சுந்தரி கே. ஸ்ரீதரணி

சுந்தரி கே. ஸ்ரீதரணி (Sundari K. Shridharani) (6 ஏப்ரல் 1925 - 7 ஏப்ரல் 2012) 1950 இல் திரிவேணி கலா சங்கம் என்ற பல- கலை நிறுவனத்தை நிறுவி, அதன் இயக்குநராக இருந்தார்.

சுந்தரி கே. ஸ்ரீதரணி
பிறப்பு(1925-04-06)6 ஏப்ரல் 1925
ஐதராபாத்
இறப்பு7 ஏப்ரல் 2012(2012-04-07) (அகவை 87)
புது தில்லி
தேசியம் இந்தியா
அறியப்படுவதுதிரிவேணி கலா சங்கம்
வாழ்க்கைத்
துணை
கிருஷ்ணலால் ஸ்ரீதரணி (1911 – 1960)

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்

தொகு

பிரிக்கப்படாத இந்தியாவில் பாக்கித்தானின் ஐதராபாத்தில் பிறந்த இவர், சாந்திநிகேதனில் நடனம் கற்றுக் கொண்டார். அதன்பிறகு சேர்ந்தார் அல்மோரா என்ற இடத்தில் அமைந்திருந்த உதய் சங்கரின் இந்திய கலாச்சார மையத்தில் நடனப் பயிற்சியைப் பெற்றார். கதகளியை குரு சங்கரன் நம்பூதிரியிடமும், மணிப்புரி நடனத்தை குரு அமுபி சிங்கிடமும் பயின்றார். பின்னர், இவர் இலண்டனின் ஜின்னர் மேவர் நடனம் மற்றும் நாடகப்பள்ளியில் சேர்ந்து கிரேக்க நடனம் கற்றுக்கொண்டார். [1] [2] கவிஞரும், நாடக ஆசிரியரும், பத்திரிகையாளருமான கிருஷ்ணலால் ஸ்ரீதரணியை (1911 - 1960) திருமணம் செய்து கொண்டார்.

தொழில்

தொகு
 
திரிவேணி கலா சங்கத்தின் பிரதான நுழைவாயில் மற்றும் இடதுபுறத்தில் ஸ்ரீதரணி கலைக்கூடத்தின் முகப்பு.

1947 ஆம் ஆண்டில், இவர் பிராக் நகரில் நடந்த முதல் சர்வதேச இளைஞர் விழாவில் நிகழ்த்தினார். 1950களில், ஐக்கிய அமெரிக்க கலாச்சார பரிவர்த்தனை திட்டங்களில் ஒன்றான புல்பிரைட் கூட்டாளர் கௌரவத்தையும் பெற்றார். லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கௌரவத்தையும் பெற்றார். இதன் மூலம் அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்களில் பயணம் செய்தார். இந்திய நடனங்களைப் பற்றிய விளக்கங்களை வழங்கினார். [3]

கலா சங்கம்

தொகு

திருமணத்திற்குப் பிறகு இவர் தில்லிக்கு வந்தார். 195 இல் திரிவேணி கலா சங்கத்தைத் தொடங்கினார். இது தில்லியின் கன்னாட் பிளேசில் தொடங்கப்பட்டது. 'திரிவேணி கலா சங்கம்' என்ற பெயர் புல்லாங்குழல் கலைஞரான விஜய் ராகவ் ராவ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் பொருள் "கலைகளின் சங்கமம்" என்பதாகும். புது தில்லியின் கன்னாட்டு பிளேசிலுள்ள ஒரு காபி உணவகத்துக்கு மேலே ஒரு அறையில் பிரபல கலைஞர் கே. எஸ். குல்கர்னியின் கீழ் இரண்டு மாணவர்களுடன் இது தொடங்கப்பட்டது. விரைவில் இவரது முயற்சிகள் கவனிக்கப்பட்டன. ஜவகர்லால் நேரு நிறுவனத்திற்கான நிலத்தை ஒதுக்கினார். படிப்படியாக, இவர் ஒரு சிறிய குழுவினரை ஏற்பாடு செய்து, இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். மேலும், நிதியினைச் சேகரித்து கட்டிடம் எழுப்பப்பட்டது. குரு ராஜ்குமார் சிங்காஜித் சிங் 1954ஆம் ஆண்டில் மணிப்பூர் நடனப் பிரிவின் தலைவராக திரிவேணியில் சேர்ந்தார். பின்னர் 1962ஆம் ஆண்டில், 'திரிவேணி பாலே'வை நிறுவினார். அதில் அவர் இயக்குநராகவும், முதன்மை நடனக் கலைஞராகவும் இருந்தார். [4][5]

இறப்பு

தொகு

இவர் திரிவேனியின் வளாகத்திற்குள்ளேயே வசித்து வந்தார். 2012 ஏப்ரல் 7 அன்று புதுதில்லியில் தனது 93 வயதில் இறந்தார். இவருக்கு கவிதா ஸ்ரீதரணி என்ற ஒரு மகளும், அமர் ஸ்ரீதரணி என்ற ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் இப்போது திரிவேணியின் பொதுச் செயலாளராக உள்ளார். [6]

விருதுகள்

தொகு

1992 ஆம் ஆண்டில் இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது [7] 2011ஆம் ஆண்டில் இவருக்கு இசை சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது, இது கலை நிகழ்ச்சிகளில் ஒட்டுமொத்த பங்களிப்பு செய்ததற்காக, மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. [8]

குறிப்புகள்

தொகு
  1. "Smt Sundari Krishnalal Shridharani". Sangeet Natak Akademi. Archived from the original on 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
  2. "Prima donna". The Tribune. 3 September 2000. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
  3. "Smt Sundari Krishnalal Shridharani". Sangeet Natak Akademi. Archived from the original on 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10."Smt Sundari Krishnalal Shridharani". Sangeet Natak Akademi. Archived from the original on 10 January 2014. Retrieved 10 January 2014.
  4. DR. R.K. Singhajit Singh Profile பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம் Homi Bhabha Fellowship Council, Mumbai, Fellowship:1976-1978.
  5. "Art of aesthetics". தி இந்து. 28 August 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article598821.ece. 
  6. Anjana Rajan (20 April 2012). "Keeper of the shrine". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-01-10.
  7. "Padma Awards Directory (1954-2009)" (PDF). Ministry of Home Affairs. Archived from the original (PDF) on 10 May 2013.
  8. "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 30 May 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுந்தரி_கே._ஸ்ரீதரணி&oldid=3245337" இலிருந்து மீள்விக்கப்பட்டது