சூழ்நிலை மண்டலம்

ஓரிடத்தில் வாழக்கூடிய உயிரினங்கள்

சூழ்நிலை மண்டலம் என்பது ஓரிடத்தில் வாழக்கூடிய உயிரினங்கள், அங்கே காணப்படக்கூடிய உயிரற்ற காரணிகளுடன் இணைந்து வாழ்தல் ஆகும்.

சூழ்நிலை மண்டலம்

சூழ்நிலை மண்டலத்தின் அமைப்பு தொகு

சூழ்நிலை மண்டலத்தில் 2 காரணிகள் உள்ளன[1].

உயிரற்ற காரணிகள் தொகு

நீர், மண், காற்று, சூரிய ஒளி, வெப்பம், தாதுப்பொருட்கள், கரிமப் பொருட்கள் ஆகியவை உயிரற்ற காரணிகள் ஆகும்.

உயிர்க் காரணிகள் தொகு

இவை உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், சிதைப்பவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

உற்பத்தியாளர்கள் தொகு

நீர், நில வாழ் தாவரங்கள் மற்றும் தாவர மிதவை உயிரினங்கள் ஆகியவை உற்பத்தியாளர்கள் ஆகும்.

நுகர்வோர்கள் தொகு

முதல்நிலைநுகர்வோர்கள் தொகு

தாவரங்களை உண்ணக்கூடிய விலங்குகள் மற்றும் விலங்கு மிதவை உயிரிகள் முதல்நிலை நுகர்வோர்கள் ஆகும். எ.கா: மான்கள், சிறிய மீன்கள்.

இரண்டாம்நிலை நுகர்வோர்கள் தொகு

தாவரஉண்ணிகளை உண்ணக்கூடிய தவளை, ஓநாய் போன்ற உயிரினங்கள் இரண்டாம்நிலை நுகர்வோர்கள் ஆகும்.

மூன்றாம்நிலை நுகர்வோர்கள் தொகு

இரண்டாம்நிலை நுகர்வோர்களை உண்ணக்கூடிய மாமிச உண்ணிகளான கழுகு, சிங்கம், புலி போன்ற உயிரினங்கள் மூன்றாம்நிலை நுகர்வோர்கள் ஆகும்.

சிதைப்பவைகள் தொகு

இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலங்களை சிதைத்து அழிக்கக்கூடிய பாக்டீரியா, காளான் போன்ற நுண்ணுயிரிகள் சிதைப்பவைகள் ஆகும்[2].

மேற்கோள்கள் தொகு

  1. 10 ம் வகுப்பு அறிவியல். சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் மேம்பாட்டுக் கழகம். பக். 120. 
  2. Walt Whitman. "The Ecosystem and how it relates to Sustainability". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழ்நிலை_மண்டலம்&oldid=3850550" இலிருந்து மீள்விக்கப்பட்டது