செர்சோ லியோனி
செர்சியோ லியோனி (Sergio Leone, இத்தாலிய ஒலிப்பு: செர்ஜோ லெயோனெ; 3 சனவரி 1929 – 30 ஏப்ரல் 1989) இத்தாலிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியராவார். "இசுப்பகட்டி வெசுட்டர்ன்" என அறியப்படும் திரைப்படப் பாணியை உருவாக்கிய பெருமை இவரைச் சாரும்.[1][2]
செர்ஜோ லியோனி Sergio Leone | |
---|---|
பிறப்பு | உரோம், லாசியோ, இத்தாலி | 3 சனவரி 1929
இறப்பு | 30 ஏப்ரல் 1989 உரோம், லாசியோ, இத்தாலி | (அகவை 60)
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1959–1984 |
வாழ்க்கைத் துணை | கார்லா லியோனி |
பிள்ளைகள் | பிரான்செசுக்கா இராபேலா (பிறப்பு 1961) ஆண்ட்ரியா |
இவரது திரைப்படங்களில் மிகவும் அண்மைநிலைக் காட்சிகளும் தொலைதூரக் காட்சிகளும் அடுத்தடுத்து வைக்கப்படும். இவரது படைப்புக்களில் மலிவான வரலாற்றுப் படங்களான தி லாஸ்ட் டேஸ் ஆஃப் பாம்ப்பி (1959) , தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ் (1961), மேற்கத்திய பாணியில் கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த டாலர் முப்படங்களான எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் (1964), ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் (1965), தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (1966) ஆகியவையும் ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் த வெஸ்ட் (1968), மெக்சிக்கோவின் புரட்சியாளன் சபாட்டா வாழ்வைத் தழுவிய டக், யூ சக்கர்! (1971) மற்றும் குற்ற நாடக காப்பியமான ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா (1984) ஆகியனவும் அடங்கும்.
இயக்கியத் திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படத்தின் பெயர் | ஆங்கிலம் | இத்தாலியம் | அழுகியத் தக்காளிகள் மதிப்பீடு |
---|---|---|---|---|
1959 | தி லாஸ்ட் டேஸ் ஆப் பாம்பி | The Last Days of Pompeii | Gli ultimi giorni di Pompei | |
1961 | தி கொலாசஸ் ஆப் ரோட்ஸ் | The Colossus Of Rhodes | Il Colosso di Rodi | 57% |
1964 | எ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ் | A Fistful of Dollars | Per un pugno di dollari | 98% |
1965 | ஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர் | For a Few Dollars More | Per qualche dollaro in piu | 94% |
1966 | தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி | The Good, the Bad and the Ugly | Il buono, il brutto, il cattivo | 97% |
1968 | ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் தி வெஸ்ட் | Once Upon a Time in the West | C'era una volta il West | 98% |
1971 | அ பிஸ்ட்புல் ஆப் டைனமைட் | A Fistful of Dynamite | Giù la testa | 90% |
1973 | மை நேம் இஸ் நோபடி | My Name Is Nobody | Il mio nome è Nessuno | |
1984 | ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் அமெரிக்கா | Once Upon a Time in America | C'era una volta in America | 89% |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Sergio Leone creatore degli 'spaghetti-western' (இத்தாலியன்)
- ↑ "I film di Sergio Leone, re dello spaghetti western" (இத்தாலியன்)
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் செர்சோ லியோனி
- செர்சோ லியோனி at Allmovie
- Fistful-of-Leone.com
- Senses of Cinema film journal : Great Directors : Sergio Leone (2002 review by Dan Edwards PhD)
- A Fistful of Westerns பரணிடப்பட்டது 2006-09-03 at the வந்தவழி இயந்திரம்
- The Spaghetti Western Database
- Photo