சுவாமி நிகிலானந்தா

இந்துத் துறவி

சுவாமி நிகிலானந்தா (Swami Nikhilananda : 1895-1973), தினேஷ் சந்திர தாஸ் குப்தா என்ற பெயரில் பிறந்த இவர் [1] சாரதாதேவியின் நேரடி சீடர் ஆவார். 1933 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண இயக்கத்தின் நியூயார்க் கிளையில் இராமகிருஷ்ணா-விவேகானந்தா மையத்தை நிறுவினார். மேலும் 1973 இல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளரும் சிந்தனையாளருமான நிகிலானந்தாவின் மிகப்பெரிய பங்களிப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண கதாமிருதத்தை வங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாகும். இது "ஸ்ரீ ராமகிருஷ்ணாவின் நற்செய்தி" (1942) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

சுவாமி நிகிலானந்தா
பிறப்பு1895
துர்காபூர் கிராமம், சில்ஹெட் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா ( Now in வங்காளதேசம்)
இறப்பு1973
நியூயார்க்
இயற்பெயர்தினேஷ் சந்திர தாஸ் குப்தா
சமயம்இந்து சமயம்
குருசாரதா தேவி

சுயசரிதை

தொகு

சுவாமி நிகிலானந்தா 1895 ஆம் ஆண்டு இன்றைய வங்காளதேசத்தில் சில்ஹெட் மாவட்டத்தில் உள்ள துர்காபூர் கிராமத்தில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், பத்திரிகைத் தொழிலைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானிய சிறை முகாமில் சில காலம் சிறையில் இருந்தார். [2]

சிறுவனாக இருந்தபோது, இவரது பெற்றோர்கள் மூலம், இராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் ஆகியோரைப் பற்றி அறிந்தார். இது இவரது இளம் மனதில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இராமகிருஷ்ணரின் நேரடி சீடர்களுடன் தொடர்பு கொள்ள வைத்தது. சாரதா தேவியால் தீட்சை பெற்றார். இராமகிருஷ்ணர், பிரம்மானந்தா, சுவாமி சாரதானந்தர், சிவானந்தர், சுவாமி துரியானந்தர், பிரேமானந்தர், சுவாமி அகண்டானந்தர், சுவாமி அபேதானந்தர் மற்றும் 'ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்’ நூலின் ஆசிரியரான மகேந்திரநாத் குப்தர் ஆகியோரின் நேரடி சீடர்களையும் இவர் சந்தித்தார். [3]

அவர்களின் செல்வாக்கில் ஈர்க்கப்பட்ட இவர் சுதந்திரப் போராட்டத்தை கைவிட்டு, இராமகிருஷ்ணரின் துறவு வரிசையில் சேர உலகைத் துறந்தார். ஒரு பிரம்மச்சாரியாக, இவர் பல ஆண்டுகளாக புகழ்பெற்ற ஆசிரியர்களின் கீழ் வேதங்களைப் படிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஆன்மீகத் துறைகளில் ஈடுபட்டுக்கொண்டே பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். 1931 ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடுகள் சென்ற இவர் 1933ல் நியூயார்க்கில் இராமகிருஷ்ண-விவேகானந்தா மையத்தை நிறுவினார்.[4][3] இவர் ஒரு சிறந்த பேச்சாளராகக் கருதப்பட்டார். மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்கள், தேவாலயங்கள் மற்றும் ஜெப ஆலயங்களில் விரிவுரை செய்யவும், கிழக்கு மற்றும் மேற்கு மதங்களுக்கிடையேயான மாநாடுகளில் பங்கேற்கவும் அழைக்கப்பட்டார். 1973 இல் இறக்கும் வரை இராமகிருஷ்ண [3] விவேகானந்தா மையத்தில் பணியாற்றினார். இராமகிருஷ்ண இயக்கத்தின் இலக்கியத்திற்கு நிகிலானந்தா முக்கிய பங்களிப்பை வழங்கினார். எழுத்தாளர் ஜே. டி. சாலிஞ்சர், [5] உட்ரோ வில்சனின் ம்களான மார்கரெட் உட்ரோ வில்சன், ஒப்பீட்டு தொன்மவியலாளரான ஜோசப் காம்ப்பெல், உலர் புகைப்பட நகல் நுட்பச் செயல்முறையின் கண்டுபிடிப்பாளர் செஸ்டர் கார்ல்சன் உள்ளிட்ட புகழ்பெற்ற சீடர்களையும் இவர் ஈர்த்தார். [6] தத்துவஞானி இலெக்ஸ் ஹிக்சன் என்பவர் இவரது சீடராவார்.

