சுதிர்தா முகர்ஜி
சுதிர்தா முகர்ஜி (பிறப்பு: அக்டோபர் 10, 1995) மேற்கு வங்காளத்தின் நைஹாட்டியைச் சேர்ந்த இந்திய மேசைப்பந்தாட்ட வீராங்கனை ஆவார்.[1][2] இவர் தேசிய மேசைப்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.[3][4][5][6] சுதிர்தா 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாடினார்.[7] 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேசைப்பந்தாட்ட பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கத்தை வென்றார்.[8][9]
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1995 மேற்கு வங்காளம், இந்தியா | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | தடகளம் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
வாழ்க்கை
தொகுசுதிர்தா 2010 இல் இளையோர் மேசைப்பந்தாட்ட நிகழ்வுகளில் பட்டங்களை வெல்லத் தொடங்கினார்.[10] இவர் 10 அக்டோபர் 1997 இல் பிறந்ததாகப் பதிவு செய்து 1996 மற்றும் 1999 க்கு இடையில் பிறந்த விளையாட்டு வீரர்களுக்குத் தகுதியான 2014 கோடைகால இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார்.[11][12][13] 2014 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுப் பிரிவு பல மேசைப்பந்தாட்ட வீரர்களுக்கு எதிராக போலி வயது பதிவுகளை தயாரித்து வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகளில் பங்கேற்றதாகக் கூறி விசாரணையைத் தொடங்கியது.[14] 2016 ஆம் ஆண்டு இந்த விவகாரம் விசாரிக்கப்பட்ட பிறகு, இந்திய மேசைப்பந்தாட்ட கூட்டமைப்பு சுதிர்தா முகர்ஜி ஏமாற்றியதாகக் கூறி ஒரு வருடம் தடை விதித்தது.
2018 ஆம் ஆண்டில், சுதிர்தா முகர்ஜி இந்தியாவில் நடைபெற்ற மூத்த தேசிய மேசைப்பந்தாட்ட சாம்பியன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார் மற்றும் 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் ஒரு அங்கமாகவும் இருந்தார்[15][16]
2021 இல், முகர்ஜி 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் விளையாடினார்.[17] இந்திய தேசிய பயிற்சியாளர் சௌம்யதீப் ராய், முகர்ஜி தகுதி பெற அனுமதிக்கும் வகையில், ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் (மார்ச் மாதம்) ஒரு போட்டியை முகர்ஜிக்கு ஆதரவாக அழுத்தம் கொடுத்ததாக சக நாட்டுப் வீராங்கனை மணிகா பத்ரா குற்றம் சாட்டினார்.[18] இரண்டு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழு, ராய் உண்மையில் போட்டியைக் கையாள முயற்சித்ததாகக் கண்டறிந்தது, ஆனால் முகர்ஜி மீது தவறில்லை எனக் கூறியது.[19]
சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி 2022 இல் மஸ்கட்டில் நடந்த சாம்பியன் போட்டியில் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.[20] இந்த ஜோடி டுனிசில் 2023 இல் தங்கள் முதல் பட்டத்தை வென்றது.[21]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sutirtha Mukherjee". olympedia.org. பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
- ↑ "Sutirtha Mukherjee". ultimatetabletennis.in. பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
- ↑ "Commonwealth Games: India beat Sri Lanka in women's Table Tennis". New Indian Games. 5 April 2018. Archived from the original on 5 April 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "SUTIRTHA MUKHERJEE". Archived from the original on 5 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sutirtha Mukherjee". Gold Cost 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ "এশিয়ান গেমসে সুতীর্থার লক্ষ্য সোনা" (in Bengali). Anandabazar Patrika. 10 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ "Asian Games 2023: Sutirtha-Ayhika create history, reach women's double table tennis semis". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-09-30. பார்க்கப்பட்ட நாள் 2023-10-01.
- ↑ Desk, TOI Sports (2 Oct 2023). "Asian Games: Sutirtha Mukherjee and Ayhika Mukherjee clinch bronze in table tennis women's doubles — Asian Games 2023 News". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2 Oct 2023.
- ↑ Swaminathan, Swaroop (2 Oct 2023). "Unshakeable bond behind table tennis duo Ayhika-Sutirtha's bronze". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2 Oct 2023.
- ↑ "A Full House of Titles for Sutirtha Mukherjee as Indian Girls Set the Standard". ittf.com. 13 August 2012. Archived from the original on 19 August 2012.
- ↑ "List of Participants at the Guatelama Junior & Cadet Open" (PDF). ittf.com. 8 August 2012. Archived from the original (PDF) on 19 August 2012.
- ↑ "Entries at the 2013 ITTF World Junior Table Tennis Championships" (PDF). ittf.com. 28 November 2013. Archived from the original (PDF) on 25 May 2016.
- ↑ "2014 Second Youth Olympic Games". ittf.com. Archived from the original on 22 August 2014.
- ↑ "3 Table Tennis players banned for fudging age record". The Asian Age. 30 June 2016. பார்க்கப்பட்ட நாள் 25 June 2023.
- ↑ "Sutirtha: I was very confident". 1 February 2018. Archived from the original on 5 April 2018. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
- ↑ "CWG 2018: Complete list of India's gold medalist from 21st Commonwealth Games in Gold Coast". டைம்ஸ் நவ். 15 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ "Table tennis: Sutirtha Mukherjee and G Sathiyan qualify for Tokyo Olympics". ESPN.com (in ஆங்கிலம்). 2021-03-18. பார்க்கப்பட்ட நாள் 2021-04-10.
- ↑ Edgesandnets (2021-09-04). "Manika Batra Accuses Indian National Coach of Match-Fixing". Edges And Nets (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2022-07-27. பார்க்கப்பட்ட நாள் 2022-07-27.
- ↑ Ohri, Raghav. "Match-fixing allegations: Inquiry report blames national coach Soumyadeep Roy, Table Tennis Federation of India". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/sports/match-fixing-allegations-inquiry-report-blames-national-coach-soumyadeep-roy-table-tennis-federation-of-india/articleshow/89790361.cms.
- ↑ "WTT Contender Muscat 2022". worldtabletennis.com. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.
- ↑ "Table tennis: Sutirtha Mukherjee and Ayhika Mukherjee win first tour title at WTT Contender in Tunis". scroll.in. 25 June 2023. பார்க்கப்பட்ட நாள் 26 June 2023.