சூசன் எம். ஆன்ட்ரூசு
சூசன் எம். ஆன்ட்ரூசு (Susyn M. Andrews) (பிறப்பு: 1953) என்பவர் இங்கிலாந்து நாட்டு சார்ந்த பெண் தாவரவியலாளரும், தோட்டக்கலை ஆய்வாளரும் ஆவார். இந்த பெண்மணி, புவியின் [மிதவெப்பமண்டல, அயன அயல் மண்டல பகுதிகளில் வளரும் கெட்டிமரத் தாவரங்களை (woody plants) ஆராய்ந்தார். குறிப்பாக, ஐலெக்சு, இலவன்டுலா குறித்த ஆய்வுகளில் முன்னோடியாக திகழ்கிறார்.[1][2][3][4]
சூசன் எம். ஆன்ட்ரூசு | |
---|---|
பிறப்பு | 1953 டப்லின் |
படித்த இடங்கள் | National Botanic Gardens |
பணி | தாவரவியலாளர், botanical collector, horticulturist |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
நிறுவனங்கள் | |
Author abbrev. (botany) | S.Andrews |
கல்வி
தொகுஇப்பெண்மணி அயர்லாந்து நாட்டிலுள்ளர இராத்நியூ ஊரின் பள்ளியில் பயின்றார். பின்பு, அயர்லாந்து தேசியத் தாவரவியல் பூங்காவின் கல்வியகத்தில் பட்டம் பெற்றார். 1973 ஆம் ஆண்டு, முதல்நிலையில் அமினிட்டி தோட்டவியல் கல்வியகத்தில் பயின்று, அயர்லாந்து நாட்டு தோட்டவியல் துறையால் வெள்ளிப்பதக்கமும் பெற்றார். தொடர்ந்து செருமனியில், செடிகொடிகள் பயிரிட்டு, உயிர்பெற்று, வளர்க்கப்படும் இடமான மழலகத்தில் (Nursery names: J.Timm and Co. Pflanzen-Kolle, Johann Bruns) கல்வி பயின்றார்.
பணி
தொகு1976 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தின், அரச கழக தாவரவியல் பூங்கா, கியூவின் உலர் தாவரகத்தில் தோட்ட வகைப்பாட்டியல் அறிஞராக, இப்பெண்மணி பணியாற்றினார்.[6] 1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தாவர வகைப்பாடுகளைச் சரிபார்க்கும் பணியிலும், பின்னர் 1988 ஆம் ஆண்டு உயர் அறிவியல் அதிகாரியாக உயர்ந்தார். அப்பொழுது மலேசியாவிலுள்ள சபாவுக்கு பயணித்து, ஐலெக்சு தாவரத்தினை ஆராய்ந்தார்.[7] இதனால், பயிர் தாவரங்களின் வகைபாட்டியல் பிரிவுக்குத் தலைமை அதிகாரி ஆனார்.[8] 2003 ஆம் ஆண்டில், கியூ ஆய்வகத்தில் இருந்து வெளியேறி, தோட்ட வகைப்பாட்டியல் ஆலோசகராக தனித்து செயல்படுகிறார். இருப்பினும், கியூ தோட்டவியல் நடத்தும் வகைப்பாட்டியல் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியையாகச் சென்று கற்பிக்கவும் செய்கிறார்.
விருதுகள்
தொகுஇலவன்டுலா தாவரத்தில் இவர் செய்த ஆய்வுப் பணிகளுக்காக, அமெரிக்க சமூகத்தின் விருதை (Wolf-Fenton Award) 1991 ஆம் ஆண்டு பெற்றார். 2004 ஆம் ஆண்டு சியூ-இங் கூ விருதினையும்(The Shiu-ying Hu Award) பெற்றார்.[9] 2012 ஆம் ஆண்டு இராயல் தோட்டவியல் கழகம் அளித்த வெயிட்சு நினைவு விருதைப் (Veitch Memorial Medal) பெற்றார்.[10][11] 2016 ஆம் ஆண்டு, கியூ கழகத்தாரின் அமைப்பு வழங்கிய சியார்ச்சு பிரௌன் நினைவு விருதையும் (George Brown Memorial Award) பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "CONTRIBUTORS". Curtis's Botanical Magazine 12 (4): 247–248. 1995. doi:10.1111/j.1467-8748.1995.tb00526.x. http://www.jstor.org/stable/45065136.
- ↑ Hart, Allan (2016). "The George Brown Memorial Award Susyn Andrew". The Journal of the Kew Guild 16 (120): 568. https://issuu.com/kewguildjournal/docs/v16s120p509-all.
- ↑ "Andrews, Susyn M." International Plant Names Index. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2024.
- ↑ "Index of Botanists - Andrews, Susyn M." Harvard University Herbaria. ஆர்வர்டு பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2024.
- ↑ பன்னாட்டுத் தாவரப் பெயர்கள் குறிப்பேடு. S.Andrews.
{{citation}}
: Check|last=
value (help) - ↑ "Royal Botanic Gardens, Kew Scientific, Technical and Administrative Staff". Kew Bulletin 32 (4): 863–872. 1978. http://www.jstor.org/stable/4109792.
- ↑ Sands, Martin (1989). "NEWS OF KEWITES AT HOME AND ABROAD IN 1988". The Journal of the Kew Guild 10 (93): 783. http://journal.kewguild.org.uk/v10s93p724-All.pdf.
- ↑ Kingsbury, Noel (4 January 2008). "Plant taxonomy made easy". The Telegraph. https://www.telegraph.co.uk/gardening/3346168/Plant-taxonomy-made-easy.html.
- ↑ "Awards". Holly Society of America. 2021. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ "More RHS Honours for British gardening women". Gardening Women. 13 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
- ↑ Hepper, Nigel (2013). "News of Kewites at Home and Abroad". Journal of the Kew Guild 16 (117): 245-246. http://journal.kewguild.org.uk/v16s117p145-All.pdf.