செம்போங்
செம்போங் (மலாய்; ஆங்கிலம்: Chembong; சீனம்: 钦邦) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மட்டும், முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[1]
செம்போங் | |
---|---|
Chembong | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°36′23.9″N 102°05′16.0″E / 2.606639°N 102.087778°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | ரெம்பாவ் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 71300 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06685 000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தொகுதிக்கும் செம்பொங் என்றுதான் பெயர். செம்பொங்கில் மலாய் இனத்தவர் பெரும்பான்மையினர்; மற்றும் சீனர் மற்றும் இந்திய மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இங்கு ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன; மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சுப்பிரமணியர் இந்து ஆலயங்களும் உள்ளன. தாமான் பாலோங் சாலைக்கு வடக்கே ஒரு சீன ஆக்கியான் மதத் தளமும் உள்ளது.[2]
பொது
தொகுசெம்பொங்கில்பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆகும். செப்டம்பர் 2019-இல், நெஸ்லே மலேசியா தனது மிலோ செம்போங் (MILO Chembong) தொழிற்சாலையின் விரிவாக்கத்தைத் தொடங்கி 1993-இல் செயல்படத் தொடங்கியது. இப்போது உலகின் மிகப்பெரிய மிலோ உற்பத்தித் தளமாகவும் விளங்குகிறது.[3]
செம்போங் தோட்ட உருமாற்றத் தமிழ்ப்பள்ளி
தொகுநெகிரி செம்பிலான்; ரெம்பாவ் மாவட்டத்தில் செம்போங் தோட்ட உருமாற்றத் தமிழ்ப்பள்ளி உள்ளது. 137 மாணவர்கள் பயில்கிறார்கள். 17 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். செம்போங் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக 1938-இல் சி.ஏ. சோன்ஸ் எனும் ஆசிரியர் ஒருவரால் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் இந்தப் பள்ளி செம்போங் தோட்டத்தில் இருந்த வீடு ஒன்றில் தொடங்கப்பட்டது.[4]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD3032 | செம்போங் தோட்டம் | SJK(T) Ladang Chembong[5] | செம்போங் தோட்ட உருமாற்றத் தமிழ்ப்பள்ளி | 71300 | செம்போங் | 137 | 17 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF) (in ஆங்கிலம்). Malaysian National Committee on Geographical Names. 2017. p. 32. Archived from the original (PDF) on May 23, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021.
- ↑ "Chembong (Mukim, Malaysia) - Population Statistics, Charts, Map and Location". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ "Nestlé Establishes World's Largest MILO Factory in Negeri Sembilan". Nestlé Malaysia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ "செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG CHEMBONG". sjktchembong.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
- ↑ "Program Sekolah Jan -Mei 2021 - Membalik Buku Halaman 1-46 | AnyFlip". anyflip.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.