செச்சு சூப்சா
செச்சு சூப்சா (Sechü-Zubza) வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் கோகிமா மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். நாகாலாந்து தலைநகரான கோகிமா நகரத்திற்கு மேற்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் செச்சு-சூப்சா சிற்றூர் அமைந்துள்ளது. 2011ல் செச்சு-சூப்சா சிற்றூரின் மக்கள் தொகை 4,460 ஆகும்.[2]
செச்சு-சூப்சா | |
---|---|
இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் செச்சு சூப்சா நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°42′54″N 94°02′11″E / 25.715°N 94.0365°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
மாவட்டம் | கொகிமா |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 4,460 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 797120 |
வாகனப் பதிவு | NL-01 |
பாலின விகிதம் | 473 ♂/♀ |
புதிய இருப்புப் பாதை திட்டம்
தொகுநாகாலாந்தின் திமாப்பூர் - செச்சு சூப்சா மற்றும் மணிப்பூர் தலைநகரம் இம்பால் நகரத்தை இணைக்கும் 140 கிலோ மீட்டர் நீளம் கொண்ட புதிய இருப்புப் பாதை திட்டத்திற்கு ரூபாய் 20.61 கோடி ஒதுக்கி இந்திய இரயில்வே வாரியம் சூலை 2023ல் ஒப்புதல் வழங்கியுள்ளது.[3][4]