செங்கமநாடு, எர்ணாகுளம்

இந்திய மாநிலம், கேரளத்திலுள்ள ஒரு நகரம்

செங்கமநாடு (Chengamanad) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவிலுள்ள ஒரு சிறிய நகரமாகும். இது பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

செங்கமநாடு
ചെങ്ങമനാട്
town
ஆள்கூறுகள்: 10°09′54″N 76°21′44″E / 10.1650700°N 76.362340°E / 10.1650700; 76.362340
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்29,775
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி இணைப்பு எண்0484
வாகனப் பதிவுகேஎல்-41
கோயில் அலுவலகம்
புனித அந்தோனியார் தேவாலயம்
மகாதேவர் கோயிலின் முன்பகுதி

புள்ளிவிவரங்கள்

தொகு

இந்தியாவின் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[1] செங்கமநாட்டில் 29,775 மக்கள் தொகை இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 80% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 82% மற்றும் பெண் கல்வியறிவு 78%. மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சொற்பிறப்பியல்

தொகு

புராணங்களின் படி, இந்த இடம் இங்குள்ள ஒரு குகையில் தவம் செய்ததாகக் கூறப்படும் ஜங்கமன் என்ற முனிவரிடமிருந்து இந்த பெயரைப் பெற்றதாக கருதப்படுகிறது. இந்த இடம் ஆரம்பத்தில் ஜங்கமன்நாடு என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது செங்கமநாடு ஆனது. மற்றொரு கணக்கு, செங்கமநாடு என்ற பெயர் சிறப்பு மண்ணின் காரணமாக இருப்பதாகக் கூறுகிறது.

செங்கமநாடு மகாதேவர் ஆலயம்

தொகு

செங்கமநாட்டில் உள்ள ஈர்க்கும் மையமாக மகாதேவர் கோயில் உள்ளது. மேலும் இது ஆலுவாவின் முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். பிரதான தெய்வமான சிவன் கிழக்கை எதிர்கொள்ளும் கிராத மூர்த்தி வடிவத்தில் இருக்கிறார். பார்வதி மற்றும் பிள்ளையார் ஆகிய தெய்வங்களின் சன்னதி முறையே மேற்கு மற்றும் தெற்கு நோக்கி உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்

தொகு
  • முனிக்கல் குகைக் கோயில்

இந்த ஊரிலுள்ள மற்றொரு ஈர்ப்பு மையம் முனிக்கல் கோயிலாகும். இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதியாகும். யானையின் பின்புறத்தை ஒத்த ஒரு பெரிய பாறையில் இந்த கோயில் அமைந்துள்ளது. முனிக்கல் குகாலயம் செங்கமநாட்டில் ஒரு மலையின் மேல் அமைந்துள்ளது (கொச்சிக்கு வடக்கே 30 கி.மீ). ஜங்கமான் என்ற முனிவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த இடம் ஆரம்பத்தில் ஜங்கமான் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது செங்கமநாடு என்று மாற்றப்பட்டது. முனிவர் தியானித்ததாகக் கூறப்படும் இடத்திலேயே ஒரு பிரபலமான முருகன் கோயில் அமைந்துள்ளது. பின்னர் இது 1898 இல் சட்டம்பி சுவாமிகளால் புனிதப்படுத்தப்பட்டது. "முனிக்கல் குகாலயம்" என்ற சொல்லுக்கு "முனிவர்கள் பாறை குகை" என்று பொருள். மற்றொரு கதை என்னவென்றால், முருகன் "குகாலயம்" என்றும் அழைக்கப்படுகிறார். இந்த இடத்தை அவரது தங்குமிடமாக மாற்றியுள்ளார் எனவே "குகாலயம்" என பெயர் பெற்றது.

போக்குவரத்து

தொகு

செங்கமநாடு ஆலுவா நகரிலிருந்து பருர் - அங்கமாலி பேருந்துப் பாதையில் சாலை வழியாக 10 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள தொடர்வண்டி நிலையங்கள் ஆலுவா (10 கி.மீ) ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் செங்கமநாட்டிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள நெடும்பசேரியில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையமாகும்.

குறிப்புகள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chengamanad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கமநாடு,_எர்ணாகுளம்&oldid=3245881" இலிருந்து மீள்விக்கப்பட்டது