செலீனினைல் புளோரைடு

வேதிச் சேர்மம்

செலீனினைல் புளோரைடு (Seleninyl fluoride) என்பது SeOF2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியத்தின் ஆக்சிபுளோரைடு சேர்மமாக செலீனினைல் புளோரைடு கருதப்படுகிறது.

செலீனினைல் புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
செலீனியம் இருபுளோரைடு ஆக்சைடு
இனங்காட்டிகள்
7783-43-9 Y
ChemSpider 10329070
InChI
  • InChI=1S/F2OSe/c1-4(2)3
    Key: CXZZMNPTKAXBFL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23236009
  • O=[Se](F)F
UNII U8FGC2C7TN
பண்புகள்
F2OSe
வாய்ப்பாட்டு எடை 132.97 g·mol−1
தோற்றம் நிறமற்ற புகையும் நீர்மம்[1]
கொதிநிலை 125[1] °C (257 °F; 398 K)
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 3.18±0.02 D[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செலீனியம் ஆக்சி இருகுளோரைடு
செலீனியம் ஆக்சிபுரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தயோனைல் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு தொகு

செலீனியம் ஆக்சிகுளோரைடும் பொட்டாசியம் புளோரைடும் சேர்ந்து வினைபுரிவதால் செலீனினைல் புளோரைடு உருவாகிறது.[3]

2 KF + SeOCl2 → 2 KCl + SeOF2

செலீனியம் டெட்ராபுளோரைடுடன் நீர் அல்லது செலீனியம் ஈராக்சைடு வினைபுரிவதாலும் செலீனினைல் புளோரைடு உருவாகிறது.[2]

SeF4 + H2O → SeOF2 + 2 HF
SeF4 + SeO2 → 2 SeOF2

செலீனியம் டையாக்சைடு ஆக்சைடு மற்றும் கந்தக டெட்ராபுளோரைடு ஆகியவற்றின் வினையும் செலீனினைல் புளோரைடை உருவாக்குகிறது.[4]

SeO2 + SF4 → SeOF2 + SOF2

வினைகள் தொகு

செலீனினைல் புளோரைடு சேர்மம் செனான் இருபுளோரைடுடன் சேர்ந்து வினைபுரிந்து Xe(OSeF5)2 சேர்மத்தை கொடுக்கிறது.[4]

3 XeF2 + 2 SeOF2 → Xe(OSeF5)2 + 2 Xe

புளோரின் வாயு மற்றும் பொட்டாசியம் புளோரைடுடன் செலீனினைல் புளோரைடு வினைபுரிந்து பெண்டாபுளோரோசெலீனியம் ஐப்போபுளோரைட்டை உருவாக்குகிறது.[5][6]

SeOF2 + KF → K+[SeOF3]F2→ K+[SeOF5]F2→ KF + SeOF6

பயன் தொகு

செலீனினைல் புளோரைடு ஒரு சிறப்பு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Holloway, John H.; Laycock, David (1983). "Preparations and Reactions of Inorganic Main-Group Oxide Fluorides". Advances in Inorganic Chemistry. Vol. 27. Elsevier. pp. 157–195. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/s0898-8838(08)60107-5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780120236275. பன்னாட்டுத் தர தொடர் எண் 0898-8838.
  2. 2.0 2.1 Bowater, I.C.; Brown, R.D.; Burden, F.R. (1967). "The microwave spectrum, structure, and dipole moment of seleninyl fluoride". Journal of Molecular Spectroscopy (Elsevier BV) 23 (3): 272–279. doi:10.1016/s0022-2852(67)80015-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2852. Bibcode: 1967JMoSp..23..272B. 
  3. Paetzold, R.; Aurich, K. (1962). "Untersuchungen an Selen-Sauerstoff-Verbindungen. XIII. Bildung und Darstellung von SeOF2 und SeOCl2" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie (Wiley) 315 (1–2): 72–78. doi:10.1002/zaac.19623150110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. 
  4. 4.0 4.1 Seppelt, Konrad; Lentz, Dieter; Klöter, Gerhard; Schack, Carl J. (2007-01-05). "Selenium Tetrafluoride, Selenium Difluoride Oxide (Seleninyl Fluoride), and Xenon Bis[Pentafluorooxoselenate(VI)]". Inorganic Syntheses. Hoboken, NJ, USA: John Wiley & Sons, Inc. pp. 27–31. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132555.ch9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132555. பன்னாட்டுத் தர தொடர் எண் 1934-4716.
  5. James Everett Smith, George H. Cady (1970). "Reactions of fluoroxypentafluoroselenium" (in en). Inorganic Chemistry 9 (6): 1442–1445. doi:10.1021/ic50088a029. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50088a029. பார்த்த நாள்: 2022-02-02. 
  6. Seppelt, Konrad (1973). "Halogenderivate der Pentafluoroorthoselensäure". Chemische Berichte (Wiley) 106 (1): 157–164. doi:10.1002/cber.19731060119. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2940. 
  7. House, James E. (2008). Inorganic chemistry. Academic Press. p. 524. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-356786-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செலீனினைல்_புளோரைடு&oldid=3893912" இலிருந்து மீள்விக்கப்பட்டது