சுபா முத்கல்

சுபா முத்கல் (Shubha Mudgal) 1959இல் பிறந்த இந்துஸ்தானி இசையைப் பாடும் ஒரு பாடகர் ஆவார். கயல், தும்ரி மற்றும் தத்ரா மற்றும் பிரபலமான இவரது பிரபலமான இந்திய பாப் இசையும் இதில் அடங்கும். 2000இல் பெற்ற பத்மஸ்ரீ விருது உட்பட இவரது கலைசார்ந்த சாதனைகளுக்காக பல விருதுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளார், இசையமைப்பாளராக இருந்த முத்கல், இடதுசாரி இயக்கங்கள் மற்றும், சப்னம் ஆசுமியின் "அன்காத்" மற்றும் "சாமத்" என்ற நிறுவனத்திற்கும் ஆதரவளித்தார்.[2][3]

சுபா முத்கல்
போபால் பாரத் பவனில் ஒரு நிகழ்ச்சியில் சுபா முத்கல்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சுபா குப்தா
பிறப்பு1959 (அகவை 64–65)
அலகாபாத், உத்தரபிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்பரப்பிசை, நாட்டுப்புற பாடல்கள், இந்திய பாரம்பரிய இசை, பின்னணிப் பாடகர்
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1986 முதல் [1] – தற்போது வரை
இணையதளம்www.shubhamudgal.com

சொந்த வாழ்க்கை

தொகு

சுபா அலகாபாத்திலுள்ள ஒரு கல்வியாளர் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவர் பேராசிரியர் கந்த குப்தாவுக்கும், பேராசிரியர் ஜெயா குப்தா ஆகியோரின் மகள் ஆவார்.[5][6] இவரது பெற்றோர்கள் இருவரும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியப் பேராசிரியர்களாக இருந்தனர். மேலும் இருவரும் கதக் போன்ற பாரம்பரிய நடனம், பாரம்பரிய இந்துஸ்தானி இசை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தனர்.

[7] சுபாவின் தந்தை வழித் தாத்தா, பேராசிரியர் பி. சி. குப்தா அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

கல்வி மற்றும் இசைப் பயிற்சி

தொகு

சுபா அலகாபாத்தில் வளர்ந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, புனித மரியன்னை கல்லூரியில் பயின்றார். கலை சிந்தனைகளை கொண்ட இவரது பெற்றோர்கள் இவரையும், இவரது சகோதரியையும் கலை வகுப்புகளில் சேர்ந்து, கதக் நடனம் கற்றுக்கொள்ள அனுப்பினார்கள்.[5] பின்னர் இவர் அதே விருப்பமான மனோபாவத்தை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக தனது விருப்பப்படி இந்துஸ்தானி இசையைத் தேர்வு செய்தார். இவரது முதல் பாரம்பரிய ஆசிரியர் (குரு) அலகாபாத்திலிருந்த பண்டிட் இராமாசிரேயா ஜா ஆவார்.

 
2015இல் போபால் பாரத் பவனில் சுபா முத்கல்

தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, சுபா தில்லியில் பண்டிட் வசந்த் தக்காரிடம் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். மேலும் மற்ற பாடகர்களான பண்டிட் ஜிதேந்திர அபிசேகி, நைனா தேவி மற்றும் பண்டிட் குமார் கந்தர்வன் ஆகியோருடனும் பயிற்சி மேற்கொண்டார்.

தொழில்

தொகு
 
2007இல் சுபா முத்கல் ஒரு நிகழ்ச்சியில்

1980 களில் சுபா முத்கல் ஒரு இந்துஸ்தானி இசை பாடகராக ஆனார். மேலும் திறமையான பாடகியாக ஒரு புகழ் பெற்றார்.[8]'

விருதுகள்

தொகு

இவருக்கு "அம்ரிட் பீஜ்" என்ற திரைப்படத்திற்காக 1996 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.[9] 2000மாவது ஆண்டில் பத்மஸ்ரீ விருதினை பெற்றார்.[10]

குறிப்புகள்

தொகு
  1. Interview பரணிடப்பட்டது 2008-04-23 at the வந்தவழி இயந்திரம் The Hindu, 26 November 2005.
  2. "The Origin , Structure, Constitution of Governing Board of Anhad". ANHAD. 25 September 2007. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 8 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. "Song of Transcendence". www.outlookindia.com. 1 September 1997. பார்க்கப்பட்ட நாள் 2 March 2012.
  4. "On a Personal Note: Shubha Mudgal". Governance Now. 16–31 December 2016.
  5. 5.0 5.1 An Interview with Shubha Mudgal பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2008 at the வந்தவழி இயந்திரம் monsoonmag.com, 2000.
  6. http://www.moneylife.in/article/interview-with-shubha-mudgal-singer/4990.html
  7. This above all The Tribune, 15 August 1948.
  8. SHUBHA MUDGAL’S TALES FROM LIFE பரணிடப்பட்டது 12 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம் south-asian.com, 2003.
  9. Milestones[தொடர்பிழந்த இணைப்பு] Shubha Mudgal Official website.
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபா_முத்கல்&oldid=3586994" இலிருந்து மீள்விக்கப்பட்டது