இலக்கியப் படைப்புகள்

தொகு

உபநிடதம், பகவத் கீதை, சாரதா தேவி மற்றும் [[விவேகானந்தரரின் வாழ்க்கை வரலாறுகள், சுவாமி விவேகானந்தரின் படைப்புகளின் தொகுப்பு, விவேகானந்தர்: யோகாஸ் அண்ட் அதர் ஒர்க்ஸ், இந்து மதம், அதன் பொருள் ஆகியவை இவரது மிக முக்கியமான படைப்புகளில் அடங்கும். ஆன்மாவின் விடுதலைக்காகவும், அழியாத தன்மையைத் தேடும் மனிதன் பொன்ன்ற பல கட்டுரைகளை பல்வேறு பத்திரிகைகளுக்காக எழுதியுள்ளார். [3] இவர் வங்காளா மொழியிலிருந்து காதம்ரிதாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது இவரது மிகவும் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாகும். இது 'ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நற்செய்தி' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. சுவாமி நிகிலானந்தாவின் பல படைப்புகள் ஏற்கனவே பல்வேறு ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வேதாந்தத்தின் போதனைகளின் விளக்கங்கள் குறித்த அதிகாரப்பூர்வ நூல்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. [3]

1944 ஆம் ஆண்டில், டைம் இதழ் சுவாமி நிகிலானந்தாவின் பகவத் கீதையின் மொழிபெயர்ப்புகளை, "உலகின் மிகப் பெரிய மதக் கிளாசிக்களில் ஒன்றின் முதல் உண்மையில் படிக்கக்கூடிய, அதிகாரப்பூர்வமான ஆங்கில மொழிபெயர்ப்பு" என்று குறிப்பிட்டது. மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நற்செய்தியை "உலகின் மிகவும் அசாதாரணமான மத ஆவணங்களில் ஒன்றின் மொழிபெயர்ப்பு" என்றும் குறிப்பிட்டது. [7] ஃபிலிப் ஜலேஸ்கி மற்றும் ஹார்பர்காலின்ஸ் வெளியீட்டாளர்களால் கூட்டப்பட்ட அமெரிக்க அறிஞர்களால் நற்செய்தி "20 ஆம் நூற்றாண்டின் 100 மிக முக்கியமான ஆன்மீக புத்தகங்களில்" ஒன்றாக வாக்களிக்கப்பட்டது. [8]

உசாத்துணை

தொகு

மொழிப்பெயர்ப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Swami Nikhilananda". Prabuddha Bharata. 1973. 
  2. Adiswarananda, Swami (1974). "Swami Nikhilananda 1895–1973". Proceedings and Addresses of the American Philosophical Association (American Philosophical Association) 47: 225–226. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Adiswarananda, Swami (1974). "Swami Nikhilananda 1895–1973". Proceedings and Addresses of the American Philosophical Association (American Philosophical Association) 47: 225–226. Adiswarananda, Swami (1974). "Swami Nikhilananda 1895–1973". Proceedings and Addresses of the American Philosophical Association. American Philosophical Association. 47: 225–226. JSTOR 3129924.
  4. Oldmeadow, Harry (2004). Journeys East. p. 450. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-941532-57-7.
  5. The Slate
  6. Miller, Timothy (1995). America's Alternative Religions.
  7. "Swami Nikhilananda". பார்க்கப்பட்ட நாள் 18 October 2008.
  8. "100 Best Spiritual Books of the Century". Archived from the original on 27 August 2008. பார்க்கப்பட்ட நாள் 21 August 2008.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_நிகிலானந்தா&oldid=3778023" இலிருந்து மீள்விக்கப்பட்டது