செகார் பேரா தொடருந்து நிலையம்
செகார் பேரா தொடருந்து நிலையம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Chegar Perah Railway Station மலாய்: Stesen Keretapi Chegar Perah) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், செகார் பேரா சிறுநகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
கேடிஎம் இண்டர்சிட்டி | |||||||||||||||||||||
செகார் பேரா தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||
அமைவிடம் | செகார் பேரா, லிப்பிஸ் மாவட்டம், பகாங், மலேசியா | ||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°29′26″N 102°56′43″E / 4.49056°N 102.94528°E | ||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து | ||||||||||||||||||||
தடங்கள் | மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் | ||||||||||||||||||||
நடைமேடை | 1 பக்க நடைப்பாதை | ||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||
தரிப்பிடம் | இலவசம் | ||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு | ||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1914 | ||||||||||||||||||||
மின்சாரமயம் | இல்லை | ||||||||||||||||||||
சேவைகள் | |||||||||||||||||||||
| |||||||||||||||||||||
|
இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 273 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 199 கி.மீ.; தொலைவில் உள்ளது.[2]
பொது
தொகுஇந்த நிலையம் கிழக்கு நகரிடை சேவையில், செகார் பேரா மற்றும் அதன் அருகிலுள்ள சிறுநகரங்களுக்கு இடையிலான ஒரு முனையமாக விளங்குகிறது. செகார் பேரா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது. செகார் பேரா நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[3]
கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்
தொகுசெகார் பேரா தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் செகார் பேரா நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. 1920 முதல் 1960 வரையிலான காலப்பகுதியில் பல கிராமவாசிகளுக்கு தொடருந்துகள் முதன்மையான போக்குவரத்து முறையாக இருந்ததால், செகார் பேராவில் உள்ள தொடருந்து நிலையம் மலேசியாவின் சுதந்திரத்திற்கு முன்பே இருந்தே இயங்கி வருகிறது.
தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே செகார் பேரா மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முக்கிய முனையமாகவும் செயல்படுகிறது.
நிலைய வசதிகள்
தொகு- தீவு / பக்க மேடைகள்
- காத்திருப்புப் பகுதி
- பொது கழிப்பறைகள்
- வாகன நிறுத்துமிடம்
- வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
- பானங்கள் விற்பனை இயந்திரங்கள்
தொடருந்து சேவைகள்
தொகு- ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து - 26/27 தும்பாட் - ஜொகூர் பாரு சென்ட்ரல் - (Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral)
- தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து - 50/53/58/59 குவா மூசாங் - கோலா லிப்பிஸ் - (Shuttle Timur 50/53/58/59 Gua Musang–Kuala Lipis)[4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Train from Chegar Perah to Pahang". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ "Directions from Kuantan to Chegar Perah". www.distancesfrom.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ "KTM Berhad Logo Chegar Perah Railway Station is a railway station located in Chegar Perah, Pahang". Transport Malaysia. 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
- ↑ "Train Schedule KTMB". ktmb.com.my. பார்க்கப்பட்ட நாள் 1 March 2024.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Chegar Perah Railway Station தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- KTM / MRT Line Integrations