கானாவில் இந்து சமயம்
கானாவில் இந்து சமயம் (Hinduism in Ghanawas), 1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான் நாட்டில் இந்து சமயத்தைப் பின்பற்றும் சிந்தி மக்களால் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் இந்து சமயம் அறிமுகமானது.[1]கானாவின் தலைநகரான அக்ராவில் கருப்பினத்தவரான சுவாமி ஞானாநந்தா சரஸ்வதி நிறுவிய இந்து மடாலயத்தால் இந்து சமயம் பரவக் காரணமாயிற்று.[2] இஸ்கான் நிறுவனம் கானாவின் அக்ரா நகரத்தில் இராதா கிருஷ்ணன் கோயில் நிறுவி, கானா மக்களில் பலரை கிருஷ்ண பக்தர்களாக மாற்றியுள்ளது. இந்து சமயம், கானாவில் வளர்ந்து வரும் சமயமாக உள்ளது.
|
மக்கள் தொகை பரம்பல்
தொகு2021ஆம் ஆண்டின் கானா மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து சமயத்தைப் பின்பற்றும் சிந்தி மக்கள் உட்பட, 30,000 இந்து சமயத்தவர்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க இந்து மடாலயத்தை பின்பற்றுபவர்கள் சைவர்களாகவும்; இஸ்கானை பின்பற்றுபவர்கள் வைணவர்களாகவும் உள்ளனர்.
சமயப் பண்டிகைகள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ International freedom Report 2006 பரணிடப்பட்டது 2020-05-18 at the வந்தவழி இயந்திரம் - US Department of State
- ↑ Ghana's unique African-Hindu temple - BBC News