செங்காளம்மா பரமேசுவரி கோயில்
செங்காளம்மா பரமேசுவரி கோவில் ( Chengalamma Parameshwari Temple ) என்பது இந்தியாவின் ஆந்திராவின் சூலூர் பேட்டை நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும்.[1][2] இது கலங்கி ஆற்றங்கரையில், சூலூர்பேட்டையின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.
சிறீ செங்காளம்மா கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம்: | நெல்லூர் |
அமைவு: | சூலூர் பேட்டை |
ஆள்கூறுகள்: | 13°41′28.6″N 80°00′46.5″E / 13.691278°N 80.012917°E |
கோயில் தகவல்கள் | |
இணையதளம்: | www |
வரலாறு
தொகுஇந்தக் கோயில் சென்னையிலிருந்து 79 கி.மீ தொலைவிலும், நெல்லூரிலிருந்து 97 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வரலாறுச் சான்றுகளில் அடிப்படையில் இக்கோவில் நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக அறியப்ப்படுகிறது.[3] ஆனாலும் சில சான்றுகள் கோவிலின் வரலாறு 400 ஆண்டுகளுக்கு முந்தையதாகக் காட்டுகிறது.[4] 10 ஆம் நூற்றாண்டில், இப்பகுதியை ஆண்ட சோழ வம்சம், கலங்கி ஆற்றில் தோன்றிய தெய்வத்தைப் பற்றி அறிந்து செங்காலம்மனுக்கு ஒரு சிறிய கோவிலைக் கட்டியது.[5]
புனைவு
தொகுசிலையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம், தெய்வத்தின் இடது கை பகுதி பார்வதிதியைச் சித்தரிக்கிறது. வலது கை பகுதி சரசுவதியையும், மத்திய பகுதி மகாலட்சுமியையும் சித்தரிக்கிறது. இந்த அம்சங்கள்தான் திரிகால செங்காளி என்ற பெயருக்கு காரணம். தெய்வத்தின் சிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்ற சோழர்களால் இச்சிலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இங்குள்ள அம்மனின் சிலை எட்டு ஆயுத வடிவங்களை சித்தரிக்கிறது. ஒவ்வொன்றும் அரக்கன் மீது நிற்கும் தோரணையில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தை வைத்திருப்பதால் இங்குள்ள தெய்வம் பார்வதி தெய்வம் மட்டுமல்ல, மகாகாளி எனவும் கருதப்படுகிறது.[5]
ஆரம்பத்தில், தெய்வத்தை 'தென்காளி' (தக்சிண காளி) என அழைக்கப்பட்டதாகவும், பின்னர் 'செங்காளி' என மாறி பின்னர் செங்காளம்மா என்ற பெயரை பெற்றதாகவும் அறியப்படுகிறது .[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Layout page". areaprofiler.gov.in. India: National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sullurupet Temples - A.P. Tourism". aptourism.gov.in. Andhra Pradesh, India: ஆந்திரப் பிரதேச அரசு. Archived from the original on 2019-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-12-21.
- ↑ "Religious Tourism | Sri Potti Sriramulu Nellore District, Government of Andhra Pradesh | India". ஆந்திரப் பிரதேச அரசு.
- ↑ "Chengalamma Temple Sullurpeta - Timings, Jathara, History". December 13, 2015.
- ↑ 5.0 5.1 "Chengalamma Parameswari Temple - Sullurpeta". www.chengalamma.org.
- ↑ "About Temple | Temple Info | CPASPT". tms.ap.gov.in. ஆந்திரப் பிரதேச அரசு.