செவ்வால் சிரிப்பான்
செவ்வால் சிரிப்பான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | து. மில்நெய்
|
இருசொற் பெயரீடு | |
துரோகலோப்டெரான் மில்நெய் டேவிட், 1874 | |
வேறு பெயர்கள் | |
|
செவ்வால் சிரிப்பான் (Red-tailed laughingthrush-துரோகலோப்டெரான் மில்நெய்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
துணையினங்கள்
தொகுசெவ்வால் சிரிப்பான் சிற்றினத்தின் கீழ் நான்கு துணையினங்கள் அடங்கும்:[2][3][4]
- துரோகலோப்டெரான் மில்நெய் மில்நெய் டேவிட், 1874 (புஜியான் மாகாணம், தென்கிழக்கு சீனா)
- துரோகலோப்டெரான் மில்நெய் சார்ப்பி ரைப்பான், 1901 (தெற்கு & கிழக்கு மியான்மர், வடமேற்குதாய்லாந்து, வடக்கு & மத்திய லாவோஸ், வடமேற்கு வியட்நாம், மற்றும் தென் சீனா (மேற்கு, தெற்கு & தென்கிழக்கு யுன்னார், மேற்கு குவாங்ஷி).
- துரோகலோப்டெரான் மில்நெய் சைனியாநம் இசுட்ரெசுமேன், 1930 (தென்கிழக்கு சீனா (தென்கிழக்கு சிச்சுவான், வடக்கு குயிசூ, மத்திய & வடகிழக்கு குவாங்ஷி, தெற்கு ஹுனான் மாகாணம், வடக்கு குவாங்டொங்).
- துரோகலோப்டெரான் மில்நெய் விட்ரி (தெலாகோர், 1932) (தெற்கு லாவோஸ், வியட்நாம்)
விளக்கம்
தொகுதுரோகலோப்டெரான் மில்நெய் சிரிப்பானின் உடல் நீளம் 26–28 வரை வளரலாம். இதன் எடை சுமார் 66–93 கிராம் (2.3–3.3 oz) இருக்கும். இந்த நடுத்தர அளவிலான சிரிப்பான்கள் மந்தமான பழுப்பு மஞ்சள்-சாம்பல் நிறத்தில், பிரகாசமான பழுப்பு-நிறத் தலையுடன் கரு முகத்துடன், வெண்மையான காதுகள் மறைந்து காணப்படும். இறக்கைகளும் வால்களும் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[3]
பரவலும் வாழிடமும்
தொகுசெவ்வால் சிரிப்பான் சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணலாம்.[2] இந்த பறவைகள் முக்கியமாகப் பரந்த இலை பசுமையான காடுகளின் அடிப்பகுதியில் வாழ்கின்றன.[3]
இவை மலைப்பகுதிகளில் வாழக்கூடியன. பொதுவாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,800–2,500 மீட்டர்கள் (5,900–8,200 அடி) உயரத்தில் வாழ்கின்றன.[5]
நடத்தை
தொகுசெவ்வால் சிரிப்பான், முக்கியமாகப் பூச்சிகள் மற்றும் சிறிய கணுக்காலிகள் (வண்டுகள், அசகாவம், முதலியன). ஆனால் பெர்ரி மற்றும் பழங்கள் (குறிப்பாக சௌரௌஜா இனங்கள்) ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது. இனப்பெருக்க காலம் ஏப்ரல் முதல் சூன் வரை நீடிக்கும். ஆண் மற்றும் பெண் என இரு பறவைகளும் கூடுகளைக் கட்டுவதில் பங்களிக்கின்றன. முக்கியமாகப் புற்கள் மற்றும் மூங்கில் இலைகளால் செய்யப்பட்ட நேர்த்தியான கோப்பை போன்று கூடுகள் காணப்படும்.[3] இது தரை மட்டத்திலிருந்து சுமார் 1 மீ உயரத்தில் கட்டப்பட்டும். பெண் சிரிப்பான் 2-3 முட்டைகளை இடுகின்றன. இவை 17-18 நாட்களுக்கு அடைகாக்கப்படுகிறது. குஞ்சுகள் இரண்டு பெற்றோர்களாலும் உணவளிக்கின்றன. குஞ்சுகள் 14-16 நாட்களில் வளர்ச்சியடைந்த பின் கூட்டை விட்டு வெளியேறுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Trochalopteron milnei". IUCN Red List of Threatened Species 2016: e.T22715764A94468047. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715764A94468047.en. https://www.iucnredlist.org/species/22715764/94468047. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ 2.0 2.1 Biolib
- ↑ 3.0 3.1 3.2 3.3 Collar, N. & Robson, C. (2019) Handbook of the Birds of the World Alive .
- ↑ Gill F. & Donsker D. IOC World Bird List 7.3
- ↑ Morten Strange Photographic Guide to the Birds of Thailand: Including Southeast Asia & the Philippines
வெளி இணைப்புகள்
தொகு- Dollinger P. Zootier-Lexikon
- இயற்கைவாதி