சென்னை - பெங்களூர் ஈரடுக்கு விரைவுத் தொடருந்து

சென்னை - பெங்களூர் ஈரடுக்கு விரைவு (Chennai - Bangalore AC Double Decker Express) என்பது சென்னையையும் பெங்களூரையும் இணைக்கும் அதிவிரைவு தொடர்வண்டி ஆகும். இதுவே தென்னிந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு விரைவு ஆகும்.[3][4][5]

சென்னை - பெங்களூரு குளுரூட்டப்பட்ட ஈரடுக்கு விரைவி[1][2]
வேலூர் காட்பாடி சந்திப்பில் சென்னை- பெங்களூரு ஈரடுக்கு விரைவி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு, கருநாடகம் இடையே
முதல் சேவை25 ஏப்ரல் 2013
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் (MAS)
இடைநிறுத்தங்கள்9/10
முடிவுபெங்களூர் (SBC)
ஓடும் தூரம்358 கிமீ
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்22625 / 22626
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட இருக்கை வசதிப் பெட்டிகள் 10
இருக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்உள்ளன
காணும் வசதிகள்பெரிய சன்னல்கள்
சுமைதாங்கி வசதிகள்உள்ளன
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்சராசரி - 58 கிமீ/ம

சிறப்புக் கூறுகள்

தொகு

அனைத்துப் பயணியர் பெட்டிகளும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளன. நடைமேடைக்கு இணையாகவும், சற்றே கீழாகவும், மேலாகவும் இவை உள்ளன. ஒவ்வொருப் பகுதியிலும் மெத்தென்ற, குறைந்தளவில் சாயக்கூடிய, இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. தவிரவும் இத்தொடருந்தில் புவியிடங்காட்டி-சார்ந்த பயணியர் தகவல் அறிவிப்பு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது; இதன் மூலம் தொடருந்தின் நிகழ்நிலை அமைவிடம், விரைவு மற்றும் அடுத்த நிலையத்திற்கான தொலைவு ஆகியன பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.[6]

நிறுத்தங்கள்

தொகு
  • பெங்களூர் தொடங்கி சென்னை வரை (22626)
வ. எண்
நிலையங்கள்
வருகை புறப்பாடு
1. பெங்களூர் நகரம் இரயில் முனையம்
14:30
2. பெங்களூர் பாளையம் 14:40 14:42
3. கிருசுணராசபுரம் 14:51 14:53
4. பங்காரப்பேட்டை 15:33 15:35
5. சோலையார்பேட்டை சந்திப்பு 16:48 16:50
6. ஆம்பூர்
17:18 17:20
7. காட்பாடி சந்திப்பு 18:03 18:05
8. அரக்கோணம் சந்திப்பு 18:53 18:55
9. பெரம்பூர் 19:43 19:45
10. சென்னை சென்ட்ரல் 20:35 இரயில் முனையம்
  • சென்னை தொடங்கி பெங்களூர் வரை (22625)
வ. எண்
நிலையங்கள்
வருகை புறப்பாடு
1. சென்னை சென்ட்ரல் இரயில் முனையம்
07:25
2. அரக்கோணம் சந்திப்பு 08:28 08:30
3. காட்பாடி சந்திப்பு 09:18 09:20
4. ஆம்பூர் 09:58 10:00
5. சோலையார்பேட்டை சந்திப்பு 10:33 10:35
6. பங்காரப்பேட்டை 11:33 11:35
7. கிருசுணராசபுரம் 12:18 12:20
8. பெங்களூர் பாளையம் 12:33 12:35
9. பெங்களூர் நகரம் 13:10 இரயில் முனையம்
 
காட்பாடி சந்திப்பில் சென்னை-பெங்களூரு ஈரடுக்கு விரைவி, (எதிர் நடைமேடையிலிருந்து)

பெட்டிகள் வரிசை

தொகு

இந்தத் தொடர்வண்டியில் 10 குளிரூட்டப்பட்ட இருக்கைப் பெட்டிகளும் 2 செலுத்து பெட்டிகளும் உள்ளன (மொத்தம்12 பெட்டிகள்)

பொறி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  EOG C1 C2 C3 C4 C5 C6 C7 C8 C9 C10 EOG

சான்றுகள்

தொகு
  1. "22625/Chennai - Bangalore AC Double Decker Express Double Decker Chennai/MAS to Bangalore City/SBC Complete Train Route - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. 2013-10-30. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
  2. "22626/Bangalore - Chennai AC Double Decker Express Double Decker Bangalore City/SBC to Chennai/MAS Complete Train Route - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". India Rail Info. 2013-08-16. பார்க்கப்பட்ட நாள் 2014-01-18.
  3. "South India's first double-decker train goes on trial run in Bangalore". இந்தியன் எக்சுபிரசு. 25 Feb 2013.
  4. "It is the first air-conditioned double-decker train in south India". தி இந்து. 26 April 2013.
  5. "Enjoy double-decker train ride to Chennai". டெக்கன் ஹெரால்டு. 24 Feb 2013.
  6. "It is the first air-conditioned double-decker train in south India". தி இந்து. 26 April 2013.