சுவாமி ஞானாநந்தா சரஸ்வதி

சுவாமி ஞானாநந்தா சரஸ்வ்வதி (Ghanananda Saraswati) (இயற்பெயர்:Kewsi Essel); (பிறப்பு:12 செப்டம்பர் 1937 – மறைவு:18 சனவரி 2016), மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டைச் சேர்ந்த கருப்பினத்தவர் ஆவார். இவர் கானாவில் இந்து சமயத்தை நிறுவிய வேதாந்தி ஆவார்.[1]1962ல் இந்தியாவிற்கு வந்த இவர் சுவாமி கிருஷ்ணானந்தா சரஸ்வதியின்[2] சீடராக வேதாந்தக் கல்வி பயின்றார். இவர் 1975ல் கானா நாட்டின் தலைநகரான அக்ராவில் இந்து மடாலயத்தை நிறுவினார்.[3]இம்மடாலயம் மூலம் ஆப்பிரிக்க பழங்குடி மக்களை சைவ சமயத்தை தழுவச் செய்தார்.

சுவாமி ஞானாநந்தா
பிறப்பு(1937-09-12)12 செப்டம்பர் 1937
சென்யா பெராகு, மத்திய கானா, கானா
இறப்பு18 சனவரி 2016(2016-01-18) (அகவை 78)
பணிஇந்து சமய குரு
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவின் தலைநகரான அக்ராவில் சுவாமி ஞானாநந்தா சரஸ்வதி 1975ல் நிறுவிய ஆப்பிரிக்க இந்து மடாலயம்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சுவாமி ஞானானந்தா செப்டம்பர் 12, 1937 அன்று கானாவின் மத்திய பிராந்தியத்தில் உள்ள சென்யா பெராகு என்ற கிராமத்தில் குவேசி எஸ்ஸலாகப் பிறந்தார். அவரது குடும்பம் பூர்வீக கானா நம்பிக்கையை கடைப்பிடித்தது. ஆனால் அவரது பெற்றோர் பின்னர் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறினர். சிறுவயதிலிருந்தே சுவாமி ஞானானந்தா பிரபஞ்சத்தின் மர்மங்களில் ஆர்வமாக இருந்தார் மற்றும் பல்வேறு சமய நூல்களைப் படித்தார்.

இந்தியாவிற்கு பயணம்

தொகு

இந்து சமயம் பற்றிய சில நூல்களைப் படித்த பிறகு, ஞானானந்தா வட இந்தியாவில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேசுக்குச் சென்றார். ரிஷிகேசில் சுவாமி கிருஷ்ணாநந்தாவிடம் துறவறம் மேற்கொள்வதற்கான தீட்சை பெற்று இந்து துறவி ஆனார். ரிஷிகேசில் உள்ள தெய்வ நெறிக் கழகத்தில் சேர்ந்து இந்து சமய வேதாந்தக் கல்வியைப் பயின்றார்.

கானாவில் இந்து சமயப் பணி

தொகு

அக்ராவிற்கு திரும்பிச் சென்ற சுவாமி ஞானானந்தா, தெய்வீக நெறிக் கழகத்தை நிறுவினார்.பின் அக்ரா நகரத்தில் 1975ல் இந்து மடாலயத்தை நிறுவி, கானாவில் சைவ சமயத்தைப் பரப்பினார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Myjoyonline.com. "Ghana News - Swami Saraswati, first African Hindu monk from Ghana, dies". www.myjoyonline.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-16.
  2. Krishnananda Saraswati
  3. Joshi, Rajesh (29 June 2010). "Ghana's unique African-Hindu temple". BBC News. https://www.bbc.co.uk/news/10401741. 

வெளி இணைப்புகள்

தொகு