சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி
சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள இராபின்ஸ்வில் நகரியத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய இந்து சமயக் கோயில் ஆகும். இக்கோயில் 8 அக்டோபர் 2023 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.[1] இக்கோயிலின் மூலவர் சுவாமி நாராயண் ஆவார். மேலும் இக்கோயிலில் இராதா கிருஷ்ணன், இராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி ஆகிய தெய்வங்களின் தனிச்சன்னதிகள் உள்ளது.
சுவாமி நாராயணன் அக்சர்தாம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம்: | நியூ செர்சி |
அமைவு: | இராபின்ஸ்வில் நகரியம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரம் |
கல்வெட்டுகள்: | ஆன்மீக-பண்பாட்டு வளாகம் |
வரலாறு | |
அமைத்தவர்: | மகந்த் சுவாமி மகராஜ், சுவாமி நாராயணன் இயக்கம் |
இணையதளம்: | https://www.baps.org/Global-Network/North-America/Robbinsville.aspx |
அமைவிடம்
தொகுஇக்கோயில் நியூ யார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு தெற்கே 60 மைல் தொலைவிலும்; வாசிங்டன், டி. சி.க்கு வடக்கே 180 மைல் தொலைவிலும்; நியூ செர்சி நகரத்திற்கு வடமேற்கே 23.5 மைல் தொலைவில் உள்ள இராபின்ஸ்வில் நகரியத்தில் அமைந்துள்ளது.
கட்டிடக் கலை
தொகு183 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, அமெரிக்கா முழுவதிலிருந்தும் 12,500 தன்னார்வலர்களின் உதவியுடன், இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி கட்டப்பட்டது. இது இந்துக்களின் ஆன்மீக-பண்பாட்டு வளாகமாக உள்ளது. இக்கோயிலில் 10 ஆயிரம் தெய்வச் சிற்பங்கள் மற்றும் இந்திய இசைக்கருவிகள் மற்றும் இந்திய நடன வடிவங்கள் கொண்டுள்ளது.[2]
இக்கோயில் வளாகத்தில் சுவாமி நாராயண் மூலவர் ஆவார். இராதா கிருஷ்ணன், இராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களுக்கு 12 துணைக் கோயில்கள் கோபுரங்களுடன் உள்ளது. இக்கோயில் கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்குக் கல் மற்றும் கருங்கல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
படக்காட்சிகள்
தொகு-
கோயிலின் வெளித்தோற்றம்
-
கோயிலின் வெளித்தோற்றம்
-
கோயிலின் உட்பக்கக் காட்சி
-
கோயில் சிற்பங்கள்
-
கல்லில் செதுக்கப்பட்ட சாளரம்
-
கோயில் சிற்பங்கள்
-
கோயில் சிற்பங்கள்
-
கோயில் சிற்பங்கள்
-
கோயிலின் வெளித்தோற்றம்
-
மூலவர் சுவாமி நாராயண் சிற்பம்
-
கோயில் சிற்பங்கள்
-
கோயில் சிற்பங்கள்
-
கோயில் சிற்பங்கள்
-
குவிமாடத்தின் உட்புறக்காட்சி
-
குவிமாடத்தின் உட்புறக்காட்சி
-
குவிமாடத்தின் உட்புறக்காட்சி
-
கோயிலின் உட்பக்கக் காட்சி
-
சுவாமி நாராயணன் மற்றும் சுவாமி குணாதிதானந்தர்
-
பிரமுக் சுவாமி மகாராஜ்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- BAPS Swaminarayan Sanstha – The organization responsible for the creation of Akshardham