சுனிதா (தெலுங்கு பாடகி)

சுனிதா உபத்ராஷ்டா ( Sunitha ) ஓர் இந்திய பின்னணி பாடகியும் மற்றும் குரல் நடிகையுமாவார்., இவர் முதன்மையாக தெலுங்குப் படங்களில் பணியாற்றுகிறார். சுனிதா பல்வேறு பிரிவுகளில் ஒன்பது நந்தி விருதுகள் மற்றும் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர். இவர் தனது 15 வயதில் ஒளி இசை பிரிவில் அனைத்திந்திய வானொலியின் தேசியத் திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். தனது முதல் நந்தி விருதை 1999 ஆம் ஆண்டு பெற்றார். 2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2010 முதல் 2012 வரையிலும் மூன்று நந்தி விருதுகளைப் பெற்றார். ஆந்திரப் பிரதேச அரசால் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடகிக்கான விருது லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து இவருக்கும் வழங்கப்பட்டது. [2] [3]

சுனிதா
2015இல் சுனிதா
பிறப்புசுனிதா உபத்ராஷ்டா
10 மே 1978 (1978-05-10) (அகவை 45)
விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி
  • பாடகி
  • தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
  • பின்னணிக் குரல் அளிப்பவர்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
  • கிரண் குமார் கோபராஜு
    (தி. 1997; ம.மு. 2017)
    [1]
  • இராம கிருஷ்ண வீரப்பனேனி (தி. 2021)
பிள்ளைகள்2

பாடல் வாழ்க்கை தொகு

சுனிதாவின் பாடல் வாழ்க்கை 1995 ஆம் ஆண்டு குலாபி திரைப்படத்தின் மூலம் தொடங்கியது. இவர் இசை அடிப்படையிலான நிகழ்ச்சிகள் மற்றும் முதன்மை நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் அறியப்படுகிறார். 2015 ஆம் ஆண்டில் அமராவதி தலைநகர அடிக்கல் நாட்டு விழாவை தொகுத்து வழங்கினார். [4] சுனிதா பல்வேறு தொலைக்காட்சி நிலையங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் உள்ளார். அவற்றில் பாடுத்த தீயகா என்ற இசை நிகழ்ச்சி கடந்த இரண்டு தசாப்தங்களாக தெலுங்கு ஈடிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களும் பங்கு கொண்டிருந்தார். [5] [6] [7] 750 க்கும் மேற்பட்ட படங்களில் 110 க்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு குரல் கொடுக்கும் கலைஞராக சுனிதாவின் பங்களிப்புகள் பரவலாக குறிப்பிடப்படுகின்றன.[8]

சுனிதா ஒரு கலைஞராக பல்வேறு வெளிநாடுகளிலும் தனது இசைநிகழ்சிகளை வழங்கி வருகிறார்.

சொந்த வாழ்க்கை தொகு

சுனிதா 1978 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசயயவாடாவில் பிறந்தார். [9] 6 வயதில், பெம்மராஜு சூர்யா ராவ் என்பவரிடம் கருநாடக இசையையும் மற்றும் கலகா கிருஷ்ண மோகனிடம் மெல்லிசையையும் பயிற்சி பெற்றார். மிகச் சிறிய வயதிலேயே, அனைத்திந்திய வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் உட்பட பல கச்சேரிகளில் பங்கேற்கவும், நிகழ்த்தவும் பல வாய்ப்புகளைப் பெற்றார். 13 வயதில், சுனிதா தனது குரு பெம்மராஜு சூர்யா ராவுடன் இணைந்து ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். குழந்தை நட்சத்திரமாக நடித்து பல்வேறு போட்டிகளில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இசைப் பயிற்சிகளைத் தொடர மத்திய அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்றுள்ளார்.

சுனிதா தனது 19வது வயதில் ஊடகங்களில் பணிபுரியும் கிரண் குமார் கோபராஜு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், பின்னர் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த தம்பதிக்கு ஆகாஷ், சிரேயா என இரு குழந்தைகள் உள்ளனர். [10] சிரேயா என்ற தெலுங்கு திரைப்படமான சவ்யசாச்சி (2018) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் "டிக்... டிக்... டிக்..." என்ற பாடலை பாடி ஒரு பாடகியாக அறிமுகமானார்.

ஜனவரி 2021 இல், சுனிதா தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் தொழிலதிபர் ராம கிருஷ்ண வீரபனேனி என்பவரை மணந்தார். [11] [12]

மேற்கோள்கள் தொகு

  1. "Singer Sunitha going through a rough patch". 25 July 2016.
  2. "Honours of the Indian Nightingale". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
  3. "Lata awards for Shankar, Chitra". The Times of India (in ஆங்கிலம்). Oct 7, 2011. பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
  4. Reddy, Phanindra (2015-10-22). "Amaravati foundation stone-laying event: Two hosts say they're 'blessed'". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
  5. "SP Balasubrahmanyam's Padutha Theeyaga: SPB Charan, Sunitha & lyricist Chandrabose to host the show". Indian Memes (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-06-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  6. "Iconic show 'Padutha Theeyaga' gets new judges". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-11-16. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  7. "SP Charan to step into dad SP Balasubrahmanyam's shoes, to host popular music show Paadutha Theeyaga". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-06-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  8. "Singer Sunitha Engaged: Facts You Need To Know About The Telugu Star And Her Second Husband Ram Veerapaneni". news.abplive.com (in ஆங்கிலம்). 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  9. "Singer Sunitha Engaged: Facts You Need To Know About The Telugu Star And Her Second Husband Ram Veerapaneni". ABP Live (in ஆங்கிலம்). 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  10. "Singer Sunitha Engaged: Facts You Need To Know About The Telugu Star And Her Second Husband Ram Veerapaneni". ABP Live (in ஆங்கிலம்). 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19."Singer Sunitha Engaged: Facts You Need To Know About The Telugu Star And Her Second Husband Ram Veerapaneni".
  11. "Sunitha Upadrasta ties the knot with Rama Krishna Veerapaneni, see pictures". The Indian Express (in ஆங்கிலம்). 2021-01-11. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
  12. "Sunitha talking about her Husband Ram". Telugu Bulletin. 23 August 2021. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதா_(தெலுங்கு_பாடகி)&oldid=3922770" இலிருந்து மீள்விக்கப்பட்டது