உகாண்டாவில் இந்து சமயம்

உகாண்டாவில் இந்து சமயம் (Hinduism in Uganda), பிரித்தானியப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் உகாண்டா இருந்த போதே இந்து சமயம் உகாண்டாவில் 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகமானது.[1][2]இந்திய விடுதலைக்கு முன்னர் குஜராத்திகள், ஜெயினர் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட 32,000 பணியாளர்களை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தையும், உகாண்டாவுடன் இணைக்கும் இருப்புப் பாதைகள் அமைக்கவும்,[3][4]மற்றும் கட்டுமாணப் பணிகளுக்காகவும், நிர்வாகப் பணிகளுக்காவும் பிரித்தானியர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர்.[1][2][5]

சிறீ சனாதன தர்ம மண்டல் கோயில், கம்பாலா, உகாண்டா
கிழக்கு ஆப்பிரிகாவில் உகாண்டா நாட்டின் அமைவிடம்


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

பிரித்தானியா காலனியாதிக்கத்திலிருது விடுதலை பெற்ற பின் ஆட்சிக்கு வந்த அதிபர் இடி அமீன் ஆட்சியில், புதிய சட்டத்தின் மூலம், 1972ல் இந்துக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[3][4][6]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2015ஆம் மதிப்பீட்டின்படி, உகாண்டா நாட்டில் ஏறத்தாழ் 3,55,497 (0.93%) இந்து சமயத்தவர்கள் உள்ளனர்[7][8]

வரலாற்றில் இந்து மக்கள் தொகை
ஆண்டும.தொ.±%
197065,000—    
20153,55,497+446.9%
ஆதாரம்: [9][10]
ஆண்டு % உயர்வு
1970 0.69% -
2015 0.93% +0.24%

இடி அமீன் ஆட்சியில் வெளியேற்றப்பட்ட இந்துக்களும், மற்றவர்களும்

தொகு
 
1972ல் இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களை உகாண்டாவை விட்டு வெளியேற்றிய உகாண்டா அதிபர் இடி அமீன்

பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர், உகாண்டாவை ஆட்சி செய்த இடி அமீன், 1972ல் இந்திய இந்துக்கள், ஜெயினர்கள், பஞ்சாபியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களின் வேலை மற்றும் அனைத்து உடமைகளைப் பறித்துக் கொண்டு, உகாண்டா நாட்டை விட்டு வெளியேற்றினார்.[11][12][13][14][15][16][17][18]

இடி அமீனுக்குப் பின்னர்

தொகு

இடி அமீனால் இந்துக்கள் வெளியேற்றப்பட்ட 20 ஆண்டு காலத்திற்குப் பின்னர், உகாண்டா அரசு இந்திய சமூகத்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. உகாண்டாவின் 27 மில்லியன் மக்கள் தொகையில், ஆசிய நாட்டவர்களில் 65% இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆவார்.[3] உகாண்டாவின் கம்பாலா நகரத்தில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது.[19]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sushil Mittal; Gene Thursby (2009). Studying Hinduism: Key Concepts and Methods. Routledge. pp. 87–88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-41829-9.
  2. 2.0 2.1 Kim Knott (2016). Hinduism: A Very Short Introduction. Oxford University Press. pp. 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-874554-9.
  3. 3.0 3.1 3.2 Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. pp. 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5.
  4. 4.0 4.1 Malory Nye (2013). A Place for Our Gods: The Construction of an Edinburgh Hindu Temple Community. Routledge. pp. 48–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-78504-7.
  5. David Levinson; Karen Christensen (2003). Encyclopedia of Community: From the Village to the Virtual World. Sage Publications. p. 592. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-2598-9.
  6. David S. Fick (2002). Entrepreneurship in Africa: A Study of Successes. Greenwood Publishing. p. 199. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56720-536-7.
  7. "Uganda, Religion And Social Profile". thearda.com. Archived from the original on 2021-08-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-02.
  8. The ARDA website, retrieved 2023-08-08
  9. Kim Knott (2016). Hinduism: A Very Short Introduction. Oxford University Press. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-106271-1.
  10. "Uganda, Religion And Social Profile". thearda.com. Archived from the original on 2021-08-26. பார்க்கப்பட்ட நாள் 2024-07-02.
  11. Steven Vertovec (2013). "Chapter 4". The Hindu Diaspora: Comparative Patterns. Taylor & Francis. pp. 87–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-36712-0.
  12. Ndlovu-Gatsheni, Sabelo J.; Ndhlovu, Finex (2013). Nationalism and National Projects in Southern Africa: New Critical Reflections. Africa Institute of South Africa. pp. 62–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7983-0395-8.
  13. Ronald Aminzade (2013). Race, Nation, and Citizenship in Postcolonial Africa: The Case of Tanzania. Cambridge University Press. pp. 89–90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-43605-3.
  14. John E. Roemer; Woojin Lee; Karine van der Straeten (2007). Racism, Xenophobia, and Distribution: Multi-issue Politics in Advanced Democracies. Harvard University Press. pp. 147–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-02495-3.
  15. Harold G. Coward; John R. Hinnells; Raymond Brady Williams (2012). The South Asian Religious Diaspora in Britain, Canada, and the United States. State University of New York Press. pp. 80–81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-9302-1.
  16. M.G. Vassanji (2012). No New Land. McClelland & Stewart. p. 25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55199-707-0.
  17. John S. Pobee (1976). Religion in a Pluralistic Society. BRILL Academic. pp. 40–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-04556-2.
  18. E. Khiddu-Makubuya, Victoria Miriam Mwaka and P. Godfrey Okoth (1994). Uganda, thirty years of independence, 1962–1992. Makerere University Press. p. 243.
  19. BAPS Shri Swaminarayan Mandir, BAPS Swaminarayan Sanstha, Africa

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாண்டாவில்_இந்து_சமயம்&oldid=4107940" இலிருந்து மீள்விக்கப்பட்டது