.
- ↑ "FASTag Roll-out and Facilitation". Press Information Bureau. New Delhi. 13 June 2016. Retrieved 13 June 2016.
- ↑ "FASTag Page in NHAI website" பரணிடப்பட்டது 2019-10-14 at the வந்தவழி இயந்திரம். Retrieved 10 November 2017.
- ↑ "Official FAQ" பரணிடப்பட்டது 2018-02-19 at the வந்தவழி இயந்திரம் (PDF). NHAI. Retrieved 10 November 2017.
- ↑ Writer, Staff (9 January 2019). "Coming soon: Pay at petrol pumps in seconds using FASTags". livemint.com. Retrieved 9 January 2019.
- ↑ "These innovations are helping digital payments go mass". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 21 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Gupta, Siddhartha (31 October 2014). "Soon, drive non-stop and pay tolls speeding through 'FASTag' lane". இந்தியன் எக்சுபிரசு. New Delhi. Retrieved 2 November 2014.
- ↑ "Driving From Chennai to Bangalore? Get Smart Tag to Zip Through the Toll Gate". Express News Service. Chennai. தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 27 July 2015. Retrieved 27 July 2015.
- ↑ "FASTag Is Now Active In Over 70% Toll Plazas On National Highways". The Logical Indian. 21 April 2016.
- ↑ "Electronic Toll Management System". Press Information Bureau. Retrieved 18 December 2016.
- ↑ Sood, Jyotika (3 November 2017). "Four-wheelers sold from December must be fitted with FASTag: Centre". Retrieved 9 November 2017.
- ↑ "Come December, All New Vehicles Will Have FASTag for Cashless Toll Plazas: Nitin Gadkari". News18. Retrieved 9 November 2017.
- ↑ https://www.moneycontrol.com/news/india/insight-18-fastags-mandatory-for-vehicles-on-national-highways-from-dec-1-heres-how-it-will-ease-traffic-4549301.html/amp
- ↑ Somasekhar, M. "GMR Hyderabad International Airport introduces FASTag Car Park facility". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
- ↑ "Hyderabad airport launches FASTag parking". LiveMint (in ஆங்கிலம்). 2019-11-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-26.
- ↑ "FASTag will become mandatory from December 15, 2019". EconomicTimes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.
- ↑ https://www.business-standard.com/article/current-affairs/fastags-to-be-replaced-by-automatic-number-plate-readers-nitin-gadkari-122082400212_1.html
- ↑ "Tollgate vs Fasttag collection". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 7 Aug 2022.
- ↑ "Toll gate collection Yearwise". businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 15 Dec 2021